விர்ன்னு எழுந்த சடலம்.. படக்குனு இளைஞரை பிடித்து இழுத்த "வெள்ளை உருவம்".. தூக்கி வாரிப்போட்டு.. வீடியோ
சென்னை: இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகியிருக்கிறது.. இதை பார்த்த நெட்டிசன்கள், ஒரு நொடி பதறி போய்விடுகிறார்கள்.. கடந்த 2 நாட்களாகவே இந்த விடியோதான் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி கொண்டிருக்கிறது. ஏன் தெரியுமா?
சோஷியல் மீடியாவில் எப்போதும் வித்தியாசமான வீடியோக்கள் என்றாலே, அது உடனுக்குடன் ட்ரெண்டிங் ஆகிவிடும்.. அதேபோன்று இதயத்தைத் தொடும் அல்லது அதிர்ச்சியூட்டும் மற்றும் உற்சாகமான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி விடுவது வழக்கமாகும்.

சம்பவங்கள்: சில நேரத்தில், வித்தியாசமான அல்லது அரிய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் போட்டோக்களும், இணையவாசிகளை கவர்ந்துவிடும். இப்போதும் ஒரு வீடியோ வெளியாகியிருக்கிறது.. இதைப்பார்த்ததுமே நெட்டிசன்கள் ஒரு செகண்ட் பதறிப்போய் விட்டார்கள்.
இளைஞர் ஒருவர் தன்னுடைய காதலியிடம் பேசுவதற்காக தனிமையான இடத்தில் ஒதுங்கியிருக்கிறார். ஒரு மண் தரையில் படுத்துக் கொண்டு, கையில் சிறிய மண்வெட்டியையும் பிடித்துக்கொண்டிருக்கிறார்.
மண்வெட்டி: காதலியுடன் போனில் பேசிக்கொண்டே, அந்த மண்வெட்டியால் மெல்ல தரையை தோண்டுகிறார்... அங்கே ஒரு பள்ளம் தென்படுகிறது.. காதலியிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டே, பள்ளத்தை நோண்டி கொண்டேயிருக்கிறார்.
கொஞ்ச நேரத்தில், அந்த சின்ன பள்ளம், பெரிய குழியாகிவிடுகிறது.. ஆனால், அந்த பள்ளம் எவ்வளவு பெரிதாகிவிட்டது என்பதைகூட பேச்சு சுவாரஸ்யத்தில் அந்த இளைஞர் கவனிக்கவில்லை.. அப்போது திடீரென மண்ணுக்குள் புதைத்து வைத்துள்ள வெள்ளை நிற சடலம் ஒன்று குபீரென மேலே எழுந்துவிடுகிறது.. அந்த இளைஞரின் கையை பிடித்து விடுகிறது..
வெள்ளை சடலம்: அப்போதுகூட அந்த இளைஞர் அதை பொருட்படுத்தாமல், காதலியுடன் போன் பேசிக்கொண்டே இருக்கிறார்.. அதற்கு பிறகுதான் மெல்ல திரும்பி பார்த்து, அலறியடித்து ஓட முயல்கிறார்.. ஆனால் அந்த சடலம் அவரது கையை கெட்டியாக பிடித்து கொள்கிறது... பிறகு ஒருவழியாக, சடலத்திலிருந்து தன்னுடைய கையை விடுவித்து கொண்டு ஓடுகிறார்.
இன்ஸ்டாகிராமில் சித்தரிக்கப்பட்ட காமெடி வீடியோவாக இது ஷேர் ஆகியிருக்கிறது.. சித்தரிக்கப்பட்டது என்றாலும், இந்த வீடியோவை பார்த்து பலரும் விழுந்து விழுந்து சிரித்து கொண்டிருக்கிறார்கள். iamcaro_b என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது...
ஷேர் வீடியோ: "நல்லவேளை, உள்ளே நீயும் சேர்ந்து விழாமல் போனியே, போனில் பேசும் காதலியும் இப்படித்தான் கையை பிடிச்சிட்டு விடமாட்டாள்" என்றெல்லாம் இணையவாசிகள் கமெண்ட்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.. இந்த வீடியோ பதிவானதுமே, கொஞ்ச நேரத்திற்குள் 3 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications