அமித்ஷா தமிழ்நாடு வருகை மீண்டும் ரத்து.. பாஜகவின் ரோடு ஷோ பிளான்கள் கேன்சல்!
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் மேற்கொள்ள இருந்த தேர்தல் பிரச்சார நிகழ்வுகள் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் திமுக, அதிமுக தலைமையில் இரு கூட்டணிகள் களத்தில் உள்ள நிலையில், பாஜக தனி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தமிழ்நாட்டில் 19 தொகுதிகளில் பாஜக நேரடியாக போட்டியிடுகிறது. மேலும் 4 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன. மீதமுள்ள 16 தொகுதிகளில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார். மேலும் பாஜக தேசிய தலைவர்களும் அடிக்கடி தமிழகம் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் தமிழகத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஏப்ரல் 4, 5 ஆகிய 2 நாட்கள் தமிழகத்தில் அமித்ஷா பிரசாரம் செய்வதாக கூறப்பட்டது. டெல்லியில் இருந்து மதுரை வரும் அமித் ஷா, ஏப்ரல் 4 அன்று (அதாவது இன்று) மதுரை, தேனி, சிவகங்கையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாகவும், நாளை (ஏப்ரல் 5ஆம் தேதி) தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திடீரென அமித்ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது. தவிர்க்க முடியாத காரணங்களால் அவரது பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அமித்ஷா வருகையில் சிறிது மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் இன்று இரவு மதுரை வருவார் என்றும் கூறப்பட்டது.
இன்று இரவு 10 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனி விமானத்தில் மதுரை வரவுள்ளதாகவும், நாளை காலை 10 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு, சிவகங்கை, தென்காசி, குமரிக்கு சென்று பரப்புரை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
சிவகங்கை, தென்காசியில் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் அமித்ஷா காரைக்குடியில் நடக்கும் ரோடு ஷோவில் பங்கேற்றார். நாளை மாலை 3 மணிக்கு தென்காசியில் ரோடு ஷோவில் அமித் ஷா பங்கேற்பார், அதைத்தொடர்ந்து குமரியில் நடக்கும் ரோடு ஷோவில் அமித் ஷா பங்கேற்பார் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், அமித்ஷாவின் தமிழக வருகை மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவிர்க்க முடியாத காரணத்தால் அமித்ஷாவின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
-
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி












Click it and Unblock the Notifications