இஸ்லாம் என் மதம், தமிழ் என் தாய்மொழி.. கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்..! டிடிவி தினகரன் புகழஞ்சலி
சென்னை: சுதந்திர போராட்ட வீரரான காயிதே மில்லத் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
சுதந்திர போராட்ட வீரரான காயிதே மில்லத் அவர்கள், தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர். இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய, இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினராகவும் பணியாற்றியவர்.

தமிழகத்தின் மதிப்பு மிக்க தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த காயிதே மில்லத் அவர்களின் நினைவாக, கடந்த 1983ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர், காயிதே மில்லத்தின் வாழ்க்கை குறிப்புகளை 5ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் இடம் பெற செய்தார்.
அதே போன்று, கடந்த 2003ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தான் தமிழக அரசு சார்பாக, சென்னை அண்ணாசாலையில் உள்ள காயிதே மில்லத் மகளிர் கல்லூரி வளாகத்தில், காயிதே மில்லத் அவர்களுக்கு மணிமண்டபம் நிறுவப்பட்டது . தூய்மையான அரசியலை முன்னெடுத்த அவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என அழைக்கப்படுகிறார்.
இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"இஸ்லாம் என் மதம், தமிழ் என் தாய்மொழி என பிரகடனப்படுத்தி, மத நல்லிணக்கத்திற்காக தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாள் இன்று.
அரசியலிலும், தான் சார்ந்த இயக்கத்திலும் நேர்மையுடனும், துணிவுடனும் இயங்கிய மாமனிதர் காயிதே மில்லத் அவர்களின் தன்னலமற்ற தூய்மையான அரசியல் செயல்பாடுகளை எந்நாளும் நினைவில் வைத்து போற்றுவோம்." என கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications