இரவில்.. சென்னை மயிலாப்பூரில் திடீர் சத்தம்? என்னாது கரண்ட் கட்? அதிரடியில் மின்சார வாரியம்.. சபாஷ்
சென்னை: மயிலாப்பூரில் நள்ளிரவு ஏற்பட்ட மின் துண்டிப்பை கண்டித்துபொதுமக்கள், ராயப்பேட்டையில் உள்ள மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் எப்போதுமே மின்தேவை அதிகமாகவே இருக்கும்.. அதிலும் இந்த வருடம் இன்னும் அதிகமாகவே இருந்து வருகிறது.. கடந்த ஜனவரியிலேயே, 17,000 மெகா வாட்டை மின்தேவை தாண்டிவிட்டது.

கோடை காலம் தொடங்கியதையடுத்து நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், பொது மக்கள் அவதியடைந்துள்ளனர். வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளதால் மின் விசிறி மற்றும் குளிர்சாதன கருவிகளின் தேவையும் அதிகரித்துள்ளது.
கோடை காலம்: ஏசி, ஏர்கூலர், மின்விசிறிகள், ஃபிரிட்ஜ் போன்றவற்றின் பயன்பாடுகள் வழக்கத்தைவிட அதிகளவில் இருக்கும் என்றே கூறப்பட்டது. அதற்கேற்றவாறு, மின் நுகர்வு இதுவரை இல்லாத அளவாக இம்மாதம் 17ம் தேதி 44.27 கோடி யூனிட்களாக அதிகரித்தது. அதிலும் கடந்த வாரம் 18ம் தேதி, ஒரே நாளில் மட்டும் 55 லட்சம் யூனிட் உயர்ந்து, 44.82 கோடி யூனிட்களாக அதிகரித்திருந்தது.
எனினும், பொதுமக்கள் பாதிப்படையாதவாறு, மின்சார துறை அனைத்து நடவடிக்கைகளையும் சீராக எடுத்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, TANGEDCO ஏற்கனவே தமிழகம் முழுவதும் பராமரிப்புப் பணிகளையும் மேற்கொண்டிருந்த நிலையில், மீட்டர் பாக்ஸ் பழுதடைந்தாலோ அல்லது மின்தடை ஏற்பட்டாலோ அல்லது கூடுதல் மின்கட்டணம் வசூலித்தாலோ, 94987 94987 என்ற எண்ணில் புகார்களை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மின்தடை: எனினும் ஆங்காங்கே மின் தடை ஏற்பட்டு வருகிறது.. மின் சாதன கருவிகளை ஒரேநேரத்தில் அனைவரும் பயன்படுத்துவதால் அடிக்கடி மின் தடை மற்றும் மின் துண்டிப்பு ஏற்படுகிறது.. அந்தவகையில், நள்ளிரவு 12 மணியளவில் மயிலாப்பூர் திருவள்ளுவர் தெரு, கணேசபுரம், திருவீதி அம்மன் தெரு உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது... நீண்ட நேரமாகியும் மின் விநியோகம் வழங்கப்படவில்லை.
எனவே, ஆத்திரம் அடைந்த மயிலாப்பூர் பகுதி மக்கள் நள்ளிரவு 12.30 மணியளவில் ராயப்பேட்டையில் உள்ள மின்வாரிய அலுவலகம் எதிரே சாலையில் அமர்ந்து முற்றுகையிட்டு உடனடியாக மின் விநியோகம் வழங்கும்படி கோஷமிட்டனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுவிட்டது..
அறிவுறுத்தல்: இதற்கு பிறகு, தகவல் அறிந்து ராயப்பேட்டை காவல் உதவி ஆணையர் கிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடம் விரைந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், மின் விநியோகம் வர ஏற்பாடு செய்தனர். இதையடுத்து போராட்டத்தை பொது மக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்... இதனிடையே. அவசரகாலம் தவிர சப்ளையை நிறுத்தக்கூடாது என கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications