அடி மேல் அடி.. கலங்கிய செந்தில் பாலாஜிக்கு.. சிரிப்பை வரவழைத்த ஒரே நல்ல செய்தி.. சின்ன வெளிச்சம்!
சென்னை: மருத்துவ காரணங்களின் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது .
அமைச்சர் செந்தில் பாலாஜி தனது மருத்துவ காரணங்களை காரணம் காட்டி பெயில் மனு தாக்கல் செய்தார். தனக்கு இதயத்தில் பிரச்சனை உள்ளது. நோய் தொற்று உள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் உள்ளது. காலில் ரத்த கட்டு உள்ளது. இதனால் கடுமையான கால் வலி உள்ளது.
கல்லீரலில் கடுமையான பிரச்சனை உள்ளது என்று செந்தில் பாலாஜி தனது மனுவில் கூறி இருந்தார். இதை காரணமாக வைத்து தனக்கு பெயில் கொடுக்க வேண்டும் என்று மனுவில் கூறினார். உயர் நீதிமன்றம் ஜாமீன் கொடுக்காத நிலையில் அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

உச்ச நீதிமன்றம்: உச்ச நீதிமன்றத்தில் அவரின் மனு நிராகரிக்கப்பட்டு உள்ளது. மருத்துவ காரணங்களின் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது . அவரை போல பலருக்கு மருத்துவ காரணங்கள் உள்ளன.
எல்லோருக்கும் ஜாமீன் கொடுக்க முடியாது. அவரின் உடல் பிரச்சனைகளை கூகுளில் பார்த்தோம். அது பெரிய பிரச்சனை இல்லை. நீண்ட காலம் மருந்து சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று கூறியுள்ளனர்.
( கூகுளில் பார்த்துவிட்டேன், இதெல்லாம் காரணம்னு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தர முடியாது: நீதிபதி அதிரடி )
நீதிபதிகள் வாய்ப்பு: அதே சமயம் செந்தில் பாலாஜிக்கு ஒரே ஒரு நல்ல செய்தி சென்றுள்ளது. ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால்... செந்தில் பாலாஜிக்கு மருத்துவ காரணங்களால் ஜாமீன் வழங்க முடியாது. ஆனால் அதற்காக அவர் சாதாரண ஜாமீன் மனு செய்ய கூடாது என்றில்லை. அவர் சாதாரண ஜாமீன் மனுவையும் கூட தாக்கல் செய்யலாம்.
இந்த வழக்கில் கூறப்பட்ட எந்த கருத்தும் சாதாரண ஜாமீன் மனுவில் பாதிப்பை ஏற்படுத்தாது. சாதாரண ஜாமீன் மனுவில் இந்த கருத்துக்களை கருத்தில் எடுக்காமல் விசாரணை செய்யலாம் என்று செந்தில் பாலாஜிக்கு ஒரே ஒரு நல்ல செய்தி மட்டும் வழங்கப்பட்டு உள்ளது.

வழக்கு பின்னணி: ஜூன் 13ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். முன்பு வருமானவரித்துறை சோதனையின் போது செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்யப்படவில்லை. அவரின் தம்பி வீடு, உறவினர்கள் வீட்டில்தான் சோதனை செய்யப்பட்டது. ஆனால் இந்த முறை சென்னையில் அமைச்சர் இல்லத்திலேயே சோதனை நடந்தது.
மொத்தமாக 17 மணி நேரம் சோதனை நடந்தது. வீட்டோடு சேர்த்து தற்போது தலைமை செயலகத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை சோதனை செய்தனர். தலைமை செயலகத்தில் 10 மணி நேரம் சோதனை நடந்தது. அலுவலக உதவியாளர் விஜயகுமாரை அழைத்துக் கொண்டு அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். முக்கிய ஆவணங்கள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறையில் உள்ளதா? என்பதை கண்டறிய அதிகாரிகள் சோதனை செய்தனர்.
கைது செய்தனர்: 17 மணி நேரங்களுக்கு பின் அவர் வீட்டில் சோதனைகள் முடிந்தது. இதையடுத்து செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில்தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றபோது நெஞ்சில் கைவைத்து வலிப்பதாக கூறி அவர் காரில் படுத்ததால் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்று இருக்கிறார்கள்.
பைபாஸ்: அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கோர்ட் அனுமதியோடு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் முடிவில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதே சமயம் அவருக்கு கால்வலி, உடல்வலி, போதிய உணவு இன்றி கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிலும் பெயில் கிடைக்காத காரணத்தால்.. ஏதாவது பண்ணுங்க என்று விரக்தியில் தனது வழக்கறிஞர்களிடம் அவர் கூறியதாகவும் தெரிகிறது. இந்த நிலையில்தான் அவர் மருத்துவ பெயில் இல்லாமல் சாதாரண பெயில் மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications