ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த அமித்ஷா.. கேமை ஆரம்பித்த கோயல்! பக்கவாக நகரும் காய்கள்! 2026 என்னவாகும்?
சென்னை: 2026 தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் பக்கம் பார்வையை திருப்பி இருக்கிறது பாஜக தலைமை. பியூஷ் கோயல் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட நிலையில் அமித்ஷாவின் தமிழக வருகை என்டிஏ கூட்டணியை வேகம் எடுக்க வைத்துள்ளது. அமித்ஷாவின் வருகைக்கு பிறகு பாஜக -அதிமுக- பாமக கூட்டணி உறுதியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாக உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் முன்கூட்டியே தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளன. பிரசாரம், கூட்டணி பேச்சுவார்த்தை, நலத் திட்டங்கள் என அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது.
இந்த நிலையில், திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பாலும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படும் சூழலில், அதிமுக - பாஜக இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியான முடிவை எட்டாத நிலையிலேயே இருந்தது.

பாஜக அதிமுக கூட்டணி
கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைக்க பாஜக முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளு நடந்தது. கூட்டணிக்குள் நிலவிய சிக்கல்கள் இந்த பேச்சுவார்த்தையை மேலும் சிக்கலாக்கின. முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர், கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், அவர்களை மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக முயற்சி மேற்கொண்டது. ஆனால், இதற்கான பேச்சுவார்த்தைகள் இதுவரை இறுதி முடிவை எட்டவில்லை.
பியூஷ் கோயல்
அதேபோல், பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையிலான கருத்து வேறுபாடுகள், கூட்டணி முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறின. தேமுதிகவும் தனது கூட்டணி நிலைப்பாட்டை நாளை மறுநாள் அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளதால், தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்னும் முழுமையாகவில்லை. இந்தச் சூழ்நிலையில்தான், கூட்டணி விவகாரங்களை கையாள அனுபவம் வாய்ந்த தலைவர் என்ற அடிப்படையில் பியூஷ் கோயலுக்கு தமிழக தேர்தல் பொறுப்பு வழங்கப்பட்டது.
பாஜக அதிமுக கூட்டணி
தொடர்ந்து அவர் சென்னை வந்த போது, முதற்கட்டமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து அதிமுக - பாஜக கூட்டணி கணக்குகள் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. தொடர்ந்து அமித் ஷா வருகையும் இந்த பணிகளை துரிதப்படுத்தியுள்ளது. அதன் பலனாகத்தான் தற்போது அதிமுக பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில் அவர் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பது ஜனவரி ஒன்பதாம் தேதி மாநாட்டின் போது தெரிந்துவிடும்.
ஓபிஎஸ் தினகரன் பாஜக
இது ஒருபுறம் இருக்க ஓபிஎஸ் டிடிவி தினகரன் ஆகியோரை கூட்டணிக்குள் கொண்டு வரவும் பாஜக தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது. இருதரப்பிலும் பேச்சுவார்த்தைகள் மறைமுகமாக நடைபெற்று வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தான் இடையில் பிரச்சனையாக இருப்பதாக பாஜகவினர் சொல்கின்றனர். அமித்ஷாவும் பியூஷ் கோயலும் தமிழகத்தின் பக்கம் தங்கள் பார்வையை திருப்பி இருக்கும் நிலையில் அடுத்தடுத்து பல அதிரடி மாற்றங்கள் அரங்கேறலாம் என சொல்லப்படுகிறது.
-
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
அதிமுக கூட்டணியில் எவ்வளவு சீட்? அமித்ஷாவை சந்தித்த டிடிவி தினகரன்.. அடுத்து அன்புமணியுடன் மீட்டிங் -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
அமித்ஷா ஒவ்வொரு முறையும் தமிழகம் வர முடியுமா? அதனால நாங்கள் டெல்லிக்கு போறோம்! என்ன தவறு? தினகரன் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா!












Click it and Unblock the Notifications