சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

24 வேட்பாளர்கள் ரெடி.. அமமுக லோக்சபா முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. டிடிவி தினகரன் வெளியிட்டார்!

லோக்சபா தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இன்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிடுகிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    AMMK Candidates List: அமமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்- வீடியோ

    சென்னை: அமமுக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பட்டியலை வெளியிட்டார்.

    லோக்சபா தேர்தலுக்கு தமிழகம் தயாராகிவிட்டது என்றுதான் கூற வேண்டும். லோக்சபா தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது.

    அதே நாளில் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதனால் தமிழகம் அதிக எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

    18 தொகுதி இடைத்தேர்தல்.. 9 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்ட டிடிவி தினகரன்.. அமமுக லிஸ்ட் இதோ!18 தொகுதி இடைத்தேர்தல்.. 9 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்ட டிடிவி தினகரன்.. அமமுக லிஸ்ட் இதோ!

    அமமுக கட்சி

    அமமுக கட்சி

    இந்த லோக்சபா தேர்தல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து போட்டியிட உள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் தேர்தலை தனியாக சந்திக்க இந்த கட்சி முடிவெடுத்து இருக்கிறது.

    2 நாட்கள் ஆலோசனை

    2 நாட்கள் ஆலோசனை

    இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சி உறுப்பினர்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தி வந்தார். தேர்தலில் யாரை களமிறக்குவது என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வந்தார். லோக்சபா தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் யாரை போட்டியிட வைப்பது என்று ஆலோசித்து வந்தார்.

    பட்டியல்

    இதையடுத்து தற்போது லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு, பெங்களூர் சிறையில் இருக்கும் உறவினர் சசிகலாவை சந்தித்து ஆலோசித்த பிறகு இந்த முடிவை டிடிவி தினகரன் எடுத்துள்ளார். தற்போது அமமுக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பட்டியலை வெளியிட்டார்.

    இதுதான் பட்டியல்

    இதுதான் பட்டியல்

    மக்களவை தேர்தல் வேட்பாளர் பட்டியல்:திருவள்ளூர் (தனி)- பொன்.ராஜா,

    • தென் சென்னை- இசக்கி சுப்பையா.
    • ஸ்ரீபெரும்புதூர்- தாம்பரம் நாராயணன்
    • காஞ்சிபுரம் (தனி)- முனுசாமி
    • விழுப்புரம் (தனி)- கணபதி
    • சேலம் - எஸ் கே செல்வம்
    • நாமக்கல் - சாமிநாதன்
    • ஈரோடு- செந்தில் குமார்
    • திருப்பூர் - எஸ்.ஆர் செல்வம்,
    • நீலகிரி (தனி)- எம்.ராமசாமி,
    • கோவை - அப்பாதுரை
    • பொள்ளாச்சி - எஸ். முத்துக்குமார்
    • கரூர் - தங்கவேல்
    • திருச்சி- சாருபாலா தொண்டைமான்
    • பெரம்பலூர் - ராஜசேகரன்
    • சிதம்பரம் (தனி) - இளவரசன்
    • மயிலாடுதுறை - செந்தமிழன்,
    • நாகை (தனி)- செங்கொடி,
    • தஞ்சை - முருகேசன்
    • சிவகங்கை - வி. பாண்டி
    • மதுரை - டேவிட் அண்ணாதுரை
    • ராமநாதபுரம் - ஆனந்த்
    • தென்காசி (தனி) - எஸ்.பொன்னுத்தாய்
    • நெல்லை - ஞான அருள் மணி

    English summary
    AMMK Dept. Gen.Sec TTV Dinakaran will announce the party's candidates' list today in Chennai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X