அம்ரித் பாரத் ரயிலில் கட்டணம் எவ்வளவு? தமிழகத்தில் எந்த ரூட்டில் இயக்கப்படும்.. வெளியான குட் நியூஸ்
சென்னை: நவீன வசதிகளுடன் கூடிய அம்ரித் பாரத் ரயில்களை அதிக அளவில் இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 26 ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாம். இதில் தமிழகம் வழியாக இரண்டு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்களில் என்ன மாதிரியான வசதி இருக்கும்? கட்டணம் எவ்வளவு இருக்கும்? உள்ளிட்ட விவரங்களை காணலாம்.
இந்தியாவில் தொலை தூர பயணம் என்றாலும் சரி.. குறுகிய தொலைவு கொண்ட பயணம் என்றாலும் சரி.. ரயில் வசதி இருந்தால் பயணிகளின் முதல் விருப்ப தேர்வு ரயிலாகத்தான் இருக்கும். பாதுகாப்பான பயணம், மலிவான கட்டணம், சரியான நேரத்தில் சென்றுவிடலாம் என்பதால் பயணிகள் ரயிலில் செல்லவே அதிகம் விருப்பப்படுவார்கள்.

அம்ரித் பாரத் ரயில்: சாமானிய மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் அனைவரும் அனைத்து தரப்பினரும் பயணிக்க கூடிய பொதுப்போக்குவரத்து என்றால் அது ரயில்கள்தான். ரயில்களின் பயணிகளின் வசதியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. வந்தே பாரத், வந்தே பாரத் ஸ்லீப்பர் வரிசையில் அம்ரித் பாரத் ரயில்களையும் இயக்க மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது.
வந்தே பாரத் ரயில்களில் கட்டணம் கொஞ்சம் அதிகம் என்பதால் நடுத்தர வசதி கொண்ட மக்களும் சாமானிய ஏழை எளிய மக்களும் அதில் பயணம் செய்ய கொஞ்சம் யோசிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில், தான் மலிவான கட்டணத்துடன் நவீன வசதிகள் கொண்ட அம்ரித் பாரத் ரயில்களை அறிமுகம் செய்ய ரயில்வே திட்டமிட்டது. இதன்படி, அம்ரித் பாரத் ரயில்கள் தயாரிக்கும் பணி சென்னை ஐசிஎப்பில் நடைபெற்று வந்தது.
தமிழகத்தில் 2 ரூட்: ஏசி வசதி இல்லாத முன்பதிவு பெட்டிகள் மற்றும் பொதுப்பெட்டிகளுடன் கூடிய அம்ரித் பாரத் ரயில்கள் உத்தரபிரதேசம், பீகார், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் மத்தியில் இந்த ரயில்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், இந்த ஆண்டு இறுதிக்குள் கூடுதலாக 26 ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதில் தமிழக ரூட்டில் இரண்டு ரயில்களும் இயக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
எந்த வழித்தடங்களில்:
* நெல்லை - மேற்கு வங்க மாநிலம் சாலிமர் மற்றும் தாம்பரம் - மேற்குவங்க மாநிலம் சந்திரகாச்சி இடையே புதிய அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கபட உள்ளதாம்.
* நெல்லை - சாலிமர் வழித்தடத்தில் இயங்கும் ரயிலானது, நெல்லையில் இருந்து புறப்பட்டு விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, விழுப்புரம் வழியாக செல்லும்.
* தாம்பரம் - சந்திரகாச்சி வழித்தடத்தில் இயக்க திட்டமிட்டுள்ள ரயில், ஆந்திர மாநிலம் நெல்லூர், விஜயவாடா, விசாகப்பட்டினம் வழியாக சந்திரக்காச்சி செல்லும்.
என்னென வசதிகள்?:
* அம்ரித் பாரத் ரயில்களை பொறுத்தவரை முழுவதும் நான் ஏசி வசதி கொண்டதாக இருக்கும்.
* மொத்தம் 22 பெட்டிகளை கொண்டதாக இந்த ரயில் இருக்கும்.
* 12 ரிசர்வ்டு கோச்கள், 8 அன்ரிசர்வ்டு (முன்பதிவு இல்லாத) பெட்டிகள், 2 கார்டு பெட்டிகள் இருக்கும்.
* மாற்றுத்திறனாளிகள் எளிதாக ஏறும் வசதியுடன் வடிவைமைக்கப்பட்டுள்ளது.
* மொபைல் ஹோல்டர் வசதியுடன் கூடிய சார்ஜிங் வசதி.
* இரவில் விளக்குகள் அணைக்கப்பட்டாலும் பயணிகள் செல்லும் பாதைகளில் மிளிரும் விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்கும்.
* அனைத்து பெட்டிகளிலும் சிசிடிவி கேமரா, சொகுசான இருக்கை வசதி, டிஜிட்டல் திரை, அடுத்த ரயில் நிலையம் பற்றிய அறிவிப்பு (மெட்ரோ ரயில்களை போல).
* குறுகிய நேரத்தில் அதிகவேகத்தை எட்டும் திறன் கொண்டது.
* இந்த ரயில் அதிகபட்சம் 130 கிலோ மீட்டர் வரை செல்லும் திறன் கொண்டதாக இருக்கும்.
கட்டணம் எவ்வளவு இருக்கும்?: வந்தே பாரத் ரயில்களை ஒப்பிடும் போது அம்ரித் பாரத் ரயில்களில் கட்டணவும் மிகவும் மலிவாக இருக்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. அதேவேளையில் தற்போது இயக்கப்படும் சாதாரண மெயில் /எக்ஸ்பிரஸ் ரயில்களின் கட்டணத்தை விட அம்ரித் பாரத் ரயில்களில் கட்டணம் 15 -17 சதவிகிதம் கூடுதலாக இருக்கும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications