"சென்னையில் இன்று கனமழை பெய்யும்.." அடுத்த வரி வெதர்மேன் சொன்ன நல்ல செய்தி.. அப்பாடா ரொம்ப நல்லது
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், தலைநகர் சென்னையில் மழை எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை நமக்கு நல்ல மழையை கொடுத்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த மாத தொடக்கத்தில் மிக்ஜாம் புயலால் கனமழை கொட்டி தீர்த்தது.

அதேபோல தென்தமிழகத்திலும் சில மாவட்டங்களில் கடந்த மாதம் கனமழை கொட்டியது. தொடர்ந்து வடகிழக்கு பருவமழையால் இந்தாண்டு ஜனவரி மாதமும் ஓரளவுக்கு நல்ல மழை கிடைத்துள்ளது.
கனமழை: கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்தே வந்துள்ளது. குறிப்பாக நேற்றிரவு முதல் சிதம்பரம், சீர்காழி பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.. அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலும், கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலும் 22 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது. கனமழையால் தமிழ்நாட்டில் பல இடங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இன்றைய தினம் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். முன்னதாக அவர், இன்று சென்னையில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியிருந்த நிலையில், இன்று சென்னையில் மிகக் கனமழைக்குப் பதிலாகக் கனமழையே இருக்கும் என்று அவர் கணித்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன்: இது தொடர்பாக வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைத்தள பக்கத்தில், "சென்னையின் தெற்கே மகாபலிபுரம் பகுதிகள் வரை மழை மேகங்கள் உள்ளன. டெல்டா முதல் செங்கல்பட்டு வரை கனமழை பெய்து வருகிறது. திருவாரூர், சீர்காழி என டெல்டாவின் சில பகுதிகளில் 200 மிமீ தீவிர மழையும் பெய்துள்ளது. ஆனால், சென்னையில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பில்லை. சென்னையைப் பொறுத்தவரை இன்று கனமழைக்குப் பெய்ய மட்டுமே வாய்ப்புள்ளது.
மழை மேகங்கள் டெல்டா முதல் பாண்டி (புதுச்சேரி) பெல்ட் வரை உள்ளன. விழுப்புரம், புதுச்சேரி முதல் திருவண்ணாமலை வரையிலான பகுதிகளில் இன்றும் கனமழை பெய்யும். தென் சென்னை புறநகர் முதல் கிழக்கு கடற்கரைச் சாலை வரையிலான பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது. இருப்பினும், நகர்ப் பகுதி மழை மேகங்களைத் தவறவிட்டது. டெல்டா பகுதியின் மேலே இருந்த மழை மேகங்கள் நகர்ந்து இப்போது விழுப்புரம் மாவட்டங்களைச் சூழ்ந்துள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் இது செங்கல்பட்டு மற்றும் தென் சென்னை புறநகர்ப் பகுதிகளுக்குச் சிறிது சிறிதாக நகரக் கூடும்.
நல்ல செய்தி: எனவே, சென்னையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பில்லை. . இன்றைய தினம் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் வழக்கமான சமாளிக்கக்கூடிய கனமழை மட்டுமே பெய்யும். இங்கே மிக அதிக மழை பெய்யாமல் போகலாம். அதேநேரம் செங்கல்பட்டு, ராணிப்பேட்டை பகுதிகள். கள்ளக்குறிச்சி, கடலூரில் சில இடங்களில் இன்றும் கனமழை பெய்யும்.
இப்போது வரை திருவாரூர் மற்றும் சீர்காழியில் 200 மிமீ மழை பெய்துள்ளது. நாகை மாவட்டத்திலும் சுமார் 150-200 மி.மீ மழை பெய்துள்ளது. செங்கல்பட்டு மகாபலிபுரத்தில் 120 மி.மீ மழையும் அரியலூரில் 50-90 மி.மீ மழையும் பெய்துள்ளது.. சென்னையைப் பொறுத்தவரைத் தென் சென்னை பகுதிகளில் 50-70 மி.மீ மழை பெய்துள்ளது. புதுச்சேரி விழுப்புரம் மற்றும் கடலூரில் இன்று நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications