"உங்க இஷ்டம் போல செய்ய கூடாது!" வெறும் 4 நிமிடம் முன்கூட்டியே லாக் அவுட் செய்த ஊழியருக்கு HR தந்த ஷாக்
சென்னை: வெறும் 4 நிமிடங்கள் முன்கூட்டியே லாக் ஆஃப் செய்த ஊழியரை ஹெச்ஆர் கண்டித்த சம்பவம் இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஷிப்ட் நேரத்திற்கு முன்கூட்டியே வேலையைத் தொடங்கிய அந்த நபர், ஷிப்ட் டைம் முடிய வெறும் 4 நிமிடங்களுக்கு முன்பு லாக் ஆஃப் செய்தாராம். இதைப் பார்த்த ஹெச்ஆர் அவரை எச்சரித்துள்ளார்.
இந்தக் காலத்தில் பெரும்பாலான ஐடி அலுவலகங்களில் கடுமையான ரூல்ஸ் இருக்காது. ஊழியர்களை மன ரீதியாகக் கஷ்டப்படுத்தக்கூடாது என்பதால் பல ஐடி நிறுவனங்களில் ரிலாக்ஸிங் ரூல்ஸ் தான் இருக்கும். ஆனால், எல்லா அலுவலகங்களிலும் இதே நிலை என சொல்ல முடியாது. சில இடங்களில் ஹெச்ஆர் கொடுக்கும் இம்சையே மன உளைச்சலை ஏற்படுத்தும். அப்படியொரு சம்பவம் தான் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

ஷாக் சம்பவம்
அந்த நிறுவனத்தில் வேலை செய்த ஊழியருக்கும், ஹெச்ஆர் பிரதிநிதிக்கும் இடையே நடந்த வாட்ஸ்அப் உரையாடல் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஆபீஸ் டைம் முடிய வெறும் 4 நிமிடங்களுக்கு முன்பு இவர் லாக் ஆஃப் செய்துவிட்டாராம். அதற்கு அந்த அந்த ஹெச்ஆர் கேட்ட கேள்விகள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலை முடிந்தாலும் கூட 6.30 மணிக்கு தான் லாக் ஆஃப் செய்ய வேண்டும் என ஹெச்ஆர் கூறியுள்ளார்.
உரையாடல்
இதற்குப் பதிலளித்த அந்த ஊழியர், அன்றைய டாஸ்குகளை முடித்துவிட்டதாகக் கூறியிருக்கிறார். மேலும், காலை முன்கூட்டியே லாக் இன் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இந்தப் பதிலை ஹெச்ஆர் ஏற்கவில்லை. இது தொடர்பாக அந்த நபர் ரெட்டிட் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஹெச்ஆர் உடன் நடந்த வாட்ஸ்அப் உரையாடலையும் இணைத்துள்ளார். அந்த போட்டோவின்படி அவர்களிடையே பின்வருமாறு உரையாடல் நடந்துள்ளது.
ஹெச்ஆர்: ஏன் 6:30 மணி முன்பே லாக் ஆஃப் செய்தீர்கள்?
ஊழியர்: 4 நிமிடங்கள் மட்டுமே இருந்தது. மேலும், இன்றைய பணிகளை நான் முடித்துவிட்டேன். மேலும் காலை முன்கூட்டியே லாகின் செய்தேன்.
ஹெச்ஆர்: நீங்கள் நினைத்தபடி எல்லாம் செய்ய முடியாது. உங்கள் பணி முடிந்தாலும், உங்கள் ஷிப்ட் 6:30 மணிக்கு முடிகிறது. மற்றவர்களும் தங்கள் டாஸ்குகளை முடித்தாலும், 6:30 மணிக்கு தான் லாக் ஆஃப் செய்கிறார்கள். நீங்கள் முன்கூட்டியே லாகின் செய்யத் தேவையில்லை. ஷிப்ட் நேரப்படி 9:00 மணிக்கு லாகின் செய்து 6:30 மணிக்கு லாக் அவுட் செய்தால் போதும். உங்கள் ஷிப்ட் நேரத்தைப் பின்பற்றுங்கள். அனைவரும் அதைப் பின்பற்றுகிறோம்.
புலம்பல்
இப்படி அந்த உரையாடல் முடிகிறது. அந்த ஊழியர் தனது ரெட்டிட் பதிவில் மேலும், "நான் இப்போது அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறேன்.. ஆனால் நான் சமீபத்தில் இந்திய ஹெச்ஆர் துறைக்கு மாற்றப்பட்டேன். எங்கள் லாகின் மற்றும் லாக் ஆஃப் நேரத்தைக் கண்காணிக்க முதலில் தனிச் செயலி இருந்தது.
ஆனால், இந்த ஹெச்ஆர் அதை வாட்ஸ்அப்பில் சொல்லச் சொன்னார். நானும் ஒப்புக்கொண்டேன்.. ஏனென்றால் யார் அவருடன் யார் பேச முடியும்? ஆனால் அடுத்து இப்படி நடக்கிறது. நான் ராஜினாமா செய்ய விரும்புகிறேன்.. ஆனால் என்னிடம் இப்போது வேறு வழியில்லை" என்று புலம்பி இருக்கிறார்.
நெட்டிசன்கள்
இதற்கு நெட்டிசன்கள் இருவேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். ஒரு தரப்பினர், நான்கு நிமிடங்களுக்கு இவ்வளவு பேசுவது சரியானது இல்லை எனச் சொல்கிறார்கள். அதேநேரம் இன்னொரு தரப்பினர் இது அலுவலக பாலிசியாக இருக்கும்போது, அதை ஏன் மீறுகிறீர்கள்.. சரியான நேரத்தில் ஷிப்ட்டை ஆரம்பித்து, சரியான நேரத்தில் முடிக்கலாமே எனப் பதிவிட்டு வருகிறார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications