பரந்தூர் விமான நிலையம்.. மீண்டும் 8.5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசு.. முக்கிய அப்டேட்!
காஞ்சிபுரம்: பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்திற்காக மேலும் 8.5 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவது குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 196 சர்வே எண்களில் இருக்கும் வீட்டுமனைகளை கையகப்படுத்த அறிவிப்பு வெளியாகி இருக்கும் நிலையில், அடுத்தடுத்த பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சென்னையின் 2வது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைக்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மொத்தமாக பரந்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. அண்மையில் பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அந்த ஆலோசனை கூட்டத்தில் விமான போக்குவரத்து அமைச்சகம், விமான பாதுகாப்பு ஆணையம், சுற்றுச்சூழல் ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அதேபோல் விமான நிலையத் திட்டம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் கொள்கை அனுமதிகள் தொடர்பான விவாதம் நடைபெற்றது.
விமான போக்குவரத்து அமைச்சகத்தில் இருந்து அனுமதி கிடைத்த பின், கட்டுமான பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் விமான நிலைய கட்டுமானத்தை 4 கட்டங்களாக பிரித்து செயல்படுத்த திட்டம் முன்மொழியப்பட்டிருந்தது. இதன் காரணமாக கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து போராடி வரும் மக்களின் போராட்டம் ஆயிரம் நாட்களை கடந்துள்ளது. ஏற்கனவே பல்வேறு கட்சித் தலைவர்கள் பயணம் மேற்கொண்டு அந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு, புதிய விமான நிலையத்தை மாற்று இடத்தில் செயல்படுத்த கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்காக மேலும் 8.5 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவது குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு துறை சார்பாக நிலம் கையகப்படுத்துதல் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதில் 196 சர்வே எண்களில் இருக்கும் வீட்டுமனைகளை கையகப்படுத்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், 5,746 ஏக்கரில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்திற்காக, பல கட்டங்களாக அரசு நிலத்தை கையகப்படுத்தி வருகிறது.
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்!












Click it and Unblock the Notifications