அம்மா மக்கள் முன்னேற்றக் கழக புதிய நிர்வாகிகள்...டிடிவி தினகரன் அறிக்கை வெளியீடு!!
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளராக ஏ.கிங்ஸ்லி ஜெரால்டு, கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இளைஞரணி துணை செயலாளராக கே. சீனிராஜ் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ''இதுவரை தூத்துக்குடி வடக்கு மாவட்டம், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் பொறுப்பிலிருந்து கே. சீனிராஜ் விடுவிக்கப்படுகிறார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளராக,பி. விஜயபாஸ்கரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சட்டசபை தொகுதி
திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை மத்தி, திருவண்ணாமலை தெற்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகள் மறுசீரமைக்கப்படுகிறது. இதன்படி, திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தின் கீழ் ஆரணி சட்டசபை தொகுதி, செய்யாறு சட்டசபை தொகுதி, வந்தவாசி சட்டசபை தொகுதி, திருவண்ணாமலை மத்திய மாவட்டத்தின் கீழ் திருவண்ணாமலை சட்டசபை தொகுதி, கலசப்பாக்கம் சட்டசபை தொகுதி, போளூர் சட்டசபை தொகுதி, திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தின் கீழ் செங்கம் சட்டசபை தொகுதி, கீழ்பெண்ணாத்தூர் சட்டசபை தொகுதி ஆகியவை கொண்டு வரப்படுகின்றன.

மூவர் தேர்வு
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்புக்கு மா.கி.வரதராஜன்
திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழக செயலாளர் பொறுப்புக்கு ஏ.ஜி.பஞ்சாட்சரம்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்புக்கு செங்கம் ஏ.பரந்தாமன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விடுவிப்பு
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக புதுச்சேரி மாநில கழக இணை செயலாளராக பா.விமலாஸ்ரீ, துணை செயலாளராக ஜெ.தமிழரசி நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை புதுச்சேரி மாநில கழக இணை செயலாளர் பொறுப்பிலிருந்து மூ.லாவண்யா அப்பொறுப்பிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்.

நியமனம்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நாகப்பட்டினம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் ஆர்சிஎம் மஞ்சுளா சந்திரமோகன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.

உத்தரவு
கழக அமைப்பு ரீதியாக தற்போது பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், சம்மந்தப்பட்ட மாவட்ட கழக செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கழக பணிகளை ஆற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். கழகம் மற்றும் சார்பு அமைப்புகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும்வரை, தற்போதுள்ள நிர்வாகிகள் சம்மந்தப்பட்ட மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகப் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்றுவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications