Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை மொத்தமாக மாறுதா? 9,205 கோடி ரூபாயில் வரப் போகும் திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை மறுசீரமைப்புக்கு 9,205 கோடி ரூபாய் முதலீடு தேவை என தனியார் கலந்தாலோசனை தெரிவித்துள்ளது. அதேநேரம் திருமழிசையில் காய்கறி சந்தை அமைக்க 138 கோடி ரூபாய் தேவை என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.

சென்னையில் பாரிமுனையில் பேருந்து நிலையம் இருந்த காலத்தில், அதன் அருகில் இருந்த கொத்தவால்சாவடியில் தான் காய்கறி சந்தையும் இருந்தது. ஆனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், சென்னையின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பாரிமுனையில் இருந்து 16 கிமீ தூரம் தள்ளி கோயம்பேட்டில் பேருந்து நிலையமும், கையோடு காய்கறி சந்தையும் அமைக்கப்பட்டன.

அதாவது 1996ல் கோயம்பேடில், 85 ஏக்கர் பரப்பில் காய், கனி, பூ விற்பனைக்கான மொத்த விற்பனை அங்காடி வளாகம் அமைக்கப்பட்டன. இதில், 3,100 கடைகள் உள்ளன. மதுரவாயல் புறவழிச்சாலை அருகே கோயம்பேடு இருந்த காரணத்தால் எளிதாக அனைத்து வாகனங்களும் சென்னை நகருக்குள் வராமல் போகமுடியும் என்ற நிலை உருவானது.

சென்னை கோயம்பேடு கடந்த 27 வருடங்களில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துவிட்டது. ஒரு காலத்தில் புறநகர் பகுதியாக இருந்த கோயம்பேடு இன்று சென்னையின் மையப்பகுதியாக மாறிவிட்டது. சென்னையின் புறநகர் சாலையாக இருந்த தாம்பரம் மதுரவாயல் சாலை கிட்டத்தட்ட நகர்புற சாலையாக மாறிவிட்டது. வடபழனி கிண்டி சாலை, தாங்க முடியாத அளவிற்கு மக்கள் நெருக்கத்தை சந்தித்துவிட்டது.

அதேநேரம் கோயம்பேடு காய்கறி சந்தை மிகப்பெரிய அளவில் மாறிவிட்டது. ஆசியக் கண்டத்தின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாக மாறி உள்ளது. 27 ஏக்கர் பரப்பளவில் மூவாயிரத்திற்கும் கூடுதலான கடைகள் கட்டப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள பகுதிகள் ஊர்தி நிறுத்தம், கிடங்குகள் போன்றவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

கோயம்பேடு சந்தையில் ஐந்தாயிரத்திற்கும் கூடுதலான வணிகர்கள் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை வணிகம் செய்கிறார்கள் சந்தைக்கு வரும் காய்கறி, பழங்கள் ஆகியவற்றை இறக்குதல், கையாளுதல், கடைகள் ஆகியவற்றிலும், உணவு வணிகத்திலும் கிட்டத்தட்ட பத்தாயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு லட்சம் குடும்பங்கள் கோயம்பேடு சந்தையை நம்பி உள்ளன. கோயம்பேடு சந்தை தான் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் உள்ள சென்னைக்கு காய்கறிகளை சப்ளை செய்து வருகிறது. சென்னைக்கு வரும் காய்கறிகள் கோயம்பேடு வந்து அங்கிருந்துதான் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்கின்றன.

இந்த நிலையில் கோயம்பேடு சந்தையில் பல்வேறு வசதிக்குறைவுகள் இருக்கின்றன. கோயம்பேடு சந்தை முழுவதுமே அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் மோசமாக இருக்கிறது. இதனிடையே கோயம்பேடு பேருந்து நிலையம் கிளாம்பாக்கம் போக உள்ளதால் காய்கறி சந்தையை திருமழிசைக்கு மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி கோயம்பேடு சந்தையை பகுதியாகவோ, முழுமையாகவோ திருமழிசைக்கு மாற்றுவதற்கு திட்டம் வகுத்துள்ள சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ), அந்த இடத்தில் மிகப்பெரிய வணிக மையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. அதற்கான சாத்தியக் கூறு அறிக்கையை தயாரித்து வழங்குவதற்காக குஷ்மன் & வேக்ஃபீல்ட் என்ற பன்னாட்டு நிலவணிக நிறுவனத்தை அமர்த்தி உள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தையில் உள்ள 85 ஏக்கர் நிலத்தில், 29.5 ஏக்கர் நிலத்தை பூங்காக்கள், சாலைகள், விளையாட்டுத் திடல்கள் ஆகியவற்றுக்காக ஒதுக்கி விட்டு, மீதமுள்ள நிலத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் வணிக மையம் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் கோயம்பேடு சந்தையில் பன்னாட்டு நிறுவனங்களுக்கான அலுவலக கட்டிடங்கள், சில்லறை வணிக வளாகங்கள் (மால்கள்), பல்வகை பயன்பாட்டுக்கான விளையாட்டு அரங்குகள் ஆகியவற்றுடன் 5 நட்சத்திர விடுதியும் அமைக்கப்படவுள்ளதாக வரைவுத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே குஷ்மன் & வேக்ஃபீல்ட் இது தொடர்பான, முதற்கட்ட சாத்தியக்கூறு அறிக்கையை, சில மாதங்கள் முன் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்துக்கு (சி.எம்.டி.ஏ) அளித்தது.

