தொட்டீங்க 10 வருஷம் ஜெயில்.. ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது கை வைத்தால் சட்ட நடவடிக்கை: மா.சுப்பிரமணியம்
சென்னை: உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் மற்றும் அதன் டிரைவர்கள்-பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் எச்சரித்துள்ளார். ஏற்கனவே உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் மற்றும் அதன் டிரைவர்கள்-பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது. இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்திட தமிழக அரசை தூண்டிவிட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு இருக்கிறார். திருச்சி துறையூரில் நடந்த டிரைவர் மற்றும் பெண் ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார்கள் கூறப்பட்டது.

தமிழக அரசு நடவடிக்கை
இதுபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சென்னை சைதாப்பேட்டையில் நடந்து வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது, "எங்கேயாவது விபத்து ஏற்பட்டால் 8 முதல் 10 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் விரைந்து சென்று உயிர்களை காக்க வேண்டும்.
எடப்பாடி எங்கு சென்றாலும் அங்கு ஆம்புலன்ஸ் வருவதாக சொல்றாங்க. அவர் பெரும்பகுதி ஆதரவு திரட்டுவதற்கு பிரதான சாலையில்தான் செல்கிறார். இவர் ஆம்புலன்ஸ் வரும் வழியில் கூட்டத்தை கூட்டி நான் வரும் வழியில் ஆம்புலன்ஸ் விடுவதாக சொல்லி இருக்கிறார்.
அரண்டவன் கண்ணுக்கு
தமிழில் இதற்கு பழமொழி உண்டு, "அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்றெல்லாம் சொல்வார்கள். இந்த ஆம்புலன்ஸ் பார்க்கும்போது அவருக்கு வேறு ஏதோ ஞாபகம் வருகிறது என்று நினைக்கின்றேன். இது தவறான விஷயம். அதுவும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பெயரை நோட் பண்ணு என்றெல்லாம் சொல்கிறார். இது மருத்துவத்துறையில் பணிபுரியும் மருத்துவப் பணியாளர்களை மிரட்டும் தொனி.
ஒரு முன்னாள் முதல்வர், மிரட்டுகின்ற தொனியில் பேசுவது என்பது அநாகரிகமான செயல். அவர் இத்துடன் இதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
சட்ட நடவடிக்கை பாயும்
மேலும், இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்லும்போது, "தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ்கள் 1,330 என்ற எண்ணிக்கையில் உள்ளது. இதன் மூலம் நாள்தோறும் நூற்றுக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.
சாலைகளில் ஆம்புலன்ஸ்கள் வந்தால் வழிவிட்டு விலகுவது தான் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படும் மரபாகும். ஆனால் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு, இதுகுறித்து கூட தெரியவில்லை.
அவர் சாலையில் நின்று பேசும்போது வந்த ஆம்புலன்ஸ் டிரைவரிடம், "இனி நான் பேசும்போது ஆம்புலன்ஸ் வந்தால் அதில் உள்ள டிரைவர் அதே ஆம்புலன்சில் நோயாளியாக செல்வார்'' என்று மிரட்டியிருக்கிறார்.
உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஆம்புலன்ஸ் டிரைவர்களை இது போல மிரட்டலாமா? திருச்சி துறையூரிலும், ஆம்புலன்ஸ் மீதும், அதில் இருந்த டிரைவர் மற்றும் பெண் ஊழியர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஏற்கனவே உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் மற்றும் அதன் டிரைவர்கள்-பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது. இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்திட தமிழக அரசை தூண்டிவிட வேண்டாம் என்று எச்சரிக்கை செய்கிறேன் என்று எச்சரித்துள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications