சென்னையில் குடிபோதையில் தள்ளாட்டாம்.. புத்தாண்டில் பறிமுதலான வாகனங்கள் எவ்வளவு? அடேங்கப்பா.. விபரம்
சென்னை: சென்னையில் புத்தாண்டு கொண்டாட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று இரவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் குடிபோதை உள்பட விதிகளை மீறியவர்களை போலீசார் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி பிடித்து அபராதம் விதித்தனர். மேலும் ஏராளமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் நேற்று ஒருநாள் இரவில் மட்டும் மொத்தம் எவ்வளவு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
2022ம் ஆண்டு நேற்று முடிவடைந்த நிலையில் உலகம் முழுவதும் நேற்று நள்ளிரவு 2023ம் ஆண்டுக்கான புத்தாண்டு பிறந்தது. வாணவேடிக்கைகள் வெடித்து பொதுமக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.
இந்தியாவிலும் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. குறிப்பாக சென்னை, பெங்களூர், மும்பை, கொல்கத்தா உள்பட பல முக்கிய நகரங்களிலும், சுற்றுலா நகரங்களிலும் பொதுமக்கள் அதிகமாக திரண்டு புத்தாண்டை வரவேற்றனர்.

பல்வேறு நடவடிக்கைகள்
தமிழகத்தில் விபத்து மற்றும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் பாதுகாப்பான முறையில் புத்தாண்டு கொண்டாட போலீசார் ஏற்பாடுகள் செய்திருந்தனர். அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக சென்னையில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

ஓட்டல்களுக்கு கட்டுப்பாடுகள்
சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், பண்ணை வீடுகள், கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான சிறப்பு ஏற்பாடுகளை அந்தந்த நிர்வாகம் செய்திருந்தது. புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடத்தும் ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், பண்ணை வீடுகள், கேளிக்கை விடுதிகளுக்கு கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை கடைப்பிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.

தீவிர கண்காணிப்பு பணி
அதன்படி சென்னையில் நேற்று இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைகளின் மணற்பரப்புகளில் நடக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, அண்ணா சாலையில் மாலை முதலே வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சென்னை முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாகனங்கள் பறிமுதல்
புத்தாண்டு அன்று பைக் ரேஸ், பைக் சாகசங்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்கள் இயக்கும் நபர்களை பிடிக்க மாநகரம் முழுவதும் 350 இடங்களில் சிறப்பு வாகன சோதனையில் ஈடுபடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அதன்பிறகு குடிபோதை உள்பட விதிகளை மீறியவர்களை போலீசார் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி பிடித்து அபராதம் விதித்தனர். மேலும் ஏராளமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் நேற்று ஒருநாள் இரவில் மட்டும் மொத்தம் எவ்வளவு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.

பறிமுதலான வாகனங்கள் எவ்வளவு?
இந்த நிலையில், சென்னையில் நேற்றைய புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விதிமீறலில் ஈடுபட்டதாக மொத்தம் 932 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுபானம் அருந்தி குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 360 வாகனங்களும், பிற விதிமீறல்களில் ஈடுபட்டதாக 572 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டள்ளது.












Click it and Unblock the Notifications