இன்று 11 மணிக்கு தொடங்கும்.. மக்கள் வெளியே வராதீர்கள்.. ஆம்பன் புயலால் தமிழகத்திற்கு ஏற்பட்ட சிக்கல்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மக்கள் அதிகமாக வெளியே வர கூடாது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Recommended Video
ஆம்பன் புயல் தற்போது மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே கரையை கடந்தது. 160 கிமீ வேகத்தில் இந்த புயல் கரையை கடந்தது ஆம்பன் புயல் காரணமாக மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் கனமழை பெய்து மோசமாக பாதிக்கப்பட்டது.
வங்கத்தின் டிகா- வங்கதேசத்தின் ஹாதியா தீவுகளுக்கு இடையே இந்த புயல் கரையை கடந்தது. இந்த புயலால் தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

சென்னை நிலை
இந்த நிலையில் தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. சென்னை மற்றும் வட தமிழகங்களில் இந்த வெப்பம் அதிகமாக இருக்கும். சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிகமாக வெப்பநிலை இருக்கும். ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் 106 -108 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை வரை இருந்தது. ஆனால் இது இன்னும் அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள்.

மூன்று நாட்களுக்கு வெப்பநிலை
அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்பநிலை அதிகமாக இருக்கும். சென்னையில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு வெப்பநிலை இருக்கும். ஆம்பன் புயல்தான் இதற்கு காரணம். ஆம்பன் புயல் தமிழகத்தை தாக்கவில்லை. மிக தீவிரமாக இந்த ஆம்பன் புயல் வடக்கு நோக்கி சென்றுவிட்டது. இதனால் வட தமிழகத்திற்கு தரை காற்று வர தொடங்கி உள்ளது.

தரை காற்று வேகம்
இந்த வலிமையான தரை காற்று மேற்கு, வடமேற்கு திசையில் இருந்து வருகிறது.ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து தரை காற்று வருகிறது. அங்கு வெப்பநிலை அதிகரித்துள்ளது. அங்கிருந்து சூடான காற்று தமிழகம் நோக்கி வருகிறது. இந்த காற்று வடதமிழகத்திற்குள்தான் நுழைகிறது. இதனால் தமிழகத்தில் வெப்ப காற்று அடித்து வெப்பநிலையை உயர்த்துகிறது. இதுதான் தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க காரணம்.

என்ன காரணம்
முக்கியமாக காலை 11 மணி முதல் 3 மணி வரை இப்படி வெப்பம் அதிகமாக இருக்கும். 11 மணிக்கு வெப்ப காற்று வர தொடங்கும். வெப்பநிலை சுமார் 108 டிகிரி பாரன்ஹீட் வரை செலல வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதனால் மக்கள் இந்த நேரத்தில் வெளியே வர கூடாது. மக்கள் வெளியே வந்தால் தோல் தொடர்பான பாதிப்புகள் ஏற்படும். மக்கள் முடிந்த அளவு வீட்டிற்கு உள்ளேயே இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மக்கள் கவனம்
இது எதிர்பார்த்த பாதிப்புதான் என்று கூறுகிறார்கள். அதே சமயம் கடலோர பகுதிகளில் கொஞ்சம் வெப்பநிலை குறையும். அங்கு கடல் காற்று உள்ளே வர வாய்ப்புள்ளது.இந்த கடல் காற்று ஈர பதத்துடன் இருக்கும். இதனால் கொஞ்சம் வெப்பநிலை குறையும். ஆனால் சென்னையில் இதனால் பெரிய அளவில் வெப்பநிலை குறைய வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications