அண்ணாமலை படத்தில் "கடவுளே கடவுளே"! பாம்பு சீன் ஞாபகம் இருக்கா? வாயே தைக்காத பாம்பாமே! சுவாரஸ்யம்!
சென்னை: அண்ணாமலை படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த பாம்பு சீன் குறித்த சுவாரஸ்ய சம்பவங்கள் தெரியுமா?
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவரது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சினிமால எந்த ஒரு நடிகரும் ஒரு புதிய காட்சி நடிக்க பழைய படங்களில் போய் ரெஃபரன்ஸ் தேடுவாங்க... சிவாஜி சார் படங்களை பார்த்தாலே எந்தக் காட்சிக்கும் ரெஃபரன்ஸ் கிடைக்கும். மனைவி இறந்ததும் அழும் காட்சியை பல படங்களில் பல விதமா சிவாஜி செய்திருப்பார்.

நவீன நடிகர்கள் ஹாலிவுட் படங்களை கூட எடுத்துக்குவாங்க. அப்படி ஒரு சீன் தான் அண்ணாமலை படத்தின் பாம்பு சீன். பாம்பு மேலே ஊர்ந்து போகும் போது நமக்கு ஒரு வித உணர்வு வருமே. அதை கூச்சம் என்பதா? பயம் என்பதா? அருவறுப்பு என்பதா? இல்லை. இவை மூன்றும் கலந்த உணர்வு என்பதா?
பாம்பு படம்: ரெஃபரன்ஸ் தேடினா நிறைய டார்ஸான் ஸ்டைல் படங்களில் மலைப் பாம்பு ஊர்வதாக அப்படத்தின் நாயகி நடிச்சிருப்பாங்க. ஆனா நடிப்பு பயம் மட்டுமே. இப்போ ரஜினிக்கு முன்னே இருக்கும் சவால் இதில் எப்படி எக்ஸ்பிரஷன்ஸ் காட்டுவது. அண்ணாமலை படத்தின் முதல் காட்சியே இது தான் படப்பிடிப்புக்கு. ரஜினி மேலே பாம்பு ஊர்ந்து போனதும் ரஜினி ஒரு ஆக்ஷன் கொடுப்பார் பாருங்க.
பயத்தை காட்டாதே: முன்னால இருக்கும் பெண்கள் கிட்ட பயத்தை காட்டக் கூடாது. அதோடு பாம்பு ஊர்வதால் கூச்சம் வேறு. உள்ளுக்குள்ள பயம். மிக மிக அற்புதமாக அந்த காட்சியில் நடித்தார். தியேட்டரில் பார்க்கும் போது ஒரு புதுவிதமான நடிப்பை பார்த்ததும் கை தட்டல். அவர் குரல் கூட பயத்தில் பேச முயற்சித்து கம்மிப் போய் வார்த்தைகள் வராமல் அவர் தடுமாறி உளறுவது போல...செமல...
ரியாக்ஷன்தான் சூப்பர்: ரியாக்ஷன் தானே நாம கொடுத்திருப்போம் நம்ம மேலே பாம்பு ஊர்ந்தால்... இந்த காட்சி இயக்குனர் நடித்துக் காட்ட முடியாத காட்சி இல்லையா? ரஜினியோட நடிப்பு அவரே கிரஹித்து உருவாக்கிய நடிப்பு. இதே படத்தை 'கொண்டப்பள்ளி ராஜா' படத்தில் வெங்கடேஷ் நடித்தார். அவர் அப்படியே ரஜினியை இமிட்டேட் பண்ணி நடித்திருப்பார். சில ஷாட்டுகள் பாம்பு அவர் மேலே இல்லாமல் ஒப்பேற்றி எடுத்திருப்பார்.
ஓவர் காப்பி: ரீரெக்கார்டிங் ரஜினியை காப்பி பண்ணினாலும் ஓவரா பேசுவதாக இருக்கும். பாம்புன்னா பேச்சே வராதே...'கோகர்ணா' அப்படிங்கிற கன்னட ரீக்கில் 'உங்க பாம்பே வேணாம்டா'ன்னு எக்ஸ்பிரஷனே வராத உபேந்திரா வண்ணத்துப் பூச்சியை துரத்திட்டு போய் பாத்ரூம் ஓட்டு மேலே ஏறி உள்ளே விழுந்து தொடையில் நிற்கும் வண்ணத்துப்பூச்சியை தொட்டுன்னு வேற மாதிரி எடுத்திருப்பார்.
அண்ணாமலை ரஜினி: பாம்பு சீன் இனி யார் நடித்தாலும் அண்ணாமலை ரஜினி மாதிரி தான் நடிக்க முடியும். அவ்வளவு அட்டகாசமான சீன்....அந்த 'கடவுளே...கடவுளே..' காமெடி கூட ரஜினியோட ஐடியா தானாம்..கொடுமை என்னன்னா பாம்போட வாயை தைக்கவில்லைன்னு சுரேஷ் கிருஷ்ணாவே சொல்லி இருக்கார்... யோசிச்சு பாருங்க.. இதை வேற நடிகர் வேற மாதிரி எப்படி பண்ண முடியும்?. இவ்வாறு செல்வன் அன்பு தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
விஜய்யின் அடிமடியில் கைவைக்கும் அண்ணாமலை.. தலித் அல்லாத வாக்குகளுக்கு குறி.. புதிய ரூட் எடுக்கிறார்? -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில்












Click it and Unblock the Notifications