என்னங்க சொல்றீங்க.. நீங்க என்ன சொல்றீங்க? தமிழ்நாட்டில் மாஜி அமைச்சரை காணோமா? எங்கே போனார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் அடிக்கடி மீடியாக்களில் தோன்றிய ஒரு மாஜி அமைச்சரை காணவில்லை என்று கூறப்படுகிறது.

2024 லோக்சபா தேர்தல் சமீபத்தில் முடிவுகள் வெளியானது. கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தேசிய அளவில் 303 இடங்களில் வென்றது. பாஜக என்டிஏ கூட்டணி 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களில் வென்றது. 543 தொகுதிகள் நாட்டில் உள்ளன. இதில் 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும். தமிழ்நாட்டில் திமுக கூட்டணி புதுச்சேரியுடன் சேர்த்து 40 இடங்களில் வென்றுள்ளது. பாஜக, அதிமுக ஒரு இடங்களில் கூட வென்றது இல்லை.

edappadi palanisamy AIADMK edappadi palanisamy

அதிமுக தொடர் தோல்வி: அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 10 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்து உள்ளது.

அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் என மொத்தம் 9 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது. இன்றோடு 10வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது.

அமைச்சர் எங்கே: இப்படிப்பட்ட நிலையில் அதிமுகவில் பல மாஜி அமைச்சர்கள் சைலன்ட் ஆகி உள்ளனர். மாஜி அமைச்சர்கள் பலர் பெரிதாக மீடியா முன் தோன்றுவது இல்லை. அதிலும் கடந்த அதிமுக ஆட்சியில் அடிக்கடி மீடியாக்களில் தோன்றிய ஒரு மாஜி அமைச்சரை காணவில்லை என்று கூறப்படுகிறது.

ஆம் கடந்த ஆட்சியில் அவர் டாப் அமைச்சர்களில் ஒருவர். அதிலும் எடப்பாடிக்கு கீழ் மிகப்பெரிய அமைச்சராக இருந்தார். அடிக்கடி மீடியாக்களை பார்ப்பார்.

ஆட்சி மாறிய பின்பும் கூட கொஞ்ச காலம் ஆக்டிவாக இருந்தார். அதன்பின் ரெய்டு காரணமாக அப்படியே அமைதி ஆனார். அடிக்கடி நடத்தப்பட்ட ரெய்டுகள், சில வழக்குகள் காரணமாக அப்படியே மாஜி அமைச்சர் அமைதி ஆனார்.

காணவில்லை: இப்படிப்பட்ட நிலையில்தான் அந்த மாஜி அமைச்சரை கடந்த சில மாதங்களாக பொதுவிலேயே காணவில்லை என்கிறார்கள். லோக்சபா தேர்தலின் போது 1-2 நாட்கள் பிரச்சாரம் செய்தார். அதன்பின் பிரச்சாரம் செய்யவில்லை.

அதன்பின் அவர் எங்குமோ காணவில்லை. அதிமுகவில் பல்வேறு உட்கட்சி மோதல்கள் நடக்கும் நிலையில் அந்த மாஜி அமைச்சர் அதை பற்றி எல்லாம் பேசுவதே இல்லை. முக்கியமாக அவர் தமிழ் நாட்டிலேயே இல்லை என்றும் தகவல்கள் வருகின்றன.

அந்த மாஜி அமைச்சர் சில விஷயங்களை செய்ய டெல்லி சென்றுள்ளார். அப்படியே வடஇந்தியாவில் வேறு சில பணிகளை மேற்கொண்டு வருகிறார். அவர் தமிழ்நாட்டிற்கு இப்போதைக்கு வர வாய்ப்பு இல்லை. சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவர் வரலாம்.. அதுவரை பெரிதாக லைம்லைட்டிற்கு வர வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+