அமித்ஷா கணக்கும், விஜய் மீதான சாஃப்ட் கார்னரும்! திமுக, அதிமுகவுக்கு செம அடி.. அப்போ 6 சிலிண்டர்?
சென்னை: விஜய் தேர்தல் நேரத்தில் ஏகப்பட்ட வாக்குறுதிகளை வாரி வழங்கி வாயை விட்டுவிட்டார். 6 சிலிண்டர், அண்ணன் சீர், தாய்மாமன் சீர் இதெல்லாம் நடக்கிற காரியமா? தமிழ்நாடு முழுக்க பெண்களுக்கு இலவச பஸ் பயணம் கொடுத்ததனால் போக்குவரத்துக்கு ஏகப்பட்ட நஷ்டம் வருகிறது என்று இவர்களே சொல்கிறார்கள், அப்படியிருக்கும்போது விஜய் பிராமிஸ் செய்ததை, நிறைவேற்றினால் இன்னும் நஷ்டம் ஏறத்தானே செய்யும்? என்று அரசியல் விமர்சகர் பிரியன் கேள்வி எழுப்பி உள்ளார்.
பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்துள்ள பிரியன், "பாஜக ஒரு கொள்கை எதிரி என்று சொல்லிக்கொண்டுதான் விஜய் ஆட்சிக்கு வந்திருக்கிறார். ஆனால், கொள்கை எதிரி என்று சொல்லிவிட்டு அதை எந்த இடத்திலும் அவர் சீரியஸாக அட்டாக் செய்யவில்லை. மாநிலத் தேர்தல்தானே என்று வந்தவர்கள், இன்றைக்கு ஆட்சிக்கு வந்த பிறகு மத்திய அரசுடன் இணக்கமாக இருப்போம் என்று சொல்கிறார்கள்.

பாஜக ஒரு கொள்கை
இப்படி இணக்கமாக இருக்கும்போது உரிமைக்குக் குரல் கொடுப்பார்களா மாட்டார்களா என்ற கேள்விகள் இருக்கும்போது, அதற்கு முதல் பரிசோதனையாக இந்த சட்டமன்றக் கூட்டத்தொடர் அமைந்தது.
பாஜகவுடன் தவெக அரசு சண்டையைப் போட்டுக்கொள்ள வேண்டாம் என்று நினைக்கிறார்கள். மாநிலத்துக்கு நிறையப் பணம் வரவேண்டியிருக்கிறது, அவர்கள் நிதி கொடுக்காவிட்டால் நாம் சமாளிப்பது கஷ்டம் என்பதால், நம்முடைய பிரச்சனைகளைச் சரியாகச் சொல்லலாம், அதே சமயம் மோதிக்கொள்ள வேண்டாம் என்ற ஐடியாவில் இருக்கிறார்கள்.
கவர்னர் உரையில் மும்மொழித் திட்டம்
அதனால்தான் கவர்னர் உரையில் மூமொழித் திட்டம் வேண்டாம், சமக்ரா சிக்ஷா நிதியை ஒதுக்குங்கள், நாங்கள் இருமொழிக் கொள்கை வைத்திருக்கிறோம், கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வாருங்கள் போன்ற பல விஷயங்களைச் சாஃப்டாகச் சொல்லியிருக்கிறார்கள்.
மத்திய அரசின் நிதிப் பங்கீட்டை உயர்த்த வேண்டும் என்பதற்காகச் சிறப்புத் தீர்மானம் கொண்டு வருவோம் என்றும் சொல்லியிருக்கிறார்கள். இவர்கள் மத்திய அரசுக்குச் சொல்ல வேண்டியதை சாஃப்டாகச் சொல்கிறார்கள், மத்திய அரசும் இவர்களிடம் ரொம்ப மோதிக்கொள்ள வேண்டாம் என்று பேசாமல் இருக்கிறது.
பாஜகவின் 'வெயிட் அண்ட் வாட்ச்'
இப்போதுள்ள கவர்னர் அரலேக்கர் பக்கா ஆர்எஸ்எஸ் காரர்.. பொதுவாக ஆர்எஸ்எஸ் காரர்கள் எல்லாம் கொஞ்சம் விட்டுத்தான் பிடிப்பார்கள். அதனால்தான் மத்திய பாஜக இப்போதைக்கு தவெகவை விட்டுவைத்திருக்கிறது. விஜய் எப்படி ப்ரொசீட் பண்ணுகிறார்? என்பதை 'வெயிட் அண்ட் வாட்ச்' என்ற பாயிண்டில்தான் பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் இருக்கிறார்கள்.
விஜய்க்கு பாஜகவோடு மோதுவதில் இன்னும் உண்மையான டெஸ்ட் வரவில்லை. அப்போதுதான் இவருடைய உண்மை முகம் தெரியும், இவர் பதுங்குகிறாரா பாய்கிறாரா என்று பார்க்க முடியும். நாளைக்கே ஒரே நாடு ஒரே தேர்தல் வரும்போது அதை எதிர்க்கிறாரா இல்லையா, யூனிஃபார்ம் சிவில் கோடு வந்தால் எதிர்க்கிறாரா இல்லையா, எஃப்சிஆர்ஏ (FCRA) விவகாரத்தில் என்ன பண்ணப் போகிறார் என்பதில்தான் விஷயம் இருக்கிறது.
காங்கிரஸுடனான லிமிட்
விஜய் அரசுக்கு ஒரு பக்கம் காங்கிரஸ் அதிகாரத்தில் கூடவே இருக்கிறார்கள். நீங்கள் காங்கிரஸோடு ரொம்ப நெருங்கினால் பாஜகவுக்குப் பிடிக்காது. ஏற்கனவே காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் கொடுத்ததும், அவர்களை ஆட்சியில் பங்கு பெற வைத்ததும் பாஜகவுக்குக் கடும் கடுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாஜக இன்றைக்கு இந்தியா முழுக்கச் செய்கிற வேலை என்னவென்றால், ராஜ்யசபா உறுப்பினர்கள், லோக்சபா உறுப்பினர்களைப் பிளக்கிற வேலைதான்.
இங்கே தவெக காங்கிரஸோடு ஒரு குறிப்பிட்ட எல்லை வரைதான் நெருக்கமாக இருக்க முடியும். இவர் இந்தியா கூட்டணிக்கு எல்லாம் போனால் பாஜக சும்மா இருக்காது. அதனால் எனக்கு நேஷனல் பாலிடிக்ஸில் இன்ட்ரஸ்ட் இல்லை என்று விஜய் தப்பித்துக் கொள்வார்.
இன்னொரு பக்கம் பாஜகவோடு ரொம்ப நெருங்கினால் இங்கே காங்கிரஸும் தவெக கூட்டணி கட்சிகளும் சும்மா இருக்க மாட்டார்கள். "என்னய்யா ரொம்ப நெருங்குற, உரிமைகளை எல்லாம் விட்டுக்கொடுக்கிற" என்று கேட்க ஆரம்பிப்பார்கள்.
3500 கோடி ரூபாயை ரிலீஸ் பண்ணுங்கள்
3500 கோடி ரூபாயை ரிலீஸ் பண்ணுங்கள் என்று சொல்லிவிட்டு நாளைக்கே பிஎம்ஸ்ரீ (PM-SHRI) பள்ளிகளை ஏற்றுக் கொண்டாலோ அல்லது வொக்ஃப் போர்டு பில்லை ஏற்றுக் கொண்டாலோ அங்கே பிரச்சனை வரும். பரந்தூர் விமான நிலைய பிரச்சனை வரும்போதுதான் விஜய்யின் மூவ்மெண்ட் எப்படி என்று நமக்குத் தெளிவாகத் தெரியும்.
பாஜகவுக்கு செம ஹேப்பி
எனினும், மத்திய பாஜக, அதாவது மோடி-அமித்ஷா தான் நேரடியாக விஜய்யை மானிட்டர் பண்ணுகிறார்கள். அதேசமயம், பாஜகவை பொறுத்தமட்டில் விஜய்யைப் பார்த்து ஹாப்பியாக இருக்கிறார்கள். காரணம், திமுக கூட்டணியையும் உடைத்துவிட்டார், அதிமுகவையும் உடைக்கிறார்.
அதிமுக பாதி உடைந்துபோய் முக்கால் பங்கு காலி, ஒரு பங்குதான் இருக்கிறது. எங்களுக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, திமுகவுக்கு இரண்டு கண்ணும் போச்சே என்ற ஹேப்பியில் இருப்பதால் , விஜய் மீது கொஞ்சம் சாஃப்ட் கார்னர் உள்ளது.. கொஞ்ச நாள் ஆட்சியில் இருக்கட்டும் என்று பாஜகவும் வெயிட் பண்ணுகிறது.
தாய்மாமன் சீர் எப்போது
விஜய் தேர்தல் நேரத்தில் ஏகப்பட்ட வாக்குறுதிகளை வாரி வழங்கி வாயை விட்டுவிட்டார். 6 சிலிண்டர், அண்ணன் சீர், தாய்மாமன் சீர் இதெல்லாம் நடக்கிற காரியமா? தமிழ்நாடு முழுக்க பெண்களுக்கு இலவச பஸ் பயணம் கொடுத்ததனால் போக்குவரத்துக்கு ஏகப்பட்ட நஷ்டம் வருகிறது என்று இவர்களே சொல்கிறார்கள், அப்படியிருக்கும்போது விஜய் பிராமிஸ் செய்ததை, நிறைவேற்றினால் இன்னும் நஷ்டம் ஏறத்தானே செய்யும்?
அதேபோல ஸ்டாலின் டாக்ஸை ஒழிப்போம் என்கிறார்கள். அதை செய்தால் நல்லதுதான். ஆனால், வாக்குறுதி என்று தவெக வாயை விட்டுவிட்டீர்கள், இப்போது இருக்கும் நிலைமையில் அது உங்களுக்குக் கஷ்டமான காரியம்தான். எனவே விஜய்யின் கவர்ன்மெண்ட் எப்படி இருக்கிறது என்று இன்னும் ஒரு ஆறு மாசம் வெயிட் பண்ணிதான் பார்க்க வேண்டும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications