ரூ 2000 நோட்டோட வாங்க.. 20 கிலோ பிரியாணியை அள்ளிகிட்டு போங்க.. ஆம்பூர் பிரியாணியின் ஆஃபர்
சென்னை: ரூ 2000 நோட்டை கொடுத்தால் ரூ 2,200 மதிப்பிலான பிரியாணி விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆஃபரை ஆம்பூர் பிரியாணி கடை வழங்கியுள்ளது.
பாஜக தலைமையிலான அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மத்தியில் ஆட்சியில் இருந்து வருகிறது. இந்த நிலையில் 2016 ஆம்ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி இரவு திடீரென பிரதமர் மோடி மக்கள் முன்பு உரையாற்றினார். அதில் இனி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்திருந்தார்.

இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும் மக்கள் தங்களிடம் இருக்கும் ரூ 500, 1000 நோட்டுகளை வங்கியில் உரிய ஆவணங்களை காண்பித்து ஒப்படைத்து அதற்கு பதிலாக வேறு டினாமினேஷன் கொண்ட ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என கூறியிருந்தார்.
இதற்காக வங்கி வாசலில் மக்கள் கால்கடுக்க காத்திருந்தனர். மேலும் பலர் தங்கள் உயிரை கூட இழந்தனர். இந்த நிலையில் ரூ 2000, ரூ 200 உள்ளிட்ட நோட்டுகள் புதிதாக புழக்கத்தில் விடப்பட்டன. அது போல் புதிய ரூ 500 நோட்டுகளும் புழக்கத்தில் வந்தன. நவம்பர் 8 ஆம் தேதி, 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு நடந்த சம்பவங்கள் அவ்வளவு எளிதாக யாருக்கும் மறந்திருக்காது.
கடந்த சில ஆண்டுகளாகவே ஏடிஎம்களில் கூட ரூ 500, ரூ 200, ரூ 100 நோட்டுகள்தான் பெரும்பாலும் வருகின்றன. வங்கிகளிலும் கூட குறைந்த அளவிலேயே ரூ 2000 நோட்டுகளின் பயன்பாடு இருக்கிறது. அப்படியென்றால் அச்சிடப்பட்ட புதிய ரூ 2000 நோட்டுகள் எங்கே போனது என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் ரூ 2000 நோட்டுகளும் வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. எதற்காக இந்த நோட்டுகள் கொண்டு வரப்பட்டன. தற்போது எதற்காக இவை திரும்ப பெறப்படுகின்றன என கேள்வி எழுப்பப்பட்டது. மே 23 ஆம் தேதி முதல் வங்கிகளில் ரூ 2000 நோட்டுகளை கொடுத்து வங்கிக் கணக்குகளில் வரவு வைத்துக் கொள்ளலாம் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
மேலும் வரும் செப்டம்பர் மாதம் வரை மட்டுமே இந்த ரூ 2000 நோட்டுகளை வங்கிகளில் பெற முடியும். அதன்பிறகு செல்லுபடியாகாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கையில் இருக்கும் ஒன்று இரண்டு நோட்டுகளை பெட்ரோல் பங்குகளில் மாற்ற முடியவில்லை. மீறி பெட்ரோல் போட்டாலும் அதை பைப் போட்டு உறிஞ்சி எடுக்கும் சம்பவங்களை பார்த்துள்ளோம்.
அது போல் பேருந்துகளிலும் ரூ 2000 நோட்டுகள் வாங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துளளது. இந்த நிலையில் ஆம்பூர் பிரியாணி ஒரு ஆஃபரை கொடுத்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் சோத்துப்பாக்கத்தில் இயங்கி வரும் ஆம்பூர் பிரியாணி கடையில் 2,200 மதிப்பிலான 20 கிலோ பிரியாணி ரூ 2000 நோட்டுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ரூ 2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில் ஆம்பூர் பிரியாணி கடையில் 2000 ரூபாய் கொடுத்து ஒரு பிரியாணி வாங்கினால் மீதி சில்லறை கொடுக்கப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள சுலபமான முறையில் பணம் பரிவர்த்தனை செய்ய வேண்டும் என நோக்கத்தில் ஆம்பூர் பிரியாணி கடையில் ஆஃபர் முறையில் பிரியாணி விற்கப்படுவதாக கடை உரிமையாளர் தெரிவித்தார்.
மேலும் மக்கள் 2000 ரூபாய் நோட்டை மாற்றுவதில் சிரமம் இல்லாமல் தங்கள் கடையில் வந்து மாற்றலாம் என்றும் ஜூன் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 31ம் தேதி வரை இந்த விற்பனை தொடர்ந்து நடைபெறும் என்றும் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் கடை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications