3 மணிக்கு போன மெசேஜ்.. அதிகாலையிலேயே ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அமேசான்.. அதிர வைத்த Layoff
வாஷிங்டன்: அமேசான் நிறுவனம் கடந்த 28 ம் தேதி 14,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இதனால் உலகம் முழுவதும் உள்ள ஊழியர்கள் பணியை இழந்தனர். தற்போது அமேசான் நிறுவனம் தங்களை எப்படி பணி நீக்கியது என்பது பற்றி பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் அதிகாலை 3 மணியளவில் அமேசான் தனது ஊழியர்களுக்கு செல்போனில் முக்கிய மெசேஜ் அனுப்பியதும், அதில் இடம்பெற்றிருந்த தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.
அமேசான் நிறுவனம் மொத்தம் 30 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக கடந்த 28 ம் தேதி முதல் 14 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கையை தொடங்கியது.

அதன்படி உலகம் முழுவதும் பணியாற்றி வரும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். பணி நீக்கம் தொடர்பாக ஊழியர்களுக்கு இ-மெயில் மற்றும் செல்போன் மெசேஜ் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் தற்போது ஒவ்வொரு ஊழியர்களும் எப்படி பணி நீக்கம் செய்யப்பட்டனர் என்பது பற்றிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. பலரும் அதுபற்றி சமூக வலைதளங்களில் தங்களுக்கு நேர்ந்த துயரங்களை பதிவுகளாக செய்து வருகின்றனர். அந்த வகையில் பலரும் தங்களை பணி நீக்கம் செய்துள்ளதாக மெயில் வருவதற்கு முன்பாக செல்போனில் மெசேஜ் அனுப்பி வைக்கப்பட்டதாக தெிரவித்துள்ளார். இதுதொடர்பாக ரெடிட் வலைதள பக்கத்தில் ஒருவர் கூறியுள்ளதாவது:
அமேசான் பணி நீக்க மெயில் வருவதற்கு முன்பாக செல்போனுக்கு மெசேஜ் வந்தது. அதில் From Amazon: அலுவலகம் வருவதற்கு முன்பாக பர்சனல்/அலுவலக இ-மெயில்கள், ஸ்பேம் உள்ளிட்டவற்றை சோதித்து கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மெசேஜ் அதிகாலை 3 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது தான் நான் பார்த்தேன்.
அந்த மெசேஜில் இருந்த லிங்க் வழியாக அவுட்லுக்கை பயன்படுத்த முடியவில்லை. இதனால் எனது லேப்டாப், சரி, நேரம். நான் இதை அதிகாலை 3 மணிக்குப் பெற்றேன், பின்னர் உரையில் உள்ள இணைப்புடன் கூட அவுட்லுக்கைப் பயன்படுத்த முடியவில்லை. எனது மடிக்கணினி, ஸ்லாக், மின்னஞ்சல், எல்லாவற்றிலிருந்தும் நான் சுழன்று கொண்டிருந்தேன்.
இறுதியில் எனது தனிப்பட்ட கணக்கில் மின்னஞ்சல் கிடைத்தது, பணிநீக்கம் தொடர்பான ஆவணங்களுக்கு எனது பணி மின்னஞ்சலை அணுகுவதற்கான கூடுதல் வழிமுறைகளைக் கண்டேன். இது மெதுவாக இருந்தது."ஸ்லாக், இ-மெயில் உள்ளிட்டவை வேலை செய்யவில்லை. அப்போது தான் எனது பர்சனல் இ-மெயில் முகவரிக்கு மெயில் வந்தது. அதில் பணி நீக்கம் செய்யப்பட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டு இருந்தது'' என்று கூறியிருந்தார்.
அதேபோல் இன்னொருவர் தனது லிங்க்ட்இன் பக்கத்தில் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார். இதுபற்றி, ‛‛ஒரு சாப்ட்டர் மூடினால் இன்னொரு சாப்ட்டர் திறக்கும். அதிகாலை 3 மணிக்கு எனக்கு மெசேஜ் வந்தது. இந்த மெசேஜ் மூலமாக கடந்த 3 ஆண்டுகளாக அமேசான் உடனான எனது பணி முடிவுக்கு வந்தது.
அமேசானில் பணிபுரிவது ஒரு பணி என்பதை தாண்டி வளர்ச்சி, தலைமைத்துவத்துக்கு உதவியது. அமேசான் உடனான எனது பணி முடிவுக்கு வந்தாலும் அங்கு கிடைத்த அனுபவத்துக்கு நன்றி உள்ளவராக இருப்பேன். என்னுடைய பணியாற்றிய அனைத்த சக ஊழியர்களுக்கும் நான் தொடர்ந்து நன்றி கடன் உள்ளவராக இருப்பேன்'' என்று கூறியுள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications