அமெரிக்கா அப்பார்ட்மென்ட்டில் காதலியின் கோலம்.. சென்னையில் திருதிருன்னு விழித்த மேரிலாந்து இளைஞர்
சென்னை: அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் முன்னாள் காதலியை கொலை செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பிச் சென்ற இளைஞர், தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புத்தாண்டு தினத்தன்று தங்களுடைய பெண்ணுக்கு இந்த கதி ஆகிவிட்டதே என்று குடும்பத்தினர் கதறி அழுதது காண்போரை நிலைகுலைய வைத்து வருகிறது,
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாதைச் சேர்ந்தவர் நிகிதா கோடிஷாலா.. இவருக்கு 27 வயதாகிறது.. அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணம் கொலம்பியாவில் வசித்து வந்தார். 2025 பிப்ரவரி மாதம் முதல் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வந்துள்ளார்.. ஹெல்த் கேர் நிறுவனத்தில் டேட்டா அனலிஸ்ட் ஆக வேலை செய்து வந்துள்ளார்..

அமெரிக்கா நிகிதாவின் காதல்
மேரிலாந்தில் வசித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அர்ஜுன் சர்மா என்ற 27 வயது இளைஞருடன் நிகிதாவுக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது.. இதுவே இவர்களுக்கள் காதலாக மலர்ந்துள்ளது.., ஆனால், சமீப நாட்களாகவே கருத்து வேறுபாடு இருவருக்குள்ளும் இருந்து வந்துள்ளது.. இதனால் இருவரும் பிரிந்துவிட்டனர்.
இந்நிலையில், புத்தாண்டுக்கு முந்தைய நாள் அதாவது டிசம்பர் 31ம் தேதி இரவு, நிகிதா தன்னுடைய வீட்டுக்கு வந்துள்ளார்.. ஆனால் அதற்கு பிறகு அவர் காணாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது.. இதனால் "நிகிதாவைக் கண்டுபிடிக்க உதவுங்கள்" என்ற போஸ்ட்கள் அவரது போட்டோக்களுடன் ஃபேஸ்புக்கில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டன.. .
முன்னாள் காதலர்
பிறகு ஜனவரி 2ம் தேதி, நிகிதாவை காணவில்லை என அவரது முன்னாள் காதலன் அர்ஜுன் சர்மா ஹோவர்டு கவுண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் புகாரை தந்துவிட்டு, அதே நாளில் அவர் இந்தியாவுக்குத் தப்பி வந்துள்ளார்.. இதுதான் போலீசுக்கு சந்தேகத்தை அதிகப்படுத்தியது..
இதனால் அமெரிக்காவில் அர்ஜுன் சர்மா தங்கியிருந்த அப்பார்ட்மென்ட் வீட்டுக்குள் நுழைந்து சோதனையை மேற்கொண்டனர்.. ஆனால் அங்கே கண்ட காட்சி போலீசாரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.. காரணம், நிகிதா கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக விழுந்து கிடந்தார்..
அப்பார்ட்மென்ட் வீட்டில்
இதையடுத்து நிகிதாவின் சடலம் கைப்பற்றப்பட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பப்பட்டது.. பிறகு போலீசார் இதுகுறித்த விசாரணையை துரிதப்படுத்தினார்கள்.. டிசம்பர் 31ஆம் தேதி இரவு 7 மணியளவில் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கொலையை மறைக்க, காதலியை காணவில்லை என போலீசில் புகார் அளித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அர்ஜுன் சர்மாவுக்கு எதிராக சர்வதேச பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
அமெரிக்க போலீசாரின் கோரிக்கையின்பேரில் இண்டர்போல் உதவியுடன், இந்திய உளவு மற்றும் புலனாய்வு அமைப்புகள் இணைந்து தேடுதல் வேட்டையில இறங்கின.. அப்போதுதான் தமிழகத்தில் அர்ஜூன் சர்மா தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.. விரைந்து வந்த போலீசார் அர்ஜுன் சர்மாவை சென்னையில் சுற்றிவளைத்து கைது செய்தனர்..
சென்னையில் கைது
இதற்கிடையே, நிகிதாவின் குடும்பத்தினருக்கு தகவல் அளித்த இந்திய தூதரகம், தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் அர்ஜுன் சர்மாவை அமெரிக்காவுக்கு ஒப்படைப்பது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது. நிகிதாவின் மரணம் அவரது குடும்பத்தினரையும் நண்பர்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது அமெரிக்காவில் தெலுங்கு பெண் கொலையானதும், கொலையாளி தமிழகத்தில் கைது செய்யப்பட்டதும் பெரும் பரபரப்பை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications