Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு மாத சிறைக்கு எதிராக மேல்முறையீடு.. எஸ்.வி.சேகருக்கு நேற்று நீதிபதி எழுப்பிய முக்கியமான கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனை எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர் கடந்த 2018-ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்களை விமர்சித்து ஒரு பதிவை தன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். இதற்கு பத்திரிகையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரது வீட்டின் முன்பு அப்போது போராட்டங்களும் நடந்தது.

sv shekhar high court chennai

இதனிடையே எஸ்வி சேகருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அப்போது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை, 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு எதிராக தண்டனை நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், நடிகர் எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்திருக்கிறார். இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், " நடிகர் எஸ்.வி.சேகர் சாதாரண நபர் அல்ல. எம்.எல்.ஏ.வாக இருந்தவர். கல்வியறிவு பெற்றவர். ஒரு தவறான கருத்துகளை சமூக வளைதலத்தில் பதிவிடும்போது, ஏற்படும் பின்விளைவு குறித்து நன்கு உணர்ந்தவர் ஆவார். தவறுதலாக இந்த அவதூறு பதிவை வெளியிட்டதாக அவர் கூறுவதை ஏற்க இயலாது. ஒட்டுமொத்த பெண் பத்திரிகையாளர்களையும் அவதூறாக விமர்சனம் செய்திருக்கிறார். எனவே, சிறை தண்டனையை உறுதி செய்து, மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்" என்று வாதிட்டார்.

எஸ்வி சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து எஸ்.வி சேகர் வழக்கு தொடர உரிமை இருக்கிறது. தவறுதலாக குறிப்பிட்ட பதிவினை எஸ்.வி சேகர் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்த கருத்தை உடனடியாக நீக்கியதுடன், மன்னிப்பும் கேட்டுள்ளார். மேலும், சாட்சிகள் விசாரணை சட்டம் 65Bன் படி வழக்கு பதிவு செய்யப்படவில்லை. எனவே, சிறை தண்டனையும், கீழ் கோர்ட்டு தீர்ப்பையும் ரத்து செய்யவேண்டும் என்று வாதிட்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றநீதிபதி பி.வேல்முருகன் , எந்த பதிவுகள் வந்தாலும், அதை படிக்காமல் மற்றவர்களுக்கு பகிர்ந்து விடுவீர்களா? படிக்காமல் பகிர்ந்ததாக தெரிவித்தால்? என்ன காரணத்திற்காக பத்திரிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டீர்கள்? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்க உத்தரவிட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+