விவாகரத்து இருக்கட்டும்.. தேர்தல் வேலையில் விஜய் தீவிரம்.. மார்ச் 10 முதல் வேட்பாளர் நேர்காணல்!
சென்னை: நாளை மறுநாள் (மார்ச் 10) முதல் தவெக வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விவாகரத்து தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்தாலும், கட்சிப் பணியில் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால் அடுத்தகட்டமாக வேட்பாளர் தேர்வில் அவர் கவனம் செலுத்த உள்ளதாகத் தெரிகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி உள்ள நிலையில் அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்துள்ளது. தேர்தல் தேதி சில நாட்களில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒவ்வொரு கட்சியும் மற்றவர்களுக்கு போட்டியாக வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகம் சார்பிலும் சில வாக்குறுதிகளை நேற்று மகளிர் தின நிகழ்வில் பேசிய தவெக தலைவர் விஜய் வெளியிட்டார்.

மாமல்லபுரத்தில் நேற்று நடைபெற்ற மகளிர் தின விழாவில் பெண்களுக்கு மாதம் ரூ.2500, வ்ருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர் இலவசம், திருமணம் ஆக இருக்கும் பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம், பட்டுப்புடவை என ஏகப்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார் விஜய்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, தவெக தலைவர் விஜய் எங்கு நிற்கப்போகிறார். தவெகவில் இருக்கும் முக்கிய தலைவர்கள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் நாளை மறுநாள் (மார்ச் 10) முதல் தவெக வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெறவுள்ளது. கடந்த மாதம் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை விநியோகம் செய்தது தவெக. விருப்ப மனு விநியோகம் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே மனுக்கள் தீர்ந்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது.
விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்ட பிறகு நேர்காணல் எப்போது தொடங்கும் என கட்சி நிர்வாகிகள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், வரும் 10 ஆம் தேதி முதல் தவெக வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற உள்ளது.
சென்னை பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிட வலியுறுத்தி ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதன்படி, அவர் அங்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தியாகராய நகரிலும், ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்திலும், அருண் ராஜ் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலும், மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
விவசாய கடன் தள்ளுபடி.. டெல்டாவில் விஜய்க்கு பெருகும் எதிர்ப்பு! போராட்டத்தில் குதித்த விவசாயிகள் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
இது அப்பட்டமான விதிமீறல்.. மேகதாது அணை கட்ட கர்நாடகாவை அனுமதிக்க கூடாது.. மோடிக்கு விஜய் கடிதம் -
சமூக வலைதளங்களை தவெகவினர் தந்திரமாக பயன்படுத்தினார்கள்.. கே.என்.நேரு பேச்சு -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
அதிமுக எம்எல்ஏக்கள் தவெக இணைவது நாகரிகம் அற்றது.. அமைச்சர் வன்னியரசு பேட்டி












Click it and Unblock the Notifications