உஷாரா இருங்க! வாசலிலேயே முகத்தை உற்று பார்த்த எடப்பாடி "ஆள்".. குழப்பத்தோடு உள்ளே போன எம்எல்ஏக்கள்
சென்னை: சென்னையில் அதிமுக இபிஎஸ் கோஷ்டி எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக எடப்பாடி பழனிசாமி தரப்பு முக்கியமான ஏற்பாடுகளை செய்து உள்ளது.
அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சம் தொட்டுள்ளது. வெளியில் இருந்து பார்த்தால் ஒரே ஒரு வழக்கு மட்டுமே நடப்பது போல தோன்றலாம். ஆனால் உள்ளே பல மோதல்கள் நடந்து கொண்டு இருக்கின்றன.முக்கியமாக எடப்பாடி ஒரு பக்கம் பல்வேறு மீட்டிங்குகளை போட்டுகொண்டு இருக்கிறார். அதேபோல் ஓ பன்னீர்செல்வமும் தொடர்ந்து ஆலோசனைகளை செய்து வருகிறார்.
இதெல்லாம் போக உச்ச நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் பொதுக்குழுவிற்கு எதிராக தொடுத்த வழக்கும் நிலுவையில் உள்ளது.

கூட்டம்
இந்த நிலையில்தான் சென்னையில் அதிமுக இபிஎஸ் கோஷ்டி எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக எடப்பாடி பழனிசாமி தரப்பு முக்கியமான ஏற்பாடுகளை செய்து உள்ளது. எடப்பாடி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஆன பின் நடக்கும் முதல் பெரிய கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக வழக்கில் அடுத்த மாதம் விசாரணை நடக்க உள்ள நிலையில்தான் இன்று எடப்பாடி இந்த கூட்டத்தை நடத்துகிறார்.

எடப்பாடி பழனிசாமி
வியூக ரீதியாக எடப்பாடிக்கு இது கைகொடுக்கும் என்று கூறப்படுகிறது. சமீப நாட்களாக எடப்பாடி அணியில் இருந்து முக்கிய தலைகள் ஓ பன்னீர்செல்வம் பக்கம் தாவி வருகிறார்கள். சமீபத்தில் பண்ட்ருட்டி ராமசந்திரன் ஓ பன்னீர்செல்வம் அணியில் இருந்தார். இதையடுத்து அவரை அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார். அதை தொடர்ந்து மைத்ரேயன் ஓ பன்னீர்செல்வம் அணிக்கு சென்றார். இவரையும் எடப்பாடி அதிமுகவில் இருந்து நீக்கி உள்ளார்.

பிளான் என்ன?
பண்ருட்டி ராமசந்திரன் வருகைக்கு பின் ஓ பன்னீர்செல்வம் அணிக்கு நிர்வாகிகள் அதிக அளவில் செல்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதோடு டெல்லியும் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக இருப்பதாக சில கருத்துக்கள் வைக்கப்படுகின்றன. இதனால் ஓ பன்னீர்செல்வம் கை எப்போது வேண்டுமானாலும் ஓங்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த நிலையில்தான் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக கூட்டம் நடைபெறுகிறது.

உஷார்
இந்த கூட்டம் இரண்டு காரணங்களுக்காக நடத்தப்படுகிறது. ஒன்று ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராக ஆலோசனை மேற்கொள்ள. நிர்வாகிகள் மேலும் ஓ பன்னீர்செல்வம் பக்கம் செல்லாமல் தடுப்பதற்காக கூட்டம் நடத்தப்படுகிறது. அதேபோல் அதிமுகவில் உள்ள நிர்வாகிகளை எல்லாம் ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் விதமாகவும், நிர்வாகிகள் இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளை, மனஸ்தாபங்களை களையும் விதமாகவும் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.

எத்தனை பேர்
இது போக எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் பலம் தனக்கு இருப்பதை காட்டவும் எடப்பாடி பழனிசாமி இந்த கூட்டத்தை கூட்டி உள்ளார் என்கிறார்கள். எல்லோரும் என்னுடைய பக்கம்தான் இருக்கிறார்கள் என்பதை காட்ட அவர் இந்த கூட்டத்தை கூட்டியதாகவும் கூறப்படுகிறது. அதன்படியே இன்று எடப்பாடி பழனிசாமியின் ஆள் ஒருவர் அதிமுக அலுவலகத்தில் நின்று கொண்டு இருந்தார். படியில் நிர்வாகிகள் செல்லும் வழியில் அவர் நின்று கொண்டு இருந்தார்.

பலம் என்ன?
உள்ளே சென்ற எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் எல்லோரின் முகத்தை உற்று பார்த்து தனது கையில் இருந்த லிஸ்டில் டிக் அடித்தார். யாரெல்லாம் வந்து இருக்கிறார்கள் என்பதை உற்று உற்று பார்த்து அட்டென்டன்ஸ் போட்டார். இவரை பார்த்த அதிமுக நிர்வாகிகள் சிலர்.. யாருங்க இவர் என்று குழப்பத்தோடு ரியாக்சன் கொடுத்துவிட்டு உள்ளே சென்றனர். இன்று நடக்கும் அதிமுக இபிஎஸ் கோஷ்டி ஆலோசனை கூட்டத்தில் 61 எம்.எல்.ஏக்கள் பங்கேற்று உள்ளதாக கூறப்படுகிறது.

மாவட்ட செயலாளர்கள்
அதேபோல் 60க்கும் அதிகமான மாவட்ட செயலாளர்கள் பங்கேற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்று ஓ பன்னீர்செல்வம் பற்றி பிரதானமாக ஆலோசனை செய்யப்படும். இது போக பாஜக உடன் உள்ள உறவு பற்றி ஆலோசனை செய்யப்படும். இது போக திமுக மீது வைக்கப்பட வேண்டிய விமர்சனங்கள் பற்றியும் ஆலோசனை செய்யப்படும் என்கிறார்கள். அதேபோல் அக்.17-ல் சட்டசபை கூடும் நிலையில் அதை பற்றியும் ஆலோசனை செய்யப்படும் என்கிறார்கள்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications