அமித்ஷா வரும் அடுத்த நாளே.. மா.செ.க்கள் கூட்டத்தை நடத்தும் பிரேமலதா! இறுதியாகும் கூட்டணி?
சென்னை: தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி கணக்குகள் ஓரளவு நேர் செய்யப்பட்டு விட்டு நிலையில், தேமுதிக மட்டும் இன்னும் தகவல் தெரிவிக்காமல் இருக்கிறது. ஜனவரி 9ஆம் தேதி மாநில மாநாட்டின் போது கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் எனக் கூறியிருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த். இந்த நிலையில் ஜனவரி 4-ம் தேதி அமித்ஷா தமிழகம் வரும் நிலையில், ஜனவரி 5ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என தேமுதிக அறிவித்துள்ளது.
2026 சட்டமன்ற தேர்தல் களம் மெல்ல மெல்ல சூடு பிடிக்க ஆரம்பித்து இருக்கிறது. தமிழகத்தை ஆளும் கட்சியான திமுகவும், ஆண்ட கட்சியான அதிமுகவும் இந்த 2026 தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றன.
திமுக கூட்டணி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது தான். அதில் தொகுதி பங்கீடு மட்டும்தான் மிச்சம் இருக்கிறது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக இன்னும் சில கட்சிகள் அந்த கூட்டணியில் இருக்கிறது.

2026 தமிழக சட்டமன்ற தேர்தல்
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கம் லேசாக கேட்கத் தொடங்கி இருந்தாலும் திமுக தான் இறுதி முடிவு எடுக்கும். கடந்த ஆண்டு போலவே கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க அதிமுக கூட்டணியை இன்னும் இறுதி செய்யவில்லை. பாஜக மற்றும் ஏற்கனவே பாஜகவோடு கூட்டணியில் இருந்த ஐஜேகே, தமாகா உள்ளிட்ட கட்சிகள் அதிமுக கூட்டணியில் இருக்கின்றனர். பாமக உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கும் நிலையில் கூட்டணிக்கு சம்மதித்துள்ளார் அன்புமணி.
அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை
விரைவில் பாமக -அதிமுக- பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாக திகழ்ந்த தேமுதிகவின் நிலைப்பாடு இன்னும் தெளிவாக தெரியவில்லை. கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த தேமுதிக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது, இந்த மாதம் 9ஆம் தேதி கட்சியின் மாநாடு நடக்கும் அப்போது கூட்டணி குறித்து பேசி முடிவெடுக்கப்படும் என கூறி இருக்கிறார். இந்த நிலையில் தொகுதி பேரம் காரணமாகவே அதிமுக திமுக அழைப்பு விடுத்தும் பதிலளிக்காமல் இருக்கிறார் என்கின்றனர்.
பிரேமலதா விஜயகாந்த்
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் கிட்டத்தட்ட கூட்டணி முடிவை அறிவித்துவிட்ட நிலையில் தேமுதிக மட்டும் இன்னும் கூட்டணி தொடர்பான நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. கடைசி நேர பேரத்துக்காக தேமுதிக இவ்வாறு செய்வதாக விமர்சனமும் எழுந்துள்ளது. அதிமுக, திமுக மற்றும் தமிழக வெற்றி கழகத்துடன் ஒரே நேரத்தில் பேசி வருவதாகவும், எந்த கட்சி அதிக சீட்டுகளை தருகிறதோ அந்த கட்சியுடன் கூட்டணி செல்ல பிரேமலதா விஜயகாந்த் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
தேமுதிக நிலைப்பாடு
செப்டம்பர் மாதத்தில் இருந்து தேமுதிக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வரும் நிலையில், ஜனவரி 9ஆம் தேதி மாநில மாநாடு நடைபெறும் எனவும், அப்போது கூட்டணி தொடர்பாக அறிவிக்கப்படும் என பேசி இருக்கிறார் பிரேமலதா. இதற்கிடையே ஜனவரி 5ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
தேமுதிக மாநாடு
ஜனவரி ஒன்பதாம் தேதி நடைபெறும் மாநாடு, கூட்டணி தொடர்பான இறுதி முடிவுகளை எடுப்பதற்காக இந்த கூட்டம் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க ஜனவரி நான்காம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகிறார். புதுக்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார். இந்த நிலையில் அமித்ஷா வருகைக்கு அடுத்த நாளே தேமுதிக மா.செ.க்கள் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்டக்கது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications