அதே சென்னை ராயப்பேட்டை ஏரியாவில்தான்... அமமுக மண்டல வாரியான மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
சென்னை: அதிமுகவின் செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் விவகாரம் காரசாரமாய் வெடித்துக் கொண்டிருந்த அதே சென்னை ராயப்பேட்டையில் அமைதியாக நடைபெற்று கொண்டிருக்கிறது டிடிவி தினகரனின் அமமுக மண்டலவாரியான மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.
ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலா சிறைவாசம் அனுபவித்து வருகிறார். இந்த சிறைவாசம் அடுத்த ஜனவரி 27-ந் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. சசிகலா முன்கூட்டியே விடுதலையாவார் என்றும் கூறப்படுகிறது.

இதனால்தான் அதிமுகவில் சசிகலாவுக்கு யார் விசுவாசமாக இருக்கப் போகிறோம்? யார் சசிகலாவை உறுதியாக எதிர்க்கப் போகிறோம்? என்கிற போட்டியே நிலவுகிறது. சசிகலாவை அதிமுகவுக்குள் நுழையவே விடமாட்டோம் என ஒருதரப்பும்; சின்னம்மா இல்லாமலா கட்சி என இன்னொருதரப்பும் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இது தொடர்பாகத்தான் அண்மையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டெல்லி பயணம் மேற்கொண்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் படுகாரசாரமாக சுமார் 5 மணிநேரம் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதே நேரத்தில் ராயப்பேட்டையில் உள்ள அமமுக கட்சி தலைமை அலுவலகத்தில் மண்டல வாரியான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த மா.செ.க்கள் கூட்டம் வரும் புதன்கிழமை வரை நடைபெற உள்ளது. இன்றைய கூட்டத்தை வெற்றிவேல், சி.ஆர். சரஸ்வதி உள்ளிட்டோர் தலைமை ஏற்று வழிநடத்தினர். இதில் அமமுக உறுப்பினர் சேர்க்கை குறித்து வலியுறுத்தினார் வெற்றிவேல் என்கின்றன தகவல்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications