ட்ரான்ஸ்போர்ட் Vs ட்ராஃபிக்.. யாரு தான் பெருசு! 250 அரசு பேருந்துகளுக்கு ஃபைன்! பணியால் ’பனி’ போர்.!
சென்னை: நெல்லை அருகே நாங்குநேரியில் சீருடையில் இருந்த காவலர் டிக்கெட் எடுக்க மறுத்த விவகாரத்தில் காவல்துறையினருக்கும் போக்குவரத்து ஊழியர்களுக்குமிடையே பனிப் போர் வெடித்துள்ளது. இரு போலீசாரின் வீடியோக்கள் வெளியான நிலையில், தமிழகம் முழுவதும் சுமார் 250 அரசு பேருந்துகள் மற்றும் ஓட்டுனர்களுக்கு போக்குவரத்து விதிகளை மீறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில் நாங்குநேரி என்ற இடத்தில் ஏறிய ஆறுமுகப்பாண்டி என்ற காவலரிடம் பயணச்சீட்டு எடுக்கும்படி நடத்துனர் கேட்ட போது, பயணச்சீட்டு எடுக்க காவலர் மறுத்துள்ளார்.

காவலர் பணியில் இருப்பவர்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று அவர் விளக்கமளித்துள்ளார். இந்த வாக்குவாதத்தை பயணி ஒருவர் காணொலியாக பதிவு செய்து வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
காவலர் வீடியோ: அதைத் தொடர்ந்து இதுகுறித்து விளக்கமளித்த அரசுப் போக்குவரத்துக் கழகம், ''அரசுப் பேருந்துகளில் காவலர்கள் இலவசமாக பயணிக்க முடியாது. அதற்கான அனுமதி வாரண்ட் இருந்தால் மட்டும் தான் பயணிக்க முடியும்'' என்று கூறியது. அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தலைநகர் சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் அரசுப் பேருந்துகளுக்கு எதிராக போக்குவரத்துக் காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
அபராதம்: இந்நிலையில் நேற்று புதுச்சேரியில் இருந்து சென்னை அடுத்தக் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்று, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் எதிரில் உள்ள திருச்சி - சென்னை இடையேயான தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதைப்பார்த்த வண்டலூர் போக்குவரத்து காவலர்கள் அரசு பேருந்து 'நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி 1,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
250 பேருந்துகள்: ஒருவழிப் பாதையில் பயணித்தல், சீருடை அணிவதில் குறைபாடு, நிறுத்தத்தைத் தாண்டி நிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் காட்டி அரசுப் பேருந்துகளுக்கு தண்டங்களை விதித்து வருகின்றனர். கடந்த இரு நாட்களில் மட்டும் 250க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மோதல் போக்கு: இதனிடையே நெல்லை மாவட்டம் வள்ளியூர் போக்குவரத்து உதவி ஆய்வாளர் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி சென்ற மூன்று அரசு பேருந்துகளை நிறுத்தி சோதனை செய்துள்ளார். அப்போது ஓட்டுனர்கள் சீட் பெல்ட் அணியவில்லை போக்குவரத்து விதியை சரியாக கடைபிடிக்கவில்லை சீருடை ஒழுங்காக அணியவில்லை எனக் கூறி ஒவ்வொரு பேருந்து ஓட்டுனருக்கும் தலா 500 ரூபாய் அபராதம் விதித்து அதற்கான ரசீதை ஓட்டுனர்களிடம் கொடுத்து அனுப்பி உள்ளார்.
பனிப்போர்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காவலர்களுக்கும் போக்குவரத்து அரசு பேருந்து ஓட்டுனர் நடத்தினர்களுக்கும் இடையேயான பனிப்போர் தற்போது முற்றி வருகிறது. மேலும் 'காவலர்கள் போக்குவரத்து விதிகளை மீறும் அரசு பேருந்துகள், ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" குறுஞ்செய்தி சமூக வலைதளங்களில் செய்தி உலாவுகிறது. இதன் உண்மை தன்மை தெரியாத நிலையில் இதுதொடர்பாக துறை சார்ந்த அமைச்சர்கள், செயலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் இது மாநில தழுவிய பிரச்சினையாக மாறுவதற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதலமைச்சருக்கு போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம்











Click it and Unblock the Notifications