3வது முறையாக தமிழகம் வரும் அமித் ஷா.. 2 தலைவர்களுடன் சந்திப்பு? சென்னையில் முக்கிய மீட்டிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜூலை 8ஆம் தேதி மீண்டும் தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த பயணத்தின் போது தொகுதி வாரியான ஆய்வு பணிகளை அமித்ஷா மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், சில கூட்டணி கட்சித் தலைவர்களை தனி அறையில் சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிய உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகி இருக்கிறது. ஏப்ரல் மாதம் சென்னை வந்த அமித்ஷா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கூட்டணியை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்த மாதத்தில் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் மதுரை வந்த அமித்ஷா, தென் மாவட்ட பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Amit Shah to Visit Tamil Nadu on July 8 To Hold Closed-Door Talks with Alliance Leaders

அமித்ஷா விசிட்

அதேபோல் மதுரையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்திலும் அமித்ஷா பங்கேற்றார். அமித்ஷாவின் தொடர் வருகை தமிழக பாஜகவினர் மத்தியில் உற்சாகத்தை கொடுத்துள்ளது. இம்முறை தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக இருப்பதாகவும் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 3வது முறையாக ஜூலை 8ஆம் தேதி அமித்ஷா சென்னை வரவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மதுரை வந்தபோதே தகவல்

மதுரை வந்த போதே பாஜக நிர்வாகிகளிடம் ஒவ்வொரு மாதமும் வருவேன் என்று அமித்ஷா கூறி இருக்கிறார். இதன் காரணமாகவே நயினார் நாகேந்திரன், இனி அமித்ஷா அடிக்கடி தமிழ்நாடு வருவார் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் ஜூலை மாதம் வருவது பலரின் கவனத்தையும் திருப்பி இருக்கிறது. இம்முறை தமிழ்நாட்டின் முக்கிய நிர்வாகிகளை அனைவரையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ராமதாஸ் உடன் சந்திப்பு?

அதேபோல் தொகுதி வாரியாகவும் ஆய்வு பணிகளை அமித்ஷா மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது. அதன்பின் சில நிர்வாகிகளுடன் சென்னையில் தனித்து ஆலோசனையில் ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது. அதன்பின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோரை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓபிஎஸ், டிடிவி தினகரனுக்கு நேரம்?

அதுமட்டுமல்லாமல் அமித்ஷாவை இம்முறை ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த முறை மதுரை வந்த போதும், அமித்ஷா நேரம் கொடுக்கவில்லை. இதனால் இம்முறையாவது சந்திப்பு நடக்குமா என்று எதிர்பார்த்துள்ளனர். அதேபோல் குருமூர்த்தி மூலமாக ராமதாஸிடம் நடந்து வரும் பேச்சுவார்த்தை அதற்குள் முடிக்கப்படும் என்றும் பார்க்கப்படுகிறது.

பாஜக கூட்டணி

ஏற்கனவே மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செப்டம்பர் மாதத்திற்குள் பாஜக கூட்டணி முழுமை பெற்றுவிடும் என்று கூறி இருந்தார். அமித்ஷாவின் தொடர் வருகை அதனையொட்டியே இருக்கிறது. இதனால் சென்னைக்கு வரும் போது, இம்முறை கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+