இதனிடையே தற்போது அளித்துள்ள அறிக்கையில், மறுசீரமைப்பு திட்ட பணிகளுக்கு, 9,205 கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டும் என்று அந்நிறுவனம் சிஎம்டிஏவிடம் தெரிவித்துள்ளது. மேலும் திருமழிசையில் புதிய காய்கறி சந்தைக்கான வளாகம் கட்ட, 138 கோடி ரூபாய் செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே கோயம்பேடில் தற்போதைய நிலவரப்படி, 3,000க்கும் மேற்பட்ட கடைகள், தனியார் பெயரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த கடைகளை அவர்களிடம் இருந்து எப்படி பெறுவது என்பது குறித்தும் சில தகவல்கள் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறதாம். அதன்படி
வழிகாட்டி மதிப்பில், 2.5 மடங்கு தொகை அல்லது சந்தை நிலவரப்படியான மதிப்பில் இழப்பீடு வழங்கலாம் என்றும், பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாம்.

இந்த இறுதி சாத்தியக்கூறு அறிக்கை அடிப்படையில் சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். மேலும் கடை உரிமையாளர்களிடம் இருந்து கடைகளை திரும்பப் பெறுவது சாத்தியமா என்பது குறித்தும், அதில் ஏற்படும் சட்ட சிக்கல்கள் குறித்தும், ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனிடையே கோயம்பேடு சந்தையை திருமழிசைக்கு மாற்றினால், அந்த சென்னைக்கு எந்த வகையிலும் தீர்வாகாது என்ற எதிர்ப்பும் உள்ளது. அண்மையில் பாமக தலைவர் அன்பு மணி இதுபற்றி கூறும் போது, சந்தை திருமழிசைக்கு மாற்றப்பட்டால், இவர்களில் பெரும்பான்மையானவர்கள் வாழ்வாதாரம் இழப்பார்கள்.

கோயம்பேடு சந்தையை திருமழிசைக்கு மாற்றுவது எந்த வகையிலும் சிறந்தத் திட்டம் இல்லை. கோயம்பேடு காய்-கனி சந்தையை மூடி விட்டு, வணிக மையத்தை அமைப்பதற்கான தேவையும், அவசரமும் என்ன? என்பது தெரியவில்லை. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், கோயம்பேடு பகுதி உலகின் முன்னணி நகரங்களில் உள்ள வணிகப் பகுதிகளுக்கு இணையாக அழகாகவும், ஆடம்பரமாகவும் மாறும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், அந்த அழகுக்கும், ஆடம்பரத்திற்கு அடியில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரமும், கண்ணீரும் புதைக்கப்பட்டிருக்கும். ஏதோ சில நிறுவனங்கள் கொழிப்பதற்காக ஏழை மக்களின் பிழைப்பை பறிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

கொரோனா காலத்தின் போது கோயம்பேடு சந்தை தற்காலிகமாக திருமழிசைக்கு மாற்றப்பட்டது. அங்கு அடிப்படை வசதிகள் இல்லாததாலும், போதிய அளவில் வணிகம் நடைபெறாததாலும் தினமும் 2 லட்சம் கிலோ காய்கறிகள் வீணாயின. அதனால், வணிகர்களுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது. திருமழிசையில் இப்போது கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டாலும் கூட, கோயம்பேடு அளவுக்கு வணிகம் நடக்க வாய்ப்பில்லை. சென்னை மாநகரில் உள்ள 70 லட்சம் மக்களுக்கு கோயம்பேட்டில் இருந்து காய்கறிகளை விநியோகிப்பது தான் எளிதானதும், செலவு குறைந்ததும் ஆகும். திருமழிசையில் சந்தை அமைக்கப்பட்டு, அங்கிருந்து சென்னை மாநகருக்கு காய்கறிகள் கொண்டு வரப்பட வேண்டும் என்றால் அதற்கு அதிக செலவு ஆகும்.

கோயம்பேடு சந்தையை மூடுவதற்காக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் கூறியிருக்கும் காரணம் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. கோயம்பேடு சந்தையை பராமரிப்பதற்காக ஆண்டுக்கு ரூ.11.70 கோடி செலவு ஆவதாகவும், அதிலிருந்து ரூ.12 கோடி மட்டுமே வருவாய் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ள சி.எம்.டி.ஏ அதிகாரிகள், ஆண்டுக்கு ரூ.30 லட்சம் மட்டுமே லாபம் கிடைக்கும் இந்த சந்தையை நிர்வகிக்கத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர். இந்த பார்வை மிகவும் தவறானது. கோயம்பேடு சந்தை மூலம் கிடைக்கும் வருமானத்தைப் பார்க்கக் கூடாது; மாறாக, சென்னை மாநகர மக்களுக்கு குறைந்த விலையில் காய்-கனிகள் கிடைக்கவும், ஒரு லட்சம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கவும் கோயம்பேடு சந்தை காரணமாக இருக்கிறது. அதைத் தான் அரசு பார்க்க வேண்டும். கோயம்பேடு சந்தை என்பது அரசைப் பொறுத்தவரை வணிகம் அல்ல... சேவை என்பதை சி.எம்.டி.ஏ உணர வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி இருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+