அமித்ஷாவே சொல்லிட்டாரு.. இந்த பிரஜ்வல் கிழவியைகூட விடலயே.. "பொள்ளாச்சி"யை மிஞ்சிய ரேவண்ணா.. விடாதீங்க
சென்னை: பொருளாதாரத்திலும், கல்வியிலும் நாம் எவ்வளவுதான் முன்னேறினாலும், பாலியல் வக்கிரங்கள் மட்டும், இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்தபடியே வருவது கவலையையும், அதிர்ச்சியையும், ஏற்படுத்தி வருகிறது.
நம்முடைய நாட்டை பொறுத்தவரை, பாலியல் வன்கொடுமைகள், பெண்களுக்கு எதிராகவும், பிஞ்சு குழந்தைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து நடக்கிறது.. அதிலும், தமிழகத்தில் மறக்க முடியாத அதிர்வுகளை தந்தது பொள்ளாச்சி பாலியல் சம்பவம்தான். நூற்றுக்கணக்கான பெண்களை ஏமாற்றி, பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோக்களை பார்த்து நிலைகுலைந்து போனது தமிழகம்..
திருநாவுக்கரசர் என்ற இளைஞர், இதற்கு மூளையாக செயல்பட்டாலும், ஒரு வருடம் கழித்து, 9 பேர் இதில் பிடிபட்டார்கள்.. இந்த பாலியல் வழக்கு விசாரணை, கோவை மகளிர் கோர்ட்டில் இன்னமும் நடந்து வருகிறது... இந்த கேஸை நடத்துவதற்காகவே, கோவை கோர்ட்டில் தனி அறை ஒதுக்கப்பட்டிருக்கிறது.. கடந்த மாதம்கூட, இந்த வழக்கு நடத்தப்பட்டது..

ஜெயில்: அப்போது, சேலம் ஜெயிலிலிருந்து, கோவை கோர்ட்டுக்கு இந்த 9 பேரும் அழைத்துவரப்பட்டனர்.. இதில் ஒருசிலர் மட்டும் முகத்தை மூடிக்கொண்டு வந்தார்கள்.. சிலர் சிரித்துக்கொண்டே வந்தார்கள்.. இவர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோக்கள் மட்டுமே, ஆயிரக்கணக்கில் இருப்பதாக சொன்னார்கள். ஆனால், வெறும் 30 வீடியோக்கள் மட்டுமே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு, இந்த வீடியோக்களின் அடிப்படையில் விசாரணை இறுதிக்கட்டத்துக்கு தற்போது வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட 8 பெண்கள் வாக்குமூலம் கொடுத்துள்ள நிலையில், குற்றப்பத்திரிகையும் தாக்கல செய்யப்பட்டுள்ள நிலையில், 9 பேருக்குமான தண்டனை எப்படி இருக்க போகிறதென்று தெரியவில்லை.
அதேசமயம், இந்த வழக்கில், கைதான 9 பேருக்கு மட்டுமே தொடர்புள்ளதாக உறுதியாக நம்மால் சொல்லிவிட முடியாது.. பெரிய அரசியல் "முதலைகளுக்கும்" இதில் நிறையவே பங்கிருப்பதாக, செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. பொள்ளாச்சியை சேர்ந்த, அந்த மூத்த தலைவரின் மகனின் பெயரும் இதில் அடிபட்டதை மறுக்க முடியாது.. ஆனால், அதே வேகத்தில் அந்த வாரிசுவின் பெயர் காணாமலேயே மறைந்துவிட்டது.
நிர்மலா தேவி: பொள்ளாச்சி வழக்கு என்றில்லை, அருப்புக்கோட்டை நிர்மலா தேவி வழக்கிலும், வக்கிரம் பிடித்த பெரிய "திமிங்கலம்" மறைந்துள்ளதாகவும், அவரையும் இதில் விசாரிக்க வேண்டும் என்ற கூக்குரல் மீண்டும் எதிரொலிக்க துவங்கி உள்ளது.
ஆக, பொள்ளாச்சி விவகாரமாகட்டும், நிர்மலா தேவி விவகாரமாகட்டும், இதில் அரசியல் தலையீடு இருப்பதாகவே கருதப்பட்டாலும், இதுவரை யாருமே நேரடியாக பாலியல் சம்பவத்தில் சிக்கவில்லை.
