அதிகாலை வந்த கனமழை அலர்ட் எதிரொலி.. சென்னை புத்தகக் கண்காட்சி இன்று நடைபெறாது..அப்போ நாளை இருக்குமா
சென்னை: சென்னையில் இன்று கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று ஒரு நாள் மட்டும் சென்னையில் புத்தகக் கண்காட்சி நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் நடைபெறும் புத்தக கண்காட்சி ரொம்பவே பிரபலமானது. பொங்கல் பண்டிகையை ஒட்டி நடக்கும் இந்தப் புத்தக கண்காட்சியில் தான் லட்சக்கணக்கான மக்கள் வந்து புத்தகங்களை வாங்கிச் செல்வார்கள்.

ஆண்டின் மற்ற நாட்களில் விற்பனையாகும் புத்தகங்களை விட இந்த புத்தகக் கண்காட்சி நடக்கும் காலத்தில் அதிக புத்தகங்கள் விற்பனையாகும். இதனால் புத்தகப் பிரியர்கள் மட்டுமின்றி பதிப்பாளர்களும் கூட இந்த புத்தகக் கண்காட்சியை எதிர்நோக்கி இருப்பார்கள்.
புத்தக கண்காட்சி: அதன்படி இந்த 2024ஆம் ஆண்டிற்கான சென்னை புத்தகக் கண்காட்சி கடந்த 3ஆம் தேதி ஆரம்பித்து. பபாசி எனப்படும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் நடத்தும் இந்த 47ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மொத்தம் 19 நாட்களுக்கு, அதாவது ஜன. 21ஆம் தேதி வரை இந்த புத்தகக் கண்காட்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
புத்தகக் கண்காட்சி தொடங்கியது முதலே மக்கள் இங்கே குவிந்து வருகின்றனர். பொதுமக்கள் பலரும் ஆர்வமாக வந்து புத்தகங்களை அள்ளி செல்கின்றனர். குறிப்பாகக் கடந்த இரண்டு நாட்களாக வார இறுதி என்பதால் பொதுமக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. அதேநேரம் நேற்று மாலை பெய்த மழையால் புத்தகக் கண்காட்சி நடக்கும் இடத்திற்கு அருகே சேறும் சகதியுமாக மாறியது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டன.
"சென்னையில் இன்று கனமழை பெய்யும்.." அடுத்த வரி வெதர்மேன் சொன்ன நல்ல செய்தி.. அப்பாடா ரொம்ப நல்லது
இன்று இயங்காது: இன்று அதிகாலை தொடங்கி சென்னையில் பல்வேறு இடங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இன்று சென்னையில் கனமழை இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இன்று ஒரு நாள் மட்டும் சென்னை புத்தக கண்காட்சி நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சில பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டி உள்ளதால் இன்று ஒரு நாள் மட்டும் புத்தக கண்காட்சி நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை புத்தகக் கண்காட்சியைப் பொறுத்தவரை இந்தாண்டு அங்கே சுமார் 1000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் , வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் நடைபெறும். புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட நுழைவுக் கட்டணமாக ரூ 10 மட்டும் வசூலிக்கப்படுகிறது.
அப்போ நாளை? கனமழையால் இன்று மட்டும் புத்தகக் கண்காட்சி செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் வழக்கம் போலச் சென்னை புத்தகக் கண்காட்சி இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications