Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசியல் விஜய்? கடுப்பான ஜெயலலிதா! பழிவாங்கப்பட்ட அதிகாரி! அன்று நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் அரசியலுக்கு வருவார் என்று சொன்னதற்காக சிறைத்துறை அதிகாரி ஒருவரை பணிமாறுதல் செய்துள்ளார் ஜெயலலிதா. 22 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த அந்த சம்பவம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார் சிறைத்துறை முன்னாள் டிஐஜி ராமச்சந்திரன்.

நடிகர் விஜய் பலரும் எதிர்பார்த்ததைப் போலவே தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி உள்ளார்.

An officer who was avenged by Jayalalitha for helping Vijay

ஆனால் 22 ஆண்டுகள் முன்பே இவர் அரசியலுக்கு வருவார் என்று சிறைத்துறை அதிகாரியாக இருந்த ராமச்சந்திரன் கணித்துள்ளார்.

அதற்காக அவர் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம் தண்டனையையும் பெற்றுள்ளார். அன்று என்ன நடந்தது?

"நடிகர் விஜய் மத்தியச் சிறையிலிருந்த கைதிகளுக்குப் பிரியாணி போட்டார் என்பதற்காகப் பணி மாற்றம் செய்யப்பட்டவர். கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது? விஜய் என்ன சொன்னார்? எனப் பல விசயங்கள் குறித்துப் பேசியுள்ளார்.

"ஒரு பிரபல வார இதழில் நான் ஒரு தொடர் எழுதி வந்தேன். பின்னால் அது 'ஜெயில், மதில், திகில்' என்ற பெயரில் புத்தகமாகக் கூட வந்தது. அதில் நான் பல விசயங்கள் பற்றி எழுதி இருந்தேன். அரசியல் தலைவர்கள், சாமியார்கள், குற்றவாளிகள் எனப் பலரது வாழ்க்கை குறித்து அந்தத் தொடரில் நான் எழுதினேன். அதில் ஒரு வாரம் விஜய், சிறைக் கைதிகளுக்குப் பிரியாணி போட்டது குறித்து எழுதி இருந்தேன்.

An officer who was avenged by Jayalalitha for helping Vijay

பொதுவாகக் குடியரசு தினம், சுதந்திர தினம் என்று வருகிறபோது அரசு செலவில் சிறைக் கைதிகளுக்குச் சிறப்புச் சாப்பாடு வழங்குவார்கள். அதேபோல் ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ் ஆகிய பிற மதத்தினரின் பண்டிகை நாள்களில் சிறைக் கைதிகளுக்குப் பிரியாணி போடுவார்கள்.

மத்தியச் சிறைக்குள் கோயில் ஒன்று இருந்தது. அதைப்போலவே மசூதியும் சர்ச்சும் தனித்தனியே இருந்தன. ஆகவே, அந்த மதத்தைச் சேர்ந்த வெளியே உள்ளவர்கள் சிறைக்குள் வந்து பண்டிகை நாள்களில் உணவு வழங்குவது வழக்கம். அப்படித்தான் ஒரு முறை கிறிஸ்துமஸ் பண்டிகைக்குக் கைதிகளுக்குப் பிரியாணி போடச் சிலர் முயற்சி செய்தனர். சிறையில் 2 ஆயிரம் பேர் உள்ளனர். அத்தனைப் பேருக்கும் பிரியாணி போடுவதற்கு மிகப் பெரிய தொகை தேவை.

ஆகவே, பல சர்ச்சுகளிடம் உதவி கேட்டனர். 2 ஆயிரம் பேருக்கு எல்லாம் செலவு செய்வதற்கான நிதி இல்லை என்று மறுத்துவிட்டனர். இதற்காக முயற்சிகள் எடுத்த ஒரு பெண் வழக்கறிஞர் நடிகர் விஜய்யைத் தொடர்பு கொண்டு உதவி கேட்டனர்.

An officer who was avenged by Jayalalitha for helping Vijay

அவரிடம் நன்கொடை தான் கேட்டனர். ஆனால், மொத்த செலவு என்னவோ அதை முழுக்க நானே செய்துவிடுகிறேன் என்று சொல்லி விட்டார். உடனே விஜய் எவ்வளவு தொகை வேண்டும் என்று கேட்டுள்ளார்.

2 ஆயிரம் பேருக்குக் கணக்குப் போட்டு 2 லட்சம் வரை ஆகும் எனச் சொல்லி இருக்கிறார்கள். உடனே அவர், '2 லட்சம் இல்லை. அது 4 லட்சம் வரை ஆனாலும் பரவாயில்லை. உணவை நீங்கள் தரமாகத் தரவேண்டும். அதில் குறைபாடுகள் இருக்கக் கூடாது' என்று சொல்லி இருக்கிறார்.

அந்த என்.ஜி.ஒ. அமைப்பு சார்பாக முறைப்படி அனுமதி கேட்டு கடிதம் பெற்றோம். அவர்கள் கொடுத்த கடிதத்தை அரசுக்கும் அனுப்பி அனுமதி பெற்றோம். சிறைவாசிகளுக்குச் சாப்பாடு போடுவதற்குச் சட்டம் அனுமதிக்கிறது. ஆகவே, அரசு அதிகாரிகளும் அனுமதி வழங்கி விட்டனர்.

An officer who was avenged by Jayalalitha for helping Vijay

சிறைவாசிகள் 2 ஆயிரம் பேருக்கும் மிகத் தரமான பிரியாணியைப் போட்டோம். அவர்களுக்கு மிகமிக மகிழ்ச்சி. அப்படி ஒரு சிறப்பான பிரியாணியை அதுவரை சிறைவாசிகள் சாப்பிட்டதில்லை என்று சொல்லும் அளவுக்கு அந்தச் சாப்பாடு இருந்தது.

இதில் சிறப்பு என்னவென்றால், பொதுவாகப் பிரியாணி என்றால் ஆளுக்கு ஒரு பொட்டலம் என்று தருவார்கள். அப்படி இல்லாமல் அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று அளவு பார்க்காமல் அன் லிமிட்டெட் பிரியாணியைப் போட்டோம்.

இந்தளவுக்கு வயிறு நிறையப் பிரியாணி போட்டதால் சிறை வளாகத்திற்கு அது பெரிய பேசு பொருளாகிவிட்டது. யார் கொடுத்தார்? எவ்வளவு செலவானது? என்று பலரும் கேட்கத் தொடங்கிவிட்டனர். அப்போதுதான் விஜய்தான் பிரியாணி போட்டார் என்பதை நாங்கள் வெளியில் சொன்னோம்.

An officer who was avenged by Jayalalitha for helping Vijay

அதைக் கேட்டதும், விஜய்க்கு நன்றி சொல்ல வேண்டும் என்று எல்லோரும் கோரிக்கை வைத்தனர். ஆகவே, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் விஜய்யிடம் சொல்லி அவரை சிறைக்கு அழைத்து வந்தார். அப்போது ஒரு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி வைத்திருந்தோம். அதில் நான் சிறைத்துறை அதிகாரியாக கலந்து கொண்டு பேசினேன். 'அப்பா பட்ட கடனை இன்று மகன் அடைத்திருக்கிறார்.

எம்.ஜி.ஆரும் இப்படித்தான் நடிக்கும் காலத்திலேயே வெளியே தெரியாமல் நிறைய உதவிகளைச் செய்தார். பிறகு அவர் அரசியலுக்கு வந்தார். அதைப்போலவே விஜய்யும் வெளியே தெரியாமல் நிறைய உதவிகளைச் செய்கிறார். வருங்காலத்தில் இவரும் அரசியலுக்கு வரலாம். அதற்கான தகுதி விஜய்க்கு உள்ளது' என்று பேசிவிட்டேன்.

அப்பா பட்ட கடன் என்ன என்று விளக்குவதற்காக ஒரு பழைய சம்பத்தைச் சொன்னேன்.

An officer who was avenged by Jayalalitha for helping Vijay

'நீதிக்குத் தண்டனை' படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர்தான் எடுத்தார். மு.கருணாநிதி அதற்குக் கதை வசனம் எழுதினார். அந்தக் கதை எழுதுவதற்காகக் கதை விவாதத்திற்காகச் சிறைக்குக் கருணாநிதியும் சந்திரசேகரும் தினம் வருவார்கள். அப்போது நான் தான் ஜெயிலர்.

அன்று விஜய் அப்பா இங்குள்ள அறையில்தான் கதை விவாதம் செய்வார். பொதுவாக சினிமா கதை விவாதம் என்றால் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில்தான் அறை எடுத்துச் செய்வார்கள். அதற்கு லட்சக் கணக்கில் செலவாகும்.

ஆனால், சந்திரசேகர் பத்து பைசா செலவு இல்லாமல் கதை விவாதத்தைச் சிறையில் உள்ள அறையிலேயே செய்து முடித்து படம் எடுத்து விட்டார். அன்று அவர் அப்பா பட்ட கடனை இன்று சிறை கைதிகளுக்குப் பிரியாணி போட்டு மகன் அடைத்துவிட்டார் என்று பிறகு என் பேச்சுக்கு விளக்கம் அளித்தேன்.

An officer who was avenged by Jayalalitha for helping Vijay

நான் சிறை கைதிகளை உற்சாகப்படுத்துவதற்காக அப்படிப் பேசினேன். வந்திருந்த பத்திரிகையாளர்கள் அதை மறுநாள் தனி செய்தியாக முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு விட்டார்கள்.

அதில் என் படமும் என் அருகில் விஜய் உள்ள படமும் வெளியிடப்பட்டிருந்தது. அது ஆளும் கட்சிக்குப் பெரிய எரிச்சலைக் கொடுத்துவிட்டது. உடனே விஜய் எப்படி சிறைக்குள் வந்தார்? யார் அனுமதி அளித்தார்கள்? என்று அன்றைய முதல்வர் ஜெயலலிதா சொல்லி, உடனே விசாரணைக்கு சில அதிகாரிகள் வந்துவிட்டனர். நான் முன்கூட்டியே வழங்கி அனுமதி கடிதத்தைக் காட்டினேன்.

அப்போது, 'எப்படி விஜய்யை எம்.ஜி,ஆருடன் ஒப்பிடலாம். அவரும் இவரும் ஒன்றா?' என்று ஜெயலலிதா அதிகாரிகளிடம் கடுமையாகப் பேசி உள்ளார். அது என் காதுக்கும் வந்தது.

விசாரணையில் அனைத்து சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டே நடந்துள்ளது. விதிமீறல் இல்லை என்பது உறுதியானது.

ஆனாலும், ஜெயலலிதாவின் கோபம் அடங்கவில்லை. மறுநாளே என்னைக் கடலூர் சிறைக்குப் பணி மாறுதல் செய்துவிட்டார்.

கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்னால் நான் விஜய் அரசியலுக்கு வருவார் என்று சொன்னது இன்று உண்மையாகி உள்ளது" என்று பல உண்மைகளை உடைத்துள்ளார் இந்த அதிகாரி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+