Ambulance: ஆம்புலன்ஸ் கூட்டத்திற்குள் வேண்டுமென்றே வந்ததா? எடப்பாடி சொன்னது உண்மையா? மா சுப்பிரமணியன் பதில்
சென்னை: ஆம்புலன்ஸ் (Ambulance Enters AIADMK Meeting) வரும் வழியில் கூட்டத்தை போட்டுவிட்டு நான் வருகின்ற வழியில் ஆம்புலன்ஸ் வருவதாக சொல்கிறார் என்றும், ஆம்புலன்ஸ் நம்பரை நோட் பண்ணு.. ஆம்புலன்ஸ் டிரைவர் யாருன்னு நோட் பண்ணு.. என்று மருத்துவத் துறையில் பணியாற்றிக் கொண்டு இருக்கின்ற மருத்துவர்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அவர் பேசுவதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார். இப்படி பேசுவது அநாகரிகமான செயல் என்றும் கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் பிரசாரம் மேற்கொண்டார்.

கேவலமான செயலை செய்கிறது
எடப்பாடி பழனிசாமி இந்த முறை பேருந்தில் சென்று பிரசாரம் செய்து வருகிறார். பேருந்தில் நின்றபடியே பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று அவரது பேருந்து நின்ற இடத்தில் ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அதில் நோயாளி இல்லாமல் இருப்பதை அதிமுக தொண்டர்கள் கண்டுபிடித்தனர். இதை அறிந்ததும் டென்ஷன் ஆன எடப்பாடி பழனிசாமி, ''இந்த அணைக்கட்டு தொகுதி அதிமுகவின் கோட்டை.
நான் தொடர்ந்து பல கூட்டங்களில் கவனித்து வருகிறேன். கூட்டத்துக்கு நடுவில் வேண்டுமென்றே ஆள் இல்லாத ஆம்புலன்ஸை அனுப்பி இடையூறு செய்யும் கேவலமான செயலை இந்த அரசாங்கம் செய்துவருகிறது. எத்தனை ஆம்புலன்ஸ் விட்டாலும் எதுவும் செய்யமுடியாது. தில்லு திராணி இருந்தால் அரசியல் ரீதியாக எதிர்க்க வேண்டும். மக்கள் கூட்டத்துக்கு இடையில் இப்படி வந்தால் மக்களுக்கு ஏதாவது ஆபத்து வந்தால் என்ன செய்வது.
நோயாளி இல்லாமல் ஆம்புலன்ஸ் செல்கிறது
ஆம்புலன்ஸ்ல நோயாளி யாருமே இல்லாமல், வெறுமனே போகிறது. இதை 30 கூட்டத்தில் பார்த்துவிட்டேன். எதிர்க்கட்சியின் கூட்டம் நடக்கிறது என்றால் காவல்துறை பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இது குறித்து நாளை காவல் துறையிடம் புகார் கொடுப்போம்" என்று ஆவேசமாக பேசினார். எடப்பாடி பழனிசாமியின் இந்த செயல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
மா சுப்பிரமணியன் பதில்
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் இந்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா சுப்பிரமணியல் பதில் அளித்துள்ளார். சென்னையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை ஆய்வு செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த மா சுப்பிரமணியின் இது பற்றி கூறினார். அவர் கூறியதாவது:- நான் வருகின்ற வழியில் ஆம்புலன்ஸை வேண்டும் என்றே விடுகிறார்கள் என்று சொல்கிறார்.. ஒரு பழமொழி உண்டு.. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று சொல்வாங்க..
மிரட்டல் தொனியில் பேசுகிறார்
அப்படித்தான், அவருக்கு ஆம்புலன்ஸை பார்க்கும் போதெல்லாம் வேறு எதோ நியாபகம் வருகிறது போல.. அது தவறான விஷயம்.. நானும் கூட பார்த்தேன் அவர் பேசுகிறார், ஆம்புலன்ஸ் நம்பரை நோட் பண்ணு.. ஆம்புலன்ஸ் டிரைவர் யாருன்னு நோட் பண்ணு.. என்று சொல்கிறார்.. மருத்துவத் துறையில் பணியாற்றிக் கொண்டு இருக்கின்ற.. மருத்துவர்களுக்கு விடுக்கின்ற மிரட்டல் தொனியில் அவர் பேசுகிறார். தமிகத்தின் முன்னாள் முதல்வர் ஒருவர் இப்படி மிரட்டல் தொனியில் பேசுவது அநாகரிகமான செயல்..
அவர் இதோடு நிறுத்திக்கொள்வது நல்லது என்று நினைக்கிறேன்.. இது மக்களிடையே கூடுதல் எதிர்ப்பை தான் தேடித்தரும்.. இது மாதிரியான பேச்சு அவரது மதிப்பை கெடுக்கும் வகையில் தான் அமையும்.. ஆம்புலன்ஸ் வரும் வழியில் கூட்டத்தை போட்டுவிட்டு நான் வருகின்ற வழியில் ஆம்புலன்ஸ் வருவதாக சொல்கிறார்.. இவ்வாறு அவர் கூறினார்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி!












Click it and Unblock the Notifications