AC கூலிங் கம்மியா இருக்கா? உங்க பெட்ரூம் முழுக்க ஏசி காற்று பரவணுமா? அப்ப இந்த 6 டிப்ஸ் போதுமே, வாவ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏசியை பயன்படுத்தும்போது, திடீரென சத்தம் வந்துவிடுகிறதா? அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

தற்போது கோடை காலம் துவங்கி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருக்கிறது.. கடும் வெப்பமும், புழுக்கமும் அதிகரித்து காணப்படுகிறது.. இதன்காரணமாக, வீடுகளில் AC, Air Cooler அதிகமாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன..

Amazing Tips to get Better Cooling from AC and do you want Air Condition ac cooling more in your Bed Room

ஆனால், ஏசியை போட்டதுமே, ரூமில் கூலிங் வருவதில்லை என்று பலரும் சொல்கிறார்கள்.. மேலும் சிலர், கூலிங் குறைவாக இருப்பதாக சொல்கிறார்கள்.. இதற்கு என்ன காரணம்? கூலிங் அதிகப்படுத்த இதோ குட்டி குட்டி டிப்ஸ் பார்க்கலாம்.

வெப்பநிலை: முதலில், குறைந்த வெப்பநிலையில் ஏசியை ஓடவிடாமல், 16 அல்லது 18 டிகிரியில் வைப்பதே நல்லது. மனித உடலுக்கு தேவையானது வெப்பநிலை 24 டிகிரி என்பதால், வெப்பநிலையை 24 ஆகவே வைத்திருக்க வேண்டுமாம்..

ஸ்பிளிட் ஏசிகளை ரூமில் பொருத்தும்போதே, சூரிய வெளிச்சம் படாத, நிழல் பகுதியில் சுவற்றில் பொருத்த வேண்டும்.. அதேபோல, ஏசி அறையில் தங்கும் நபர்களின் அளவை பொறுத்தம் குளிர்தன்மை மாறுபடும்.. அதிகமான அளவில் ரூமில் தங்கியிருந்தால், ஏசி காற்று குளிரும் குறைவாகவே இருக்கும்.

ஃபில்டர்கள்: அதேபோல, ACயை அடிக்கடி சர்வீஸ் செய்தே பயன்படுத்த வேண்டும். மாசு காற்று, அதே ரூமில் பரவி, ஏசியின் ஃபில்டர்களில் படிந்துவிடும்.. எனவே, ஏசி ஃபில்டர்கள் சுத்தமாக இருக்கின்றனவா என்பதை அடிக்கடி பார்த்து கொள்ள வேண்டும். ஒருவேளை ஃபில்டர்கள் சரியாக இருந்தாலும்கூட, 2 வாரங்களுக்கு ஒருமுறை ஃபில்டர்களை சுத்தம் செய்து கொள்ளலாம்..

அதுமட்டுமல்ல, ஜில் காற்று ரூமிலேயே தங்கியிருக்க வேண்டுமானால், ஏசி ரூம் கதவை சரியாக மூடிவைக்க வேண்டும்.. அதேபோல, ஜன்னல்களையும் முழுமையாக மூடி வைக்க வேண்டும்.

ஜன்னல், கதவு: கதவு, ஜன்னல்களை அடிக்கடி திறந்து மூடுவதால், ஏசி காற்று, வெளியே செல்வதுடன், வெளியிலிருக்கும் அனல் காற்றும் ரூமுக்குள் புகுந்துவிடும். மேலும், அடிக்கடி ஜன்னல் மற்றும் கதவை திறந்து வைத்தால் ஏசி விரைவில் பழுதடைந்து விடும்.

ஏசியை எப்போதுமே ஓடவிட்டுக் கொண்டேயிருக்கக்கூடாது.. "ஆன்" மோடிலேயே ஏசி இருந்தால், அந்த ரூமின் வெப்பநிலை ஏசியை பாதித்துவிடும்.. ஓரளவு ரூம் குளிர்ச்சியானதும், ஏசியை நிறுத்தி வைத்துவிட வேண்டும். ரூமில் குளிர்த்தன்மை குறைந்ததுமே, மறுபடியும் ஏசியை ஓடவிடலாம். அதேபோல, ஏசியிலிருந்து வெளியேறும் காற்றின் அளவை பொறுத்துதான், அந்த ரூமின் குளிர்ச்சி இருக்கும் என்பதால், ஏசியின் வெப்ப நிலையை குறைத்து வைக்கக்கூடாது.

ஜில் காற்று: அதுமட்டுமல்ல நீங்கள் பயன்படுத்தும் ஏசியும், நல்ல திறனுள்ள, நல்ல கொள்ளளவு கொண்ட ஏசியாக இருக்க வேண்டும்.. ஏனென்றால், ரூமின் அளவைவிட, ஏசி கொள்ளளவின் அளவு குறைவாக இருந்தால் ஜில் காற்று திறனும் குறைவாக இருக்கும். ..

எனவே, ரூமுக்கு தகுந்தாற்போல ஏசியை பொருத்தலாம். உதாரணமாக, பெட்ரூமின் அளவு, 100 சதுர அடி என்று வைத்து கொண்டால், 1-டன் அளவுள்ள ஏசி பயன்படுத்த வேண்டும்.. 150 சதுர அடி என்றால், ஒன்றரை டன் ஏசியும், 200 சதுர அடி ரூம் என்றால், 2 டன் ஏசியும் பயன்படுத்தினால், ஏசி காற்று ரூமிலேயே தங்கியிருக்கும்.

திடீர் சத்தம்: ஏசி ஓடிக்கொண்டிருக்கும்போது, ஏசியிலிருக்கும் ஃபேன் பயன்படுத்தக்கூடாது... ஏசி ஓடிக்கொண்டிருக்கும்போது, திடீரென ஏதாவது சத்தம் ஏற்பட்டால் ஏசியை நிறுத்திவிட வேண்டும்.. இப்படி சத்தம் வந்தாலே, ஏசிக்குள் ஏதோ ரிப்பேர் ஆகிவிட்டது என்று அர்த்தம்.. உடனடியாக மெக்கானிக்கை அழைத்து வந்து பார்த்துவிட வேண்டும்.

அடைப்புகள்: அதேபோல, ரூமீல் நிறைய பொருட்களை அடைத்து வைத்திருந்தாலும், ஏசி குறைவாகவே பரவும்.. காரணம், ஏசி-யினால் அந்த ரூமிலிருக்கும் ஒவ்வொரு பொருளும் குளிர்விக்கப்படுகிறது. அதனால், அடைப்பு குறைவாக இருந்தால்தான், ஏசிக்கு செலவாகும் மின்சாரமும் குறைவாக இருக்கும்... ஏசி குளிரும் முழுமையாக கிடைக்கும்.

அதுமட்டுமல்ல, ஒரே சமயத்தில் பல விளக்குகளை ரூமில் எரிய விடக்கூடாது.. ஏனென்றால், அத்தனை வெப்பத்தையும் ஏசியே இழுத்து கொள்ளும்.. ஏசியின் கொள்ளளவு திறன் போதுமானதாக இல்லாவிட்டால் இன்னும் சிக்கலாகிடும்.. எனவே, விளக்குகளை தேவையில்லாமல் எரிய விடாமல் இருந்தாலே, ரூம் கூலிங் ஆகிவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+