அமமுக பழனியப்பனிடம் பேரம் பேசினாரா ஸ்டாலின் மாப்பிள்ளை? வைரலாகும் ஆடியோ!
சென்னை: தினகரன் தலைமையிலான அமமுகவின் முக்கிய தூண்களில் ஒருவரான பழனியப்பனை திமுகவுக்கு இழுக்கும் வகையில் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் பேசியதாக ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் படுதோல்விக்குப் பின்னர் தினகரனின் கூடாரம் காலியாகி வருகிறது. அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன், தினகரனை ஆபாசமாக விமர்சித்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் தங்க தமிழ்ச்செல்வனை அமமுகவில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளார் தினகரன். அதிமுக, திமுக அல்லது திவாகரனின் அதிகவுக்கு தங்க தமிழ்ச்செல்வன் தாவக் கூடும் என கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தினகரனின் வலதுகரமாக இருக்கும் பழனியப்பனை திமுக வளைத்துவிட்டதாக ஒருதகவல். இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனே பழனியப்பனிடம் பேரம் பேசியதாக ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
இந்த ஆடியோவின் உண்மை தன்மை எதுவென தெரியவில்லை. அதில், பழனியப்பன் வசம் சில சட்டசபை தொகுதிகள் ஒப்படைக்கப்படும். அவரே வேட்பாளர்களை முடிவு செய்யலாம் என கூறப்பட்டிருக்கிறதாம். இந்த தகவல் திமுக வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அதிமுக, அமமுகவில் இருந்து வருபவர்கள்தான் திமுகவின் தீர்மானிக்கும் சக்திகள் என்றால் காலம் காலமாய் சிங்கிள் டீ குடித்து கொண்டு கட்சி வேலைபார்க்கும் எங்களுக்கு இங்கே மதிப்பே இல்லையா என கொந்தளிக்கின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications