எழுத்துப்பிழையை கூட விடுங்க! ஆனால் தமிழ்நாடா, தமிழகமா? விஜய் சொல்ல வருவது என்ன? அமீர் கேள்வி
சென்னை: நடிகர் விஜய்யின் கட்சியின் பெயரில் உள்ள எழுத்துப்பிழையை கூட விட்டுவிடலாம். ஆனால் கட்சியின் பெயரில் உள்ள இலக்கண பிழையைத்தான் தாங்கவே முடியவில்லை என இயக்குநர் அமீர் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
தற்போதைய டிரென்டிங் டாப்பிக்கே விஜய்யின் அரசியல் பயணம் குறித்துதான். இரு தினங்களுக்கு முன்பு அவர் அரசியல் கட்சியை தொடங்கினார். அதாவது விஜய் மக்கள் இயக்கத்தை அப்படியே தமிழக வெற்றி கழகம் என பெயரிட்டுள்ளார்.

விஜய்யின் கட்சி டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிடவில்லை. 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலுக்கு தயாராகுவோம் என விஜய் சொல்லியுள்ளார். முழு நேர அரசியலில் ஈடுபட அவர் சினிமாவிலிருந்து விலகுவார் என்றும் அறிவித்துள்ளார்.
விரைவில் ஒப்புக் கொண்ட படங்களை முடித்துக் கொண்டு அவர் முழு நேர அரசியலில் இறங்குவார். விஜய் கட்சியின் பெயரை அறிவித்ததில் இருந்தே விவாதங்கள் போய் கொண்டிருக்கின்றன. அதாவது விஜய்யின் கட்சியின் பெயரில் தமிழக வெற்றி கழகம் என குறிப்பிட்டுள்ளார்களே, அது தமிழக வெற்றிக் கழகம் என்றுதானே வர வேண்டும் என பலர் விமர்சித்து வருகிறார்கள்.
பாஜக மூத்த நிர்வாகி எஸ்.வி.சேகரும் கூட விஜய்க்கு வாழ்த்துகளை கூறிவிட்டு வெற்றி கழகத்திற்கு "க்" வருமா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அமீரும் சில விஷயங்களை ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்துள்ளார். அதில் "விஜய்யின் அறிக்கை அனைத்தையும் கலந்த ஒரு மிக்சர் போல் இருக்கிறது. எனக்கு நிறைய விமர்சனங்கள் உள்ளன. எழுத்துப்பிழையை கூட விட்டுவிடலாம்.
ஆனால் தமிழகமா தமிழ்நாடா என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன். அது தமிழ்நாடுதான் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். தமிழகம் என்று ஏன் உச்சரிக்கக் கூடாது என்பதிலும் உறுதியாக இருக்க வேண்டும். விஜய் போன்றோர் அடுத்த தலைமுறைக்கு என்ன கற்றுக் கொடுக்கிறார்கள் என்பது முக்கியம்.
அண்ணா சொல்லிக் கொடுத்ததைதான் இன்று திராவிடக் கட்சிகள் சொல்லிக் கொடுத்திருக்கின்றன. இதில் விஜய் தன்னுடைய ரசிகர்களுக்கு என்ன சொல்லிக் கொடுக்க போகிறார் என்பதை அறிய ஆவலுடன் இருக்கிறேன். அவர் தமிழ்நாடு என்று சொல்லித் தர போகிறாரா இல்லை தமிழகம் என சொல்லித் தர போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இவ்வாறு அமீர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை தமிழகம் என பெயர் மாற்ற வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 2022 ஆம் ஆண்டு கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
Mayor பிரியா - தவெக MLA பல்லவி மோதல்.. மேயர் vs எம்எல்ஏவில் பெரியவர் யார்? சட்டம் சொல்வது என்ன? -
விஜய் அரசின் முதல் MoU.. பரந்தூருக்கு ஒரு நியாயம்? டேட்டா சென்டருக்கு ஒரு நியாயமா? -
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
அதிகாலை 7 மணிக்குள் கள ஆய்வு பண்ணுங்க.. விஜய் அசத்தல்! மாநகராட்சி ஆணையர்களுக்கு அரசு உத்தரவு -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ!












Click it and Unblock the Notifications