அரை நிர்வாணத்தில்.. சங்குகள் ஒலிக்க.. சிஷ்யையை திருமணம் செய்த "அகோரி பாபா".. திருச்சியில் பரபரப்பு!
சென்னை: திருச்சியை சேர்ந்த பிரபல அகோரி சாமியார் ஒருவர் நேற்று தனது சிஷ்யையை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியை சேர்ந்தவர் அகோரி பாபா மணிகண்டன். காசிக்கு தனது இளம் வயதில் சென்றவர் அங்கேயே தங்கி சாமியார்களோடு சாமியாராக சில காலம் இருந்தார்.
காசியில் இருக்கும் அகோரிகளுடன் தங்கி இருந்தவர், அவர்களின் வாழ்க்கை முறை பிடித்து போய், சிவ பக்தனாக மாறி, அவர்களோடு சேர்ந்த அகோரி பயிற்சி எடுத்தார்.

காசி
காசியில் தங்கி இருந்து சில வருடங்களுக்கு முன் அகோரி ஆன மணிகண்டன் அதன்பின் மற்ற சில அகோரிகளோடு சேர்ந்து தமிழ்நாடு திரும்பினார். தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் சுடுகாட்டில் தங்கி இருந்தவர் திருச்சிக்கு இடம் பெயர்ந்து அங்கு தனது சொந்த ஊரான அரியமங்கலம் அருகே மக்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டு இருந்தார். இரவில் அடிக்கடி இவர் சுடுகாட்டில் பூஜை செய்வது வழக்கம்.

பயிற்சி
இவரை சந்திக்க வந்த பலரை சிஷ்யர்களாக ஏற்றுக்கொண்டு திருச்சிலேயே அவர்களை தங்க வைத்து பலருக்கு சிறப்பு பயிற்சிகளையும் வழங்கி வருகிறார். சமீபத்தில் இவரின் சிஷ்யர் விபத்தில் பலியானார். பலியானவரின் உடலுக்கு அகோரி மணிகண்டன் திருச்சியில் இறுதி சடங்கு நடத்தியது பெரிய அளவில் வைரலானது.

பூஜை
இறந்து போன தனது சிஷ்யரின் உடலின் மீது ஏறி அமர்ந்து அகோரி மணிகண்டன் விசித்திர பூஜை செய்தார். மணிகண்டன் நடத்திய இந்த ஆன்ம சாந்தி பூஜை இணையம் முழுக்க வைரலாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் அகோரி சாமியார் மணிகண்டன் நேற்று தனது சிஷ்யயை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம்
இவரிடம் கொல்கத்தாவை சேர்ந்த பிரியங்கா என்ற பெண் சிஷ்யையாக பயிற்சி எடுத்து வந்தார். கடந்த சில காலமாக பிரியங்கா மணிகண்டனுடன் சேர்ந்து பயிற்சி எடுத்து வந்தார். இதில் பிரியங்கா மீது காதல் வயப்பட்ட அகோரி சாமியார் மணிகண்டன் இன்று கோவிலில் வைத்து பிரியங்காவை திருமணம் செய்து கொண்டார். இந்து முறைப்படி மந்திரம் ஓத திருமணம் செய்து கொண்டார்.

மற்ற அகோரிகள்
இவரின் அருகில் இருந்த மற்ற அகோரிகள் சங்குகள் ஊதி திருமணத்தை நடத்தி வைத்தனர். உடல் முழுக்க விபூதி பூசி அகோரி மணிகண்டன் அரை நிர்வாணத்தில் காட்சி அளித்தார். பிரியங்காவும் முகம் முழுக்க விபூதி பூசி இருந்தார். இந்த திருமணம் திருச்சியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications