கூகுளில் பார்த்துவிட்டேன், இதெல்லாம் காரணம்னு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தர முடியாது: நீதிபதி அதிரடி
டெல்லி: செந்தில் பாலாஜியின் மூளையில் கட்டியுள்ள ரத்தக் கட்டுக்கு மருந்து மூலம் குணப்படுத்திவிடலாம் என கூகுளில் பார்த்துவிட்டேன். அதில் எந்த அச்சமும் படத்தேவையில்லை என அமைச்சரின் ஜாமீன் மனு மீதான வாதத்தின் போது உச்சநீதிமன்ற நீதிபதி திரிவேதி தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை பயன்படுத்தி வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14 ஆம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி சென்னை நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு 8 முறை தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் அவர் கடந்த அக்டோபர் 18ஆம் தேதி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. அவரது தம்பி தலைமறைவாக உள்ளதால் அவருக்கு ஜாமீன் கொடுத்தால் சாட்சி, ஆதாரங்களை கலைத்துவிடுவார் என்பதால் நீதிபதி ஜாமீன் தர மறுத்துவிட்டார்.
இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் அமைச்சர் தரப்பு கூறியிருப்பதாவது" உடல்நல பாதிப்பை காரணம் காட்டியதை உயர்நீதிமன்றம் சரியாக ஆராயவில்லை. அவரது சகோதரர் அசோக்குமார் தலைமறைவாக இருப்பதை ஒரு காரணமாக கூறி ஜாமீன் மறுக்கப்பட்டது.
இதை ஏற்க முடியாது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் அனிருத்தா போஸ், பீலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 20ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி சார்பில் முகுல் ரோத்தகி ஆஜரானார்.
அவர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். அது போல் அவருடைய மருத்துவ அறிக்கைகளை இணைத்துள்ளோம். அதை நீதிமன்றமும் அமலாக்கத் துறையும் ஆய்வு செய்யலாம். செந்தில் பாலாஜிக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எம்ஆர்ஐ ஸ்கேன் ரிப்போர்ட்டை சுட்டிக் காட்டி முகுல் ரோத்தகி வாதம் செய்திருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கானது டிசம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி இன்று திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி தனது வாதத்தில், செந்தில் பாலாஜியின் உடல் நிலை பாதிப்பால் அவருக்கு பக்கவாதம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
அவருக்கு கடந்த 18ஆம் தேதிதான் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டது. உடல் நலம் பாதிக்கப்பட்டால் இங்குதான் சிகிச்சை பெற வேண்டும். அங்குதான் சிகிச்சை பெற வேண்டும் என எந்த சட்டப்பிரிவும் சொல்லவில்லை. செந்தில் பாலாஜி உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். அவரது மூளையில் ரத்தக் கட்டி உள்ளது என்றார்.
அப்போது நீதிபதி திரிவேதி குறுக்கிட்டு, நான் கூகுளில் chronic lacunar infraction (மூளையில் ரத்தக் கட்டி) என்றால் என்ன, அதற்கு தீர்வு என்ன என்பதை தேடினேன். அப்போது அது மருந்துகளால் குணப்படுத்தக் கூடியது என்றும் அதனால் மோசமான பாதிப்புகள் ஏற்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த மருத்துவ காரணங்களை வைத்துக் கொண்டு ஜாமீன் கொடுக்க முடியாது என்றார்.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications