எடப்பாடி எப்படி முட்டிப்போட்டு முதல்வர் ஆனார்ன்னு இந்த உலகமே பார்த்தது... சிஆர் சரஸ்வதி தாக்கு
எடப்பாடி பழனிசாமி மீது சிஆர் சரஸ்வதி சரமாரியான குற்றச்சாட்டுகளை கூறினார்.
சென்னை: "எடப்பாடி எப்படி அன்னைக்கு முட்டிப்போட்டு எழுந்து முதலமைச்சர் பதவியை வாங்கினார் என்பதை இந்த உலகமே பார்த்தது.. இதுல நாங்க என்ன தனியா சொல்றது? தேர்தல் என்று வந்துவிட்டால், சட்டத்தின்முன் அனைவரும் சமம்தான்.. ஆனா இங்க அப்படி இல்லையே" என்று ஆளும் தரப்பை பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகிறார் சிஆர் சரஸ்வதி!
ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது, சிலர் மட்டும் அவரது நிலை பற்றி பேட்டி அளித்தார்கள். அதில் மிக முக்கியமானவர் சி.ஆர். சரஸ்வதி.
"அம்மா நன்றாக இருக்கிறார். இட்லி சாப்பிட்டார்..வேக வைத்தை ஆப்பிளை சாப்பிட்டார்" எல்லா மீடியாக்களிலும் உட்கார்ந்து பேட்டியே அளித்தார். டிடிவி தினகரன் அணியில் ஐக்கியமாகிவிட்ட அவர், அதற்கு பிறகு காணாமலே போய்விட்டார்.

தேர்தல் ஆணையம்
அவ்வப்போது சில பேட்டிகள் வந்து தந்தாலும், இப்போது தேர்தல் சமயம் என்பதால் பிரச்சாரத்தில் தென்படுகிறார். அப்போது அதிமுக, திமுக தரப்பை லெப்ட் ரைட் வாங்குகிறார். தேர்தல் ஆணையம் செயல்பாடுகள், ஆளும் கட்சி மீதான ஆதங்கத்தை ஒரு வார இதழுக்கு பேட்டியாக அளித்துள்ளார்

அதிகார துஷ்பிரயோகம்
அதில் அவர் சொல்லி உள்ளதாவது: "திருப்பரங்குன்ற பிரச்சாரத்தின்போது, ஒரு விடுதியில் நாங்கள் தங்கியிருந்தோம். அப்பதான் போலீஸ் பட்டாளமே வந்து திடுதிப்பென்று வந்து சோதனை என்று சொன்னார்கள். கேட்டால் மேலிடத்து உத்தரவாம்! யார் அந்த மேலிடம்னு நமக்குதான் தெரியுமே? அதிகார துஷ்ப்பிரயோகம் செய்யும் என்பதற்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் இவங்க ரெண்டுபேரும்தான் எடுத்துக்காட்டு.

முட்டி போட்ட முதல்வர்
ஜெயலலிதா இறந்ததும் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தாரா? சசிகலா குடும்பம் வேண்டாம் என்று தள்ளிவிட்டு தேர்தலில் நின்று வெற்றி பெற்று முதலமைச்சரானாரா? முதல்ல இந்த முதலமைச்சர் என்ற அடையாளமே கூவத்தூரில் எப்படி வந்தது? எடப்பாடி பழனிசாமி எப்படி முட்டிபோட்டு எழுந்து முதலமைச்சர் பதவியை வாங்கினார் என்று இந்த உலகமே பார்த்ததே.. நாங்க என்ன சொல்றது?

16 வருடம்
தேர்தல் என்று வந்துவிட்டால் முதல்வர், துணைமுதல்வர் இவங்க எல்லாருமே சட்டத்திற்கு முன் சமம்தான். அதிமுகவில் எனக்கு கிடைச்ச 16 வருட அனுபவத்தில் சொல்றேன், இவங்க எல்லாம் யாரால் பதவிக்கு வந்தாங்கன்னு எனக்கு தெரியும்" என்றார்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications