உடல்நலம் தேறி வரும் சசிகலா... சர்வமத வழிபாடு நடத்திய அமமுக நிர்வாகிகள்..!
சென்னை: சசிகலா பூரண உடல்நலம் பெற வேண்டி திருச்சி மாவட்ட அமமுக நிர்வாகிகள் சர்வமத வழிபாட்டில் ஈடுபட்டனர்.
சொத்து குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சசிகலா சுவாசப் பிரச்சனை மற்றும் கொரோனா தொற்று காரணமாக கடந்த 20-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட போதிலும் அவர் விக்டோரியா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் சசிகலாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கான அறிகுறிகளும் குறைந்துவிட்டன. சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், உதவியுடன் அவர் நடப்பதாகவும் விக்டோரியா மருத்துவமனை அறிக்கை அளித்துள்ளது.
இந்த சூழலில் திருச்சி மாவட்டம் வையம்பட்டி பகுதி அமமுக நிர்வாகிகள் வழக்கறிஞர் துளசி சேகரன் மற்றும் என்.எஸ்.என்.அப்துல்லா ஆகியோர், சசிகலா பூரண உடல்நலம் பெற வேண்டி, கடந்த இரண்டு நாட்களாக சர்வமத வழிபாடு நடத்தினர். மணப்பாறை அருகே உள்ள மட்டபாறைப்பட்டி கோயில் மற்றும் இளங்காகுறிச்சியில் உள்ள தர்ஹாவில் சசிகலாவுக்காக சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து தேவாலயத்திலும் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படவுள்ளது.

மேலும், சசிகலாவுக்காக அன்னதானமும் வழங்கப்பட்டது. சசிகலாவின் தமிழக வருகையை ஆவலோடு எதிர்நோக்கியுள்ள அமமுகவினர் அவருக்கு அவருடைய வயதை குறிக்கும் வகையில் 66 இடங்களில் வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர். ஒசூரில் தொடங்கி சென்னை மெரினா ஜெயலலிதா நினைவிடம் வரை 66 இடங்களை தேர்வு செய்து அது குறித்த தகவலை டிடிவி தினகரன் தரப்பிலிருந்து நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications