நடிகை ராதா புகாருக்கு அம்பிகா பதிலடி.. ஏஆர்எஸ் கார்டன் நிலத்தை அபகரித்ததாக பரபர குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரூ.46 கோடி மோசடி செய்ய முயன்றதாக நடிகை ராதா அளித்த புகாருக்கு அவரது சகோதரியும் நடிகையுமான அம்பிகா விளக்கம் அளித்துள்ளார். மதுரவாயலில் ஏ.ஆர்.எஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 50 செண்ட் நிலத்தை ராதா முறைகேடாக அபகரித்தாக குற்றம் சாட்டியுள்ளார்.

ரூ.46 கோடி பணமோசடி செய்ததாக தனது அக்காவும், நடிகையுமான அம்பிகா மீது நடிகை ராதா கண்ணீர் மல்க புகார் அளித்தார். சென்னை காவல் ஆணையகரத்தில் நடிகை அம்பிகா மீது புகாரளித்த ராதா, பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ராதா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

Ambika

அம்பிகா விளக்கம்

ராதா வைத்த புகாரையடுத்து, அம்பிகா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்பிகா தரப்பில் கூறியதாவது:-

மதுரவாயலில் ஏஆர்.எஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 50 செண்ட் நிலத்தை ராதா முறைகேடாக அபகரித்தார். சென்னையில் உள்ள ஏஆர்.எஸ் கார்டன் சொத்துகளை கேரளாவில் முறைகேடாக ராதா பத்திரப்பதிவு செய்துள்ளார். 1,299 கிராம் தங்கத்தை ராதா திருடிவிட்டார். ராதாவின் மோசடி குறித்து கேரள மாநிலம் வட்டியூர்காவு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்திலும் ராதாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளேன். நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தையும் மறைத்துவிட்டு சதி நடந்தது போல ராதா புகார் அளித்துள்ளார். ராதா மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்ததால் தப்புவதற்காக முன் கூட்டியே போலீசில் பொய் புகார் அளித்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

ராதா வைத்த குற்றச்சாட்டு

தமிழ் திரையுலகில் 1980-90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்கள் அம்பிகா- ராதா, கேரளத்தை பூர்வீகமாக கொண்ட இருவரும் சகோதரிகள் ஆவர். சென்னைக்கு அருகே ஏஆர்எஸ் என்ற கார்டன் என்ற பெயருடன் ஸ்டூடியோ ஒன்றை 1983-ஆம் ஆண்டு இருவரும் தொடங்கினர். தற்போது, ஏஆர்எஸ் கார்டன் விவகாரத்தில் சகோதரிகள் இருவருக்கிடையே பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.

ஸ்டூடியோவாக இருக்கும் அந்த கார்டனில் ஏராளமான சினிமா படப்பிடிப்புகளும் சீரியல் படப் பிடிப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஸ்டூடியோவில் உள்ள பங்குகளை விற்பதில் ராதாவுக்கும் அம்பிகாவுக்கும் பிரச்சினை இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான், 46 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக அம்பிகா மீது ராதா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார். இது குறித்து ராதா அளித்த பேட்டி வருமாறு:-

போரூரில் உள்ள தனியார் வங்கியில் ஏஆர்எஸ் கார்டன் பெயரில் நடப்புக் கணக்கு எனக்கு உள்ளது. கார்டன் பராமரிப்பு பணிகள், பணியாளர்கள் சம்பளம் போன்றவற்றிற்காக பணம் எடுக்க தொகை நிரப்பப்படாத எனது கையெழுத்திட்ட செக்குகளை சென்னையில் நான் தங்கும் வீட்டில் வைத்துச் செல்வது வழக்கம். கடந்த 2025 ஆம் ஆண்டு நிறுவனத்தின் பெயரை ஆர்.ஆர். கார்டன்ஸ் என மாற்றிவிட்டேன்.

நான் இல்லாத நேரம் பார்த்து

வங்கிக்கும் இதுபற்றி தகவல் தெரிவித்துவிட்டேன். கையெழுத்திட்டு வைத்து இருந்த செக்குகளை மறந்துவிட்டேன். அந்த செக்குகள் மூலமாக பணப்பரிமாற்றம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக எனக்கு மெசேஜ் வந்தது. எஸ்எம்எஸ் வந்ததும் நான் வங்கியில் பேசி அதை நிறுத்த சொல்லிவிட்டேன். அந்த செக் புக்கை நிரப்பியது எனது தம்பி மல்லிகார்ஜுன். ஏற்கெனவே என் தம்பி மீது பெமா வழக்கு உள்ளது.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள எனக்கு சொந்தமான வீட்டின் தரைதளத்தில் எனது அக்கா அம்பிகா வசித்து வருகிறார். நான் இல்லாத நேரம் பார்த்து மேல்தளத்தில் எனது ரூமுக்கு சென்று திருடி பண மோசடியில் அக்காவும் தம்பியும் ஈடுபட முயன்றுள்ளனர். அக்கா என நம்பி என் வீட்டில் தங்க வைத்தேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கண்ணீர் மல்க புகாரளித்து இருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+