முதல்வர் வேட்பாளர் தினகரன்- அமமுக செயற்குழு, பொதுக்குழு அதிரடி தீர்மானம்!!
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை முதல்வராக்குவோம் என்று அக்கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவில் அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுகவில் சசிகலாவால் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டவர் தினகரன். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தினகரனும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும் போர்க்கொடி தூக்கினர்.

இதனையடுத்து அதிமுகவில் இருந்து தினகரன் நீக்கப்பட்டார். இதனால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார் தினகரன். அக்கட்சியின் பொதுச்செயலாளராகவும் தினகரன் இருந்து வருகிறார். பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலாவுக்கு 23 மணிநேர வரவேற்பு கொடுத்து அமமுகவினர் அசத்தினர்.
இந்த நிலையில் அமமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று 10 இடங்களில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சிப் பொதுச்செயலாளர் தினகரனை முதல்வராக்க பாடுபடுவோம் என அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்மூலம் அமமுகவின் முதல்வர் வேட்பாளர் தினகரன் என பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அமமுக தலைமையில் கூட்டணி அமைப்பது தொடர்பான அதிகாரம், தினகரனுக்கு வழங்கியும் செயற்குழு, பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அமமுக பொதுக்குழு தீர்மானங்கள் முழுமையாக.....
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications