Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜ்நாத் சிங் பேச்சுக்கு நடுவே.. பிரதமர் மோடிக்காக கைத்தட்டிய மக்கள்! அதிர்ந்த தாம்பரம்! என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தாம்பரம் அருகே மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். அப்போது அவர் பிரதமர் மோடி குறித்து சொன்ன ஒற்றை வார்த்தைக்காக அங்கிருந்தவர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தது மேடையை அதிர வைத்தது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராகி வருகிறது. அதன்படி நாடு முழுவதும் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த பொதுக்கூட்டங்கள் தமிழ்நாட்டிலும் நடந்து வருகிறது.

Amid of Rajnath Singh Speech, BJP Cadres claps the hands for PM Modi near Chennai

சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருகை தந்தார். தென்சென்னை லோக்சபா தொகுதி நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு வேலூரில் நடந்த சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசினார்.

இதன் தொடர்ச்சியாக இன்று சென்னை தாம்பரம் அருகே இரும்புலியூரில் பாஜகவின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசினார். அப்போது அவர் மத்திய அரசின் சாதனைகளை பட்டியலிட்டார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

தமிழ் மொழி என்பது மிகவும் பழமையான மொழி. இத்தகைய சூழலில் தமிழகத்தின் தொண்மையான செங்கோல் குறித்த விபரம் தமிழ்நாட்டுக்கு மட்டும் தெரிந்து இருந்தது. ஆனால் புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவியதன் மூலம் செங்கோல் பெருமை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தின் பெருமைக்காக புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பெருமையை ஜனநாயகத்தின் கோவிலாக உள்ள நாடாளுமன்றத்துக்கு பிரதமர் மோடி கொண்டு சென்றுள்ளார். இதற்காக பிரதமர் மோடிக்கு நாம் கைகளை தட்டி நன்றி தெரிவிக்க வேண்டும். (இதையடுத்து பாஜகவினர் கைகளை தட்டி பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்). இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஆகிறது. இந்த காலக்கட்டத்தில் பல முன்னேற்றங்களை நாம் அடைந்துள்ளோம். ஆனால் அந்த முன்னேற்றத்தின் வேகம் என்பது மிகவும் குறைவாக உள்ளது. மந்தமான நிலையில் முன்னேற்றம் என்பது நடந்தது. வளர்ச்சி விகிதம் என்பது நாட்டில் மிகவும் குறைவாக இருந்தது.

ஆனால் இப்போது இந்தியாவின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. முன்காலத்தில் இந்தியாவுக்கு உலக நாடுகளிடம் உயர்ந்த மரியாதை என்பது இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது இந்தியாவுக்கு அதிக மரியாதை கிடைக்கிறது. உலக நாடுகள் இந்தியாவின் குரலுக்கு செவிசாய்க்கின்றன. ஒவ்வொரு விஷயங்களிலும் இந்தியா என்ன சொல்லப்போகிறது என உலக நாடுகள் காத்து இருக்கின்றன. உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் குரலுக்கு மிகப்பெரிய மதிப்பும், மரியாதையும் பெருகி வருகிறது.

இந்தியாவின் இலக்கை உலக நாடுகள் கவனிக்கின்றன. இந்த வேளையில் ஒன்றை கூறி கொள்கிறேன். இந்தியா எந்த நாட்டுடனும் போரை தொடுக்காது. ஆனால் நம்மிடம் வாலாட்டினால் அந்தநாட்டை இந்தியா சும்மா விடாது என்ற அளவுக்கு பயம் உருவாகி உள்ளது. இந்தியாவில் தனிநபர் வருமானம் உயர்ந்து வருகிறது. உலகில் மிக வேகமாக வளரும் பொருளாதாரத்தில் 5வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2047ல் இந்தியா உலகில் முதல்தர பொருளாதார நாடாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஏழைகள் மற்றும் பெண்களுக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். தமிழ்நாட்டுடன் மறைந்த பிரதமர் வாஜ்பாயை போல் நெருங்கிய உறவை பிரதமர் மோடி வைத்துள்ளார். வாஜ்பாய் போன்று தமிழ் மக்கள் மீது அன்பு, பாசத்தை பிரதமர் மோடி வைத்துள்ளார். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் வசிக்கும் தமிழர்கள் மட்டுமின்றி இலங்கை வாழ் தமிழர்களின் நலனையும் காக்கும் பிரமராக மோடி உள்ளார். கடந்த 2015ல் பிரதமர் மோடி ஜாப்னா என்ற இடத்துக்கு சென்றார். அங்கு இந்திய பிரதமர் யாரும் சென்றது இல்லை. அங்கு பாதிக்கப்பட்டு இருந்து இலங்கை தமிழர்களை பிரதமர் மோடி சந்தித்து 27 ஆயிரம் வீடுகளை கட்டி கொடுத்துள்ளார்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+