ஆனால், கர்நாடக அரசியலில் நடந்து வருவது அப்படியில்லை.. பாலியல் பலாத்காரத்தை செய்திருப்பது அரசியல் பிரமுகரே ஆவார்.. அதுவும் பாரம்பரியமான அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவர்.. நிறைய படித்வர்.. இளம் அரசியல்வாதி என்று பெயர் பெற்றவர்.. வாரிசு என்பதாலேயே விறுவிறுவென மேலே வந்தவர்.. ஆனால், கீழ்த்தரமான செயலை செய்து, இப்போது நாடு முழுவதும் அசிங்கப்பட்டு கொண்டிருக்கிறார் - ரேவண்ணாவின் வாரிசான அந்த பிரஜ்வல்.
வேலைக்கார பெண்: வீட்டு வேலைக்கு வந்த 69 வயது கிழவியைகூட விட்டுவைக்கவில்லை பிரஜ்வல்.. ஸ்டோர் ரூமில்தான் தன்னுடைய சில்மிஷத்தை ஆரம்பிப்பாராம் இந்த வாரிசு.. தொடக்கூடாத இடங்களில் தொட்டு, சேலையில் உள்ள "சேப்ட்டி பின்"னையும் அவரே கழற்றிவிட்டு, பலாத்காரத்தில் ஈடுபடுவாராம்.. அப்பாவும், மகனும் பெண்களை இப்படித்தான் வேட்டையாடுவார்கள் என்று அந்த பணிப்பெண்ணே போலீசில் சொல்லி உள்ளார்.
பிரஜ்வல்லின் ஏகப்பட்ட ஆபாச படங்கள், வசமாக சிக்கியிருக்கின்றன.. இதுகுறித்து சிறப்பு புலனாய்வு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும்நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு ரேவண்ணா, பிரஜ்வல் ஆகியோருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறதாம். இவர்கள் விசாரணைக்கு ஆஜராகாத பட்சத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்படுமாம்..
விசாரணை: இதற்கு நடுவில், ராஜாங்க ரீதியிலான பாஸ்போர்ட்டை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு, சித்தராமையா லட்டர் ஒன்றையும் எழுதிவிட்டார். ஆக, நாலாபக்கமும் வசமாக சிக்கியிருக்கிறார்கள் தேவகவுடாவின் ரத்தங்கள்...
அந்தவகையில், வழக்கிலிருந்தோ, வழக்கின் தண்டனையிலிருந்தோ தப்ப முடியாது என்றும் தெரியவந்துள்ளது..ஒருவேளை பாலியல் பலாத்காரம் உறுதியானால் என்ன மாதிரியான தண்டனை கிடைக்க போகிறது என்பது தெரியவில்லை..
"பெண்களுக்கு எதிரான வன்கொடுமை செய்பவர்களுடன் பாஜக இருக்க முடியாது: ரேவண்ணா வழக்கில் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினாலும், கர்நாடக பாஜகவையும் சேர்த்து அசிங்கப்படுத்தியிருக்கிறது ரேவண்ணா தரப்பு.
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் நண்பர்கள் என்று தங்களை நம்பி வந்த பெண்களை, சீண்டி சீரழிந்த அந்த இளைஞர்களுக்கும், தங்களை மலையென நம்பி உதவி கேட்டு வந்த பெண்களை சீரழித்த ரேவண்ணாவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.. இரு தரப்புமே வக்கிரங்களில் விளையாடி, அதை வீடியோவாக எடுத்து மிரட்டி, அட்டூழியம் செய்திருக்கிறார்கள்.
இப்படியெல்லாம் இனி நடக்க கூடாது என்று, நிர்பயா சம்பவத்திலிருந்தே நாம் சொல்லிக்கொண்டேயிருந்தாலும், தவறுகள் என்னமோ நடந்துகொண்டேயிருக்கின்றன.. எனவே சட்டங்களையும் இங்கு உடனே கடுமையாக்கப்பட்ட வேண்டியிருக்கிறது..
சட்டங்கள்: கண்ணை மறைக்கும் காமுகர்களுக்கு, குழந்தையாக இருந்தால் என்ன? 69 வயது கிழவியாக இருந்தால் என்ன? தன் வக்கிரத்தை தீர்த்து கொள்ளும் இதுபோன்ற காம பிண்டங்களை, வெறுமனே கைது செய்யாமல், பெண்கள் மீது "கை" வைக்கவே நடுநடுங்கும் அளவுக்கு மிக மிக கொடுமையான தண்டனையை தர வேண்டும் என்பதே நம் அனைவரது வேண்டுகோளாக முன்வைக்கப்படுகிறது..!!!
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications