OTT APP: அமேசான் கைவசம் பெண்குயின்... விரைவில் வெளியீடு!
சென்னை: கோவிட் 19 தொற்று லாக்டவுன் காலத்தில் நடிகர் நடிகைகள் உடல் எடையை குறைப்பது ஃபிட்னெஸ் என்று களம் இறங்கினர். இப்படி வொர்கவுட் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ் செம ஸ்லிமாக காட்சி அளிக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரடகஷன் பணிகளும் நிறைவடைந்த நிலையில், படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது,.
இந்த சமயத்தை நன்றாக பயன்படுத்திக்கொண்டு வரும் அமேசான் இயங்குதளம், கீர்த்தி சுரேஷின் பெண்குயின் படத்தையும் வாங்கிவிட்டதாம். விரைவில் வெளியீடு இருக்கும் என்று சொல்கிறார்கள்.

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் பழைய நடிகை மேனகாவின் மகள். கேரளாவில் பிறந்த கீர்த்தி சுரேஷ், நன்றாக தமிழ் பேசக்கூடிய நடிகை. சொந்த குரலில் பேசி நடித்து வருகிறார். நடிகையர் திலகம் சாவித்திரி கதாபாத்திரத்துக்கு நன்றாக பொருந்தி, மிக அருமையாக நடித்து இருப்பார். பல விருதுகளும் இந்த படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷுக்கு கிடைத்தது.

டோன்ட் லைக் பிராம்ப்ட்டிங்
படப்பிடிப்பில் டோன்ட் லைக் பிராம்ப்ட்டிங் என்று டயலாக் பேப்பர்களை வாங்கி மனப்பாடம் செய்து நடிப்பவர் கீர்த்தி சுரேஷ். இதனாலேயே இவரை பல இயக்குனர், நடிகர்களுக்கும் பிடிக்குமாம். உடல் எடையை கொஞ்சம் குறைத்தால் தேவலை என்று ரசிகர்கள் ஆதங்கப்பட்டுக் கொண்டு இருந்தனர்.

லாக்டவுன் பீரியட்
ரசிகர்களின் விருப்பத்துக்கு இணங்க இந்த லாக்டவுன் காலத்தை பயன்படுத்திக்கொண்டு செம ஸ்லிம்மாக மாறி இருக்கார் கீர்த்தி சுரேஷ். ரசிகர்களுக்கு இவரை பார்க்கும் அவள் எழுந்துள்ளது. இந்த சமயத்தில்தான் பெண்குயின் படத்தின் வெளியீடு விஷயம் வெளியாகி இருக்கிறது.

அமேசான் இயங்குதளம்
லாக்டவுன் ஆரம்பித்த ஓரிரு வாரத்திலேயே விவேக் நடித்த தாராள பிரபு படம் அமேசான் இணைய தளத்தில் வெளியானது. அடுத்து ஒரு சில படங்களையும் கைப்பற்றி வெளியிட்டு இருக்கும் அமேசான், பெண்குயின் படத்தையும் இயங்குதளத்தில் வெளியீடு செய்ய முடிவு செய்து, படத்தை விலை பேசி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கிடப்பில் போட்டால்
தியேட்டர் எப்போது திறக்கப்படும் என்று தெரியாது. அப்படியே திறந்தாலும்.. எத்தனை கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் தெரியாது. எல்லாவற்றையும் விட ரசிகர்கள் தியேட்டர்களுக்கு எந்த வித பயமும் இன்றி வருவார்களா என்றும் தெரியாது. மக்களிடம் தியேட்டரில் சென்று படம் பார்க்க காசு இருக்கிறதா என்று தெரியாது.இந்த நிலையில், எடுத்த படத்தை கிடப்பில் போடுவதும் நஷ்டம்தான்...இது எல்லாவற்றையும் கணக்கு போட்ட பெண்குயின் படக்குழு, அமேசான் இயங்குதளத்துக்கு படத்தின் உரிமத்தை வழங்கி இருக்கிறது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications