அமித்ஷா ஆரம்பித்த அரசியல் ஆட்டம்! எஸ்பி வேலுமணிக்கு கதவை மூடிய டெல்லி? எடப்பாடி பழனிசாமி ஏறும் மவுசு
சென்னை: தமிழக அரசியல் களம் தற்போது அதிரடி திருப்பங்களுடன் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட கோவை மாவட்டத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மேற்கொண்ட அரசியல் நகர்வுகள் தற்போது, ஒரு இக்கட்டான சூழலில் தள்ளிவிட்டிருக்கிறதாம்.
மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் சமீபத்தில் ஒரு பேட்டி தந்திருந்தார்.. 'அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக’ வேலுமணியின் நிலை மாறிவிட்டது.. விஜய்க்கு ஆதரவு தருகிறேன் என்று சொல்லி, இதற்காக எடப்பாடி பழனிசாமியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் வேலுமணி.

எஸ்பி வேலுமணி அரசியல்
லீமா ரோஸிடம் பெரிய தொகையைப் பெற்று, அதில் 300 கோடியை அரசியல் விளையாட்டுகளுக்காகப் பயன்படுத்தியதோடு, கட்சியையும் உடைக்க முயன்றார். ஆனால், கட்சியின் நிர்வாக அதிகாரம் இன்னும் முழுமையாக பொதுச்செயலாளரின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதால், வேலுமணியால் நினைத்ததைச் செய்ய முடியவில்லை.
25 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாகக் காட்டிக்கொண்டாலும், நம்பிக்கை வாக்கெடுப்பு போன்ற சூழல்களில் இவர்களால் எதையும் சாதிக்க முடியவில்லை. இவர்களைப் பற்றிய ஆதாரங்களுடன் கூடிய புகாரை சபாநாயகரிடமும் ஆளுநரிடமும் எடப்பாடி பழனிசாமி வழங்கிவிட்டதால் கட்சித் தாவல் சட்டப்படி இவர்களின் பதவிகள் பறிபோகும் அபாயம் உள்ளது.
25 எம்எல்ஏக்கள் முடிவு?
இந்த எம்.எல்.ஏ.க்களை விஜய்யே நேரடியாகச் சந்தித்துப் பேசியது அவருக்கும் பெரிய சிக்கலாக மாறக்கூடும்... ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வழக்கின் பாணியில், இந்த விவகாரம் சி.பி.ஐ. வசம் சென்றால் விஜய் கைதாகும் அளவுக்குகூட போகலாம்.. எடப்பாடி கொடுத்த புகாரின் அடிப்படையில், இவர்களை அமைச்சராக்க முடியாது என்று ஆளுநரே திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். இப்போது வேலுமணி போன் செய்தாலும் ஆதவ் அர்ஜுனா தரப்பில் எடுப்பதில்லையாம்" என்றெல்லாம் கூறியிருந்தார்.
இந்த நிலைதான் இப்போதும் தொடர்கிறதாம்.. விஜய் தரப்பிலிருந்து ஏதேனும் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வேலுமணி மேற்கொண்ட முயற்சிகளும், தற்போதைய சூழலில் கானல் நீராகவே மாறிப்போயுள்ளன.
அமித்ஷா, மோடி
இத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியில், டெல்லியின் ஆதரவும் வேலுமணிக்குத் தாராளமாகக் கிடைக்கவில்லை என்பதுதான் அவருக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைத் தொடர்பு கொள்ள வேலுமணி எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்திருப்பது, தேசிய அளவிலான அவரது செல்வாக்கு மங்கி வருவதை உறுதி செய்கிறது.
பிரதமர் மோடியையும் அமித் ஷாவையும் சந்திக்க நேரம் கேட்டுள்ள வேலுமணிக்கு, இப்போதைக்கு எங்களைத் தொந்தரவு செய்யாதீர்கள். மேற்கு வங்கம், அசாம் தேர்தல் களைப்பில் உள்ளோம், பிறகு பார்த்துக்கொள்ளலாம்" என்று டெல்லி தலைமை பதிலை சொல்லியதாம்..
கதவை மூடிய டெல்லி
அதிமுகவில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி சொல்வதைக் கேட்டு நடக்குமாறும் டெல்லி தலைமை அறிவுறுத்தியிருப்பது, வேலுமணிக்கு விழுந்த மிகப்பெரிய பேரிடி என்கிறார்கள்.
தற்போதைய சூழலில் வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.க்களின் நிலைமை மிகவும் பரிதாபத்திற்குரியதாக மாறியுள்ளது. இனிவரும் நாட்களில், இவர்கள் எடப்பாடியின் பிடியிலிருந்து கட்சியை மீட்கும் முயற்சியைக் கைவிட்டுவிட்டு, மீண்டும் தாய் கழகத்திற்கே யூ-டர்ன் அடித்துத் திரும்பி வரும் வாய்ப்புகளே அதிகம் இருபபதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள்..
எடப்பாடி பழனிசாமி
அரசியல் இருப்புக்காகக் கையாண்ட அதிரடித் திட்டங்கள் தோல்வியடைந்த நிலையில், எடப்பாடியின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடுவதை விட, அவரிடம் சமரசம் செய்துகொள்வதே இவர்களது அரசியல் வாழ்வுக்குச் சிறந்த வழி என்பதை அவர்களுள் சிலர் உணரவும் தொடங்கியுள்ளனராம்.
ஆகமொத்தம், சுயலாபத்திற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த அரசியல் நகர்வுகள், அ.தி.மு.க.வின் உட்கட்சி பூசலைத் தற்காலிகமாக எடப்பாடி பழனிசாமிக்குச் சாதகமாகவே முடித்து வைத்திருக்கிறது. இனி வேலுமணியின் அடுத்த கட்ட நடவடிக்கை, எடப்பாடியை அமைதிப்படுத்தி கட்சிக்குள் தனது செல்வாக்கை மீட்டெடுக்கும் நோக்கில் மட்டுமே அமையக்கூடும் என்று ஆரூடம் சொல்கிறார்கள் தமிழக அரசியல் நிபுணர்கள்..!!
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications