மின்சார வாரியம் மீண்டும் அதிரடி.. நாளை முதல் எல்லாமே டிஜிட்டல்.. இனி டேபிளில் ஃபைல் தேங்காது.. சபாஷ்
சென்னை: பொதுமக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் ஏராளமான அறிவிப்புகளை தமிழக மின்வாரியம் வெளியிட்டு வருகிறது.. அந்தவகையில், தற்போதும் புதிய அதிரடியை கையில் எடுத்துள்ளது.. இந்த அதிரடியானது, நாளை முதல் அமலுக்கு வர உள்ளது.
கோப்புகளையும் கையாளுவதில், வெளிப்படைத்தன்மை ஏற்படுத்த, முழுக்க 'டிஜிட்டல்' முறைக்கு மாறுகிறது, தமிழக மின் வாரியம். நாளை முதல் இது அமலுக்கு வருகிறது.

அரசுத் துறைகளில் காகித பயன்பாட்டைக் குறைக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் தமிழ்நாடு மின்னாளுமை முகமை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன...
காகிதமில்லா சட்டப்பேரவை: அதன்படி, சட்டப்பேரவை செயலகத்தின் பல்வேறு ஆவணங்கள், கோப்புகள் கணினிமயமாக்கப்பட்டன.. "காகிதமில்லா சட்டப்பேரவை" திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதன்மூலம் காகிதச் செலவை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது பலரது கவனத்தையும் பெற்றிருந்தது.
அதேபோல, அரசு அலுவலகங்களிலும் காகித கோப்புகளுக்கு பதில், மின்னணு கோப்புகளைத் தயாரிக்கும் நடைமுறை "மின்-அலுவலகம்" திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம், அரசு அலுவலகங்களின் வழக்கமான பணிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன. இதற்காக பிரத்யேக மென்பொருள் உருவாக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஒப்பந்த நிறுவனங்கள்: அந்தவகையில், தமிழக மின்வாரிய துறையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.. இதற்கு காரணம், மின் சாதனங்கள் கொள்முதல், கட்டுமானம் உள்ளிட்ட பணிகள், ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக செய்யப்படுகின்றன. இந்த பணிகளுக்கு மதிப்பீடு தயாரிப்பது, ஒப்புதல் பெறுவது, அனுமதி அளிப்பது என பல்வேறு பணிகளுக்கு காகித கோப்புகளே தயாரிக்கப்படுகின்றன. இவற்றை ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அலுவலர்கள் தயாரித்து, உயர் அதிகாரிகள் வழியாக, மின் வாரியத் தலைவரிடம் ஒப்புதல் பெறுவது வழக்கமாகும்.
இது தவிர, மாவட்ட மற்றும் மண்டல அலுவலகங்களில் செய்யப்படும் முக்கியப் பணிகளுக்கு, தலைமை அலுவலக உயர் அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதற்காக, தபால் அல்லது பணியாளர்கள் வாயிலாக கோப்புகள் அனுப்பப்பட்டு, ஒப்புதல் பெறப்படுகிறது. ஆனால், கோப்புகள் தயாரிக்க, அதிக காகிதம் பயன்படுத்துவதால், செலவுகள் எகிறிவிடுகின்றன. அதுமட்டுமல்லாமல், கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்க தாமதம் செய்வது, கோப்பை வேண்டுமென்றே தொலைத்து விடுவது என ஏகப்பட்ட முறைகேடுகளும் நடக்கின்றன.
நாளை முதல் அமல்: இதற்கெனவே கடந்த 2021-ல் "இ - ஆபிஸ்" என்ற நடைமுறைகொண்டுவரப்பட்டது. அதாவத கம்ப்யூட்டரிலேயே கோப்புகளை கையாளும் முறை இதுவாகும்.. ஆன்லைனில் இப்படியொரு வசதி இருந்தாலும், காகித கோப்பு நடைமுறையே நீடித்து வந்தது.. எனவே, இதனை முழுதுமாக தடுத்து நிறுத்த மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக மாவட்ட, மண்டல அலுவலகங்களில் இருந்து, தலைமை அலுவலகத்தில் ஒப்புதல் பெற, காகித கோப்பிற்கு பதில், கணினி வழி நடவடிக்கைகள், நாளை முதல் அமலுக்கு வருகின்றன.
இதேபோல், தலைமை அலுவலகத்தில், மதிப்பீட்டிற்கு ஒப்புதல் பெறுவது, அனுமதி அளிப்பது, விஜிலென்ஸ் மற்றும் அமலாக்க பிரிவு கோப்புகள் என அனைத்துமே டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன.
புதிய நடைமுறை: இந்த புதிய நடைமுறையால், எந்த கோப்பு, எந்த அதிகாரியிடம், எவ்வளவு நேரம் இருந்தது? என்பதையெல்லாம் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.. மேலும், தாமதம் செய்யாமல், விரைந்து ஒப்புதல் பெற உதவும் இந்த முறையால், வெளிப்படைத்தன்மை ஏற்படும் என்று மின்சார வாரியம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications