பழைய ரூ.10 நோட்டு இருந்தாலே நீங்க லட்சாதிபதிதான்.. இந்த நம்பர் இருக்கா பாருங்க.. சர்ப்ரைஸ் பொக்கிஷம்
சென்னை: பழைய ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் உங்களிடம் இருந்தாலே, லட்சக்கணக்கில் வருமானத்தை அள்ளலாம் என்று ஆன்லைன் விளம்பரங்கள் அடிக்கடி வருவதுண்டு.. பழைய 10 ரூபாய் நோட்டுகள் கூட ஒரே இரவில் உங்கள் வாழ்க்கையை மாற்றும் திறன் கொண்டவை என்கிற தகவல் ஒன்று தற்போதும் சோஷியல் மீடியாவில் பரவி கொண்டிருக்கிறது. இதுகுறித்து இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
எப்போதுமே ஓல்டு இஸ் கோல்டு என்பார்கள்.. அது பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுகளுக்கும் பொருந்தும் உண்மையாகும் சர்வதேச சந்தையில் பழைய மற்றும் அரிதான ரூபாய் நோட்டுக்களுக்கு டிமாண்டுகள் அதிகமாகவே உள்ளன..

ஆன்லைன் விளம்பரங்கள்
காரணம் இந்த நோட்டுகளின் தேவை அதிகரித்துள்ளதால், அவற்றை பல லட்சம் ரூபாய் விலை கொடுத்து வாங்க நிறைய பேர் தயாராக உள்ளனர்.. ஆனால், அனைத்து ரூபாய் நோட்டுக்களுக்குமே இது பொருந்தாது..
குறிப்பிட்ட அம்சங்கள் அந்த ரூபாய் நோட்டில் இருக்க வேண்டும். சில குறிப்பிட்ட வரிசை எண்கள் மற்றும் சின்னங்கள் கொண்ட பழைய நோட்டுகளே ஆன்லைனில் அதிக விலையில் வாங்கப்படுகின்றன.
100 ரூபாய், ரூ.1, 5, 10, 20, 50 ரூபாய் என எந்த நோட்டுகள் இருந்தாலும், அதற்கும் ஆன்லைனில் நல்ல கிராக்கி உள்ளதாக சொல்கிறார்கள். இவைகளை விற்பதற்கென்ற நிறைய வெப்சைட்கள் உள்ளன.. குறிப்பாக, OLX போன்றே, Quikr, India Mart, E-bay போன்ற வெப்சைட்டிலும் விற்கலாம். இதில், E-bay வெப்சைட் பழைய நோட்டுகள் அல்லது நாணயங்களை விற்பனை செய்வதற்கானது.
பழைய 10 ரூபாய் நோட்டு
இந்நிலையில், சாதாரணமாக உள்ள 10 ரூபாய் நோட்டும், சில நேரங்களில் 4 லட்சம் ரூபாய்க்கு, 3 நோட்டுகள் சேர்த்து 15 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்பட வாய்ப்புள்ளதாக ஆன்லைனில் மீண்டும் விளம்பரங்கள் பரவி வருகின்றன..
இந்த நோட்டுகளும் அடையாளம் காண பல முக்கிய அம்சங்கள் இருக்க வேண்டும். முதலில், நோட்டில் 786 என்ற வரிசை எண் அச்சிடப்பட்டிருப்பது அவசியம். அத்துடன் நோட்டில் மகாத்மா காந்தி போட்டோ, அசோக சக்கரம், ஸ்வச் பாரத் லோகோ ஆகியவை இருக்க வேண்டும்.
10 என்ற எண்ணும், ஏறு வரிசை எண் பேனல் மற்றும் பல மொழிகளில் அச்சிடப்பட்டிருக்கும். பின்புறத்தில் நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கோனார்க் சூரிய கோயிலின் படமும் இருக்க வேண்டும். நோட்டின் நிறம் சாக்லேட் பிரவுன் கலரில், பல ஜியோமெட்ரிக் வடிவமைப்புகள் கொண்டதாக இருக்க வேண்டும்.
பொக்கிஷம் - லட்சாதிபதி
இந்த நோட்டு ஒன்று 4 லட்சம் ரூபாய்க்கும், 3 நோட்டுகள் 15 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட வாய்ப்பிருக்கிறது... எனவே இந்த வகை நோட்டுகளை வைத்திருப்போர் ஆன்லைனில் விற்க வேண்டுமானால், Quikr போன்ற ஆன்லைன் சந்தையில் விற்பனையாளராக பதிவு செய்ய வேண்டும். பிறகு, நோட்டின் தெளிவான போட்டோவை அப்லோடு செய்ய வேண்டும்.
இந்த போட்டோவை பார்த்து ரூபாய் நோட்டு தேவைப்படும் கஸ்டமர்கள், அதிலுள்ள போன் நம்பரில் தொடர்பு கொண்டு விற்பனை விவரங்களை பேசுவார்கள்.
கவனம் - உஷார் மக்களே
சில நேரங்களில், சாதாரணமாக இருக்கும் 10 ரூபாய் நோட்டும், சில குறிப்பிட்ட அம்சங்கள் இருந்தால், அது உங்களுக்கு பொக்கிஷமாகிவிடும்.. உங்களை லட்சாதிபதியாக்கிவிடும்.. எனினும் சரியான தகவலை பின்பற்ற விற்பனை செய்ய வேண்டும்.
பலரும் இதுபோன்ற பழைய ரூபாய் மற்றும் நாணயங்களை மாற்றி லட்சக்கணக்கில் வருமானம் பெற்றிருக்கிறார்கள். என்றாலும், மோசடி அல்லது முன்பணம் செலுத்தும் பேச்சுகளில் விழுந்துவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். காரணம், ஆர்பிஐ அனுமதி இல்லாமல் எந்த நிறுவனத்திற்கும் விற்பனை செய்யப்பட முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications