வந்தாச்சு அறிவிப்பு.. மே 20ல் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்: அமைச்சர் ராஜ்மோகன்
சென்னை: தமிழகத்தில் மே 20ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். மேலும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த மார்ச் 10 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர்.

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது (Tamil nadu 10th public exam result date 2026).
அந்த வகையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்ற ராஜ்மோகன், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மே 20ஆம் தேதி 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் கோடை விடுமுறை முடிந்து 4 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு வரும் ஜூன் 1 ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும். 1 முதல் 3 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான tnresults.nic.in , dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தங்களுக்கு பதிவு எண்ணையும் பிறந்த தேதியையும் கொடுத்து தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
இணையதளத்தில் அதிகம் பேர் பார்ப்பதால் ஏற்படும் அசவுகரியத்தையும் தாமதத்தையும் தவிர்க்க, மாணவர்கள் 'TN SSLC & HSE Result' மொபைல் செயலி மற்றும் DigiLocker தளம் மூலமாகவும் தங்கள் மதிப்பெண் பட்டியலைப் பெற்றுக்கொள்ளலாம்.
சுமார் 9 லட்சம் மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்துள்ளது. தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் (DGE) முடிவுகளை வெளியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாகச் செய்துள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியான இரண்டு வாரங்களுக்குப் பிறகு, மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
-
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications