ஜாயிண்ட் ஆபரேஷன்?.. காமராஜ் வீட்டிற்கு வருமான வரித்துறையும் வருகை.. விஜிலன்ஸோடு சேர்ந்து பரபர ரெய்டு
சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுக்கு இடையில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகளும் சோதனை செய்ய வந்துள்ளனர்.
Recommended Video
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் காமராஜுக்கு சொந்தமான 49 இடங்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதையடுத்து காமராஜ் உட்பட 6 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக 59 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக இவர் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது.

விஜிலன்ஸ்
இந்த நிலையில் விஜிலன்ஸ் ரெய்டுக்கு இடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் காமராஜ் வீட்டிற்கு சோதனை செய்ய வந்துள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறும் நிலையில் ஐடி அதிகாரிகள் காமராஜ் வீட்டிற்கு வருகை புரிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக அமலாக்கத்துறை, வருமான வரித்துறை இரண்டும் ஒன்றாக சோதனை நடத்துவது வழக்கம். இரண்டும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் ஒன்றாக சோதனை நடத்தும்.

லஞ்ச ஒழிப்புத்துறை
ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறை, வருமானவரித்துறை பெரும்பாலும் ஒன்றாக சோதனை நடத்துவது அரிதான விஷயம். மத்திய, மாநில அரசுகள் ஒரே கட்சியாக இருந்தால் இப்படி நடக்கலாம். அல்லது பொதுவழக்காக இருந்தால் இப்படி ஜாயிண்ட் ஆபரேஷன் நடத்தலாம். இந்த நிலையில்தான் காமராஜ் வீட்டில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையுடன் சேர்த்து வருமான வரித்துறை சோதனை செய்து வருகிறது. 7க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காமராஜ் வீட்டில் சோதனை செய்து வருகிறார்கள்.

காமராஜ்
இந்த சோதனைக்கு பின் வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. நேற்று நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் செய்யாதுரையின் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் வருமான வரித்துறை சார்பாக சோதனை செய்யப்பட்டது. இவரின் எஸ்பிகே குழுமம் தமிழ்நாடு அரசின் சாலை ஒப்பந்தப் பணிகளை கடந்த ஆட்சியில் மேற்கொண்டு வந்தது. இந்த செய்யாதுரை எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

ரெய்டு
இந்த ஒப்பந்தங்களில் முறைகேடு இருப்பதாக வருமானவரித்துறை ரெய்டு நடத்தியது. முக்கியமாக எடப்பாடி பழனிசாமியின் சம்மந்தி - செய்யாதுரை இருவருக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. செய்யாதுரை வீடு மற்றும் அலுவலகங்களில் இரண்டு நாட்களாக வருமானவரித்துறை ரெய்டு நடத்தியது. அதோடு செய்யாதுரையின் ஆடிட்டர் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. இந்த ஆடிட்டர் மயிலாப்பூரை சேர்ந்தவர். அதே ஆடிட்டர்தான் காமராஜ் நடத்தும் நிறுவனத்திற்கும் ஆடிட்டர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆடிட்டர்
இரண்டு பேருக்கும் ஒரே ஆடிட்டர். இதன் காரணமாகவே தற்போது வருமான வரித்துறை இங்கு ரெய்டு நடத்தி வருகிறது. வருமானவரித்துறை நடத்தும் ரெய்டுக்கும், லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுக்கும் தொடர்பு இல்லை. இரண்டும் வெவ்வேறு கேஸ்கள். ஆனாலும் ஒரே நேரத்தில் இப்படி இரண்டு துறை அதிகாரிகள் ரெய்டு நடத்துவதால் காமராஜ் வீடு பரபரப்பாக காணப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications