ஆளுநர் பேச்சுக்கு நடுவே.. நீட் தேர்வால் சென்னையில் 19 வயது மாணவர் தற்கொலை! சோக பின்னணி
சென்னை: நீட் தேர்வு குறித்து ஆளுநர் ஆர்என் ரவி நேற்று தெரிவித்த கருத்துக்கு தமிழ்நாட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய சூழலில் 2 முறை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்த விரக்தியில் சென்னையை சேர்ந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் மருத்துவ படிப்பு படிக்க நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவ படிப்பு பயில விரும்பும் மாணவ-மாணவிகள் கட்டாயம் நீட் தேர்வில் பாஸாக வேண்டிய சூழல் உள்ளது. இதற்காக தேசிய தேர்வு முகமை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு உள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கூறி வருகின்றனர். இல்லாவிட்டால் தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என தொடர்ந்து பேசி வருகின்றனர்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதில் சிரமத்தை சந்திக்கின்றனர். இதனால் நீட் தேர்வு வேண்டாம் என அவர்கள் கூறி வருகின்றனர். மேலும் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்ககோரி சட்டசபையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசேதாவை கிடப்பில் போட்ட ஆளுநர் ஆர்என் ரவி நீண்ட நாட்களுக்கு பிறகு ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார். இன்னும் அதில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
இதற்கிடையே தான் இன்று சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த 19 வயது மாணவர் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துள்ளார். குரோம்பேட்டையில் வசித்த வந்த ஜெகதீஸ்வரன் என்ற மாணவர் மருத்துவம் படிக்கும் நோக்கத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். 2 முறை நீட் தேர்வு எழுதினார். ஆனால் அவரால் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனவருத்தத்தில் இருந்த ஜெகதீஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக நேற்று சென்னை ஆளுநர் மாளிகையில் நீட் இளநிலை தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்றிருந்த மாணவர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் அந்த மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுடன் பங்கேற்றனர். மாணவர்கள் மத்தியில் ஆளுநர் ஆர்என் ரவி உரையாற்றினார். மேலும் மாணவர்கள், பெற்றோர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். சேலத்தை சேர்ந்த மாணவர் ஒருவரின் தந்தை, நீட் தேர்வுக்கு எப்போது தடை விதிக்கப்படும்? என்ற கேள்வியை முன்வைத்தார்.

அதற்கு ஆளுநர் ஆர்என் ரவி, ‛‛நீட் தேர்வுக்கு விலக்கு கேட்பது என்பது மாணவர்களின் போட்டிபோடும் திறனை கேள்விக்குறி ஆக்கிவிடும். நீட் தேர்வுக்கு கோச்சிங் சென்டர் சென்று பயில வேண்டிய அவசியமில்லை. பள்ளிகளில் பாடம் நடத்தும் போதே நீட் தேர்வுக்கான பயிற்சி கொடுக்கலாம்.நீட் தேர்வுக்கான விலக்கு அறிவுசார்ந்த மாணவர்களை மாற்றுத்திறனாளிகளாக மாற்றி விடும்.
எனவே நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒருபோதும் ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட மாட்டேன். மேலும் கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அனுப்பியுள்ளேன்'' என்றார். ஆளுநர் ஆர்என் ரவியின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்கிடையே தான் 2 முறை நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என்பது சோகமான விஷயமாகும